நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 11, 2021

சந்திர தரிசனம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின் அமாவாசை..

திருவள்ளுவப் பெருமான் குறித்தருளும்
தென் புலத்தாருக்கான
வழிபாட்டுக்குரிய நாள்..


இந்நாளில் தான்
அடியவரின் பொருட்டு
திருக்கடவூரில்
அற்புதம் ஒன்றினை
நிகழ்த்தியருளினாள்
அம்பிகை..


முழு நிலவின் ஒளி
உலகிற்கு அழகூட்டுகின்றது..

முழு நிலவினைக்  கண்ட மனம்
துயர்களின்று நீங்கி
அமைதியடைகின்றது..

அமைதியையும் ஆனந்தத்தையும்
அருளுகின்ற முழு நிலவாக
அபிராமவல்லி பிரகாசிக்கின்றாள்..

அவளது திருவடிகளில்
தலை வைத்து வணங்கி
அமைதியையும் ஆனந்தத்தையும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
வேண்டிக் கொள்வோம்..


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத இளமையும் குன்றாத வளமையும் கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் 

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி
அபிராமியே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடையில்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் வந்து என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!..
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

9 கருத்துகள்:

 1. ஓ...   இந்து திருக்கடவூரில் அற்புதம் நிகழ்ந்த நாள்.    அபிராமியே..   காத்தருள்வாய் அகிலத்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   அபிராமவல்லியின் அருளால் அனைத்தும் நலமாகட்டும்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  நல்ல பக்திப் பகிர்வு. அழகான படங்கள்.அருமையான பாடல். இந்த தை அமாவாசைதான் அகிலம் காக்கும் அபிராமவல்லி, அபிராமிபட்டரையும் காத்தருளினாள் என்ற விபரங்கள் தெரிந்து கொண்டேன். அன்னையை நமஸ்கரித்து கொண்டேன். உலக மக்கள் அனைவரின் நலம் காக்கவும், அன்னை ஜெகஜோதியாய் என்றும் எழுந்தருள அன்னையை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. இன்று வரும் வாட்சப் செய்திகளுமே அபிராமி அந்தாதியைத் தாங்கி வருகின்றன. முகநூலிலும் அப்படியே இருக்குமோ என்னமோ! உங்கள் பதிவும் அதற்கேற்ற பொருத்தமான படங்களும் அழகு/அருமை. நினைவூட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அன்னை அபிராமியின் தரிசனம் அருமை. படங்கள். பாடல் பகிர்வு எல்லாம் அருமை.
  இன்றைய நாளில் நவரத்தின அங்கி அணிந்து காட்சி தந்ததை பார்த்த நினைவும் அதை பதிவாக்கிய போது சார் வரைந்த ஓவியமும் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான தரிசனம். அன்னை அபிராமி அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..