நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 02, 2019

குருவாய் வருவாய்..

தீபாவளியைத் தொடர்ந்து
சூர சம்ஹாரப் பெருவிழா தமிழகத்தின் திருக்கோயில்கள்
பலவற்றிலும் சிறப்புடன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது...

மாமன் அன்று நரகாசுர வதம் நிகழ்த்தினான்...
அவனது அன்பு மருமகன் இன்று பத்மாசுரனை வதைக்கின்றான்...

இன்று நிறைவான கந்தசஷ்டி..

ஆணவம் மாயா கன்மம் எனும் மும்மலங்களும்
வீழ்த்தப்படுவதே சூர சங்காரத்தின் தத்துவம்...

மும்மலங்களாகிய காரிருளை
ஞானம் எனும் பேரொளியாகிய வேல் கொண்டு வீழ்த்தினான் திருக்குமரன்...
சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் பகை முடித்தான்!.. - என்பர் ஆன்றோர்...

வெற்றி வேல்!.. வீர வேல்!.. -
என்பது மெய்த் தமிழருடைய வீரமுழக்கம்...

நம்மைச் சூழ்ந்திருக்கும் மாயைகளை
முருகனின் வேல் கொண்டு - அவனது பேர் கொண்டு வீழ்த்துவோம்...

அது அவ்வளவு எளிதாக ஆகாது என்பதால்
சூர சங்காரம் செய்திட்ட சுப்ரமண்யப் பெருமானைச் சரணடைந்து

எம்முள் ஞானம் எனும் பேரொளி பெருகிட அருள்வாய் முருகா!..
என்று வேண்டிக் கொள்வோம்...

இன்றைய பதிவில்
திருக்கோயில்கள் பலவற்றிலும் நிகழ்ந்த
கந்த சஷ்டித் திருவிழாவின் சில காட்சிகள்...

நிகழ்வுகளை வலைப்படுத்திய
சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

திருப்பரங்குன்றம்  
திருப்பரங்குன்றம் 
திருப்பரங்குன்றம் 
சுவாமிமலை  
சுவாமிமலை  
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசரிரு
தாளும் சிலம்புஞ் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே... 
-: கந்தரலங்காரம் :-

குமரகோட்டம் - காஞ்சி 
மஞ்சக்கொல்லை - நாகை 
குமார வயலூர் 
குமார வயலூர் 
ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம்உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந்துழாய் மயிலேறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியுங் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே..
-: கந்தரலங்காரம் :-

ஸ்ரீ செல்வமுத்துக்குமரன்
வைத்தீஸ்வரன் கோயில் 
ஸ்ரீ சிங்கார வேலவன்
சிக்கல் 
சிக்கல் 
சிக்கல் 
சிக்கல் திருத்தேர் 
சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவனின் சந்நிதியில் தீப ஆராதனை...


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங் கண் படைத்திலனே அந்த நான்முகனே..
-: கந்தரலங்காரம் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு அரோஹரா!...
ஃஃஃ 

25 கருத்துகள்:

 1. நாளை இங்கே மீனாக்ஷி கோயிலுக்குப் போவதாக இருந்தது. சென்ற முறை வந்தப்போ எந்தக் கோயிலும் போக முடியவில்லை. இந்த முறை இங்கே வந்து 2 மாசம் ஆகியும் இன்னமும் கோயில் எதுக்கும் போக முடியலை! நாளையும் போக முடியாது! இங்கே மாப்பிள்ளைக்கு நாளைக்கும் வேலைக்குப் போயாகணும்! இங்கிருந்து தூர இருப்பதால் பெண்ணால் தனியாக அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வர இயலாது. பார்ப்போம். அவள் அருள் இருந்தால் கிடைக்கும். இம்முறை யாருமே அழைக்கவில்லை. :((((( ஒவ்வொரு முறை வரச்சேயும் வாரா வாரம் ஏதேனும் ஒரு கோயிலுக்குப் போயிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா அவர்களுக்கு நல்வரவு....

   இறை தலலங்களுக்குச் செல்ல முடியவில்லையே.. என்ற் ஆதங்கம்..

   எல்லாம் அவனறியாததா....

   எங்கெங்கு காணினும் சக்தியடா!.. -
   என்றார் பாவேந்தர்....

   கந்தனும் வருவான்..
   காட்சியும் தருவான்..
   கவலைகள் ஏன் மனமே!...

   நீக்கு
  2. இப்போதான் போனமாதிரி இருந்தது.  ரெண்டு மாசம் ஆச்சா?

   நீக்கு
 2. வழக்கமான புலம்பலைப் புலம்பிட்டேன். இங்கே தரிசனம் தரும் அனைத்துக் கோயிலின் முருகனும் அழகோ அழகு! சிக்கல் போயிருக்கேன். திருப்பரங்குன்றம்,வைத்தீஸ்வரன் கோயில் , காஞ்சி குமரக்கோட்டம் எல்லாமும் போயிருக்கேன். குமார வயலூர் என்பது திருச்சியில் இருப்பதா? வாரியார் ஸ்வாமிகளின் வயலூர் என்பார்கள் அதை! இந்தக் குமார வயலூர் வேறேயோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் தான்..

   இதனை குமார வயலூர் என்பது சிறப்பு...

   அருணகிரியார் திருப்புகழ் பாடத் தொடங்கியது இங்கே தான்...

   வாரியார் ஸ்வாமிகள் ஆட்கொள்ளப்பட்டதும் இங்கே தான்...

   வாரியார் ஸ்வாமிகளின் காலத்திலேயே
   இக்கோயிலின் ராஜகோபுரத்தில் அவருக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது...

   நீக்கு
  2. நேற்று வாரியார் விருந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.  எத்தனை வகையான கேள்விகள்...   அதில் 'தங்களுக்கு வருமான வரி பாக்கி இருக்கிறதா', 'காதலிப்பது தவறா' என்றெல்லாம் கேட்கப்பட்டு, அதற்கு வாரியார் ஸ்வாமிகளும் பதில் சொல்லி இருக்கிறார்!

   நீக்கு
  3. ஆமாம்...
   அப்போது குமுதம் வார இதழுடன் வாரியார் ஸ்வாமிகளின் அருளுரைகளுடன் கூடிய சின்னஞ்சிறு இணைப்பு ஒன்றினையும் வழங்குவார்கள்....

   நீக்கு
  4. வயல்கள் சூழ உள்ள அருமையான திருத்தலம் இந்த வயலூர் ....

   நீக்கு
  5. ஆம்.. செய்ப்பதி - வயல்கள் சூழ்ந்த ஊர் என்றே அருணகிரி நாதர் புகழ்கின்றார்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மஞ்சக்கொல்லை போனதில்லை. ஸ்வாமிமலை எல்லாம் பல முறை போயிருக்கோம். அழகான அலங்காரங்கள். பார்க்கவே மனதும்,கண்ணும் நிறைந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் சென்றதில்லை...
   நாகப்பட்டினத்துக்கு அருகில் இருப்பதாகத் தெரிகிறது....

   பார்ப்போம்...
   எப்போது அங்கெல்லாம் செல்ல முடிகின்றது என்று....

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. மஞ்சக்கொல்லை தவிர பிற இடங்களுக்குச் சென்றுள்ளோம். அருமையான நாளில் எங்களை அனைத்துத் தலங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. காலையில் தரிசனம் நன்று
  வாழ்க வளமுடன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. பத்து நாட்களாக முருகன் கோவிலில் கொடுத்திருந்த நாட்கள் ஏதோ காரணங்களால் ஒத்திப் போட்டுக்கொண்டே வரப்பட்டு, இன்று தேதி கொடுத்திருக்கிறார்கள்.  அந்த உபயத்துக்கான நாள் இன்று   அமைந்திருக்கிறது.   பாஸ், இதோ, கிளம்பிக்கொண்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய விசேஷம் தானே..

   வாழ்க நலமெல்லாம்...

   வெற்றிவேல்.. வீரவேல்...

   நீக்கு
 7. முருகன் தரிசனம் கிடைத்தது.  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அழகான அருமையான தரிசனம் கிடைத்தது... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. வேல் வேல்!
  சக்தி வேல் வேல்!
  வெற்றி வேல் வேல்!
  ஞான வேல் வேல்!

  நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி,
  ஆறுமுகப்பெருமானை போற்றி வணங்கி மகிழ்வோம்.

  பதிலளிநீக்கு
 10. வெட வெட்ட துள்ர் விடும்செடிகள்போல வெட்ட வெட்ட பல சூர பதுமர்கள்துளிர் விட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 11. சிறப்பான பகிர்வு.
  இருந்த இடத்திலிருந்து முருகன் தலங்களை கண்டு தரிசனம் செய்து விட்டேன்.
  சிக்கல் கோவில் அலங்கார பூஜை கண்டு களித்தேன்.
  நன்றி.

  இன்று பழமுதிர்சோலை சென்று தரிசனம் செய்து வந்தோம் முருகனை.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம். முருகன் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..