நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 10, 2019

செப்பறை தரிசனம் 1

தில்லைத் திருச்சிற்றம்பலத்திலும் மற்றும் பல சிவாலயங்களிலும்
ஆனித் திருமஞ்சனப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்..

அந்த வகையில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள
செப்பறை சிவாலயத்திலும் பத்து நாள் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

செப்பறை திருக்கோயிலைப் பற்றி நாம் அறிவோம்...

அன்பின் சகோதரி ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்
செப்பறை திருக்கோயிலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்..

தஞ்சையம்பதியிலும் இரண்டு பதிவுகள் வெளியாகி இருக்கின்றன...

உத்திர நட்சத்திரத்தை அனுசரித்து
செப்பறை திருக்கோயிலில் நடைபெற்ற
திருமஞ்சன தரிசனமும் திருத்தேர் தரிசனமும் இன்றைய பதிவில்..

வழக்கம் போல திருக்கோயிலின் சார்பில்
அழகிய படங்களை FB ல் வழங்கியிருக்கின்றனர்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...













அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. (6/1)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. படங்களை ரசித்தேன்...ஆனா பாருங்க துரை செல்வராஜு சார்.. எனக்கு அந்தக் கோவிலின் பட்டாச்சார்யார்கள் கிட்ட இருந்து நிறைய படங்கள் வந்திருக்கு. அவர்களும் என்னை எழுதச் சொல்லி அனுமதித்திருக்கிறார்கள்.

    அதனை உங்கள் தஞ்சையம்பதிக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    அதுக்குள்ள 'செப்பறை' படங்கள் வெளியிட்டுட்டீங்களே..ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகையும் மேல் விவரங்களும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நான் இராஜவல்லிபுரத்தில் செப்பறை தரிசனம் செய்ததை, நெல்லை பயணக் குறிப்புகளாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படங்கள் கண் கொள்ளாக்காட்சி தரிசித்தோம் ஜி. வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. செப்பறை போய் வந்த நினைவுகள் வந்து போகிறது.
    ஆனி திருமஞ்சனத்திற்கு ஒரு தடவை போய் வந்தோம்.
    மிகவும் அழகான ஆடல் வல்லான்.
    அருமையான தரிசனம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நான் இன்னும் அங்கு சென்றதில்லை..

      ஐயன் அருள் புரிய வேணும்..
      மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகான படங்கள்.திரு நெ.த. அவர்கள் நான் அதிகப் படம் எடுக்கலை என்பதால் அநேகமாய் வாரம் ஒரு முறை செப்பறைப்படங்களை எனக்கு அனுப்பிட்டு இருக்கார். :)))) விரைவில் அவருடைய அனுபவங்களையும் பார்க்கலாம்/படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்கள் சொல்வதைப் போல் -
      நெல்லை அவர்களின் நெல்லையின் தரிசன
      அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்..

      நீக்கு
  7. ஆனந்தக்கூத்தனின் அழகிய படங்கள் நேரில் பார்ப்பதைப் போலவே இருக்கின்றன.

    நெல்லைத் தமிழரே, சிவன் கோயில்களில் பட்டாசாரியார்கள் அல்ல. குருக்கள் அல்லது பட்டர்(மதுரையில் மட்டும் எனக்குத் தெரிந்து. ஆனால் அவர்களும் சிவாகமம் படித்தவர்களே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. அதானே... நானும் நினைத்தேன்.

      நீக்கு
    2. ஆமாம். சரிதான். நான் 'மரியாதை' என்று நினைத்து பட்டாச்சார்யார் என்று எழுதிவிட்டேன்.

      செப்பறை கோவிலில் இருக்கும் இரு பட்டர்கள், ராஜாமணி பட்டர், விசுவநாத பட்டர் ஆகிய இருவர்.

      நீக்கு
    3. சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்...

      மேல் விவரங்கள் அருமை.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படங்கள் மூலம் ஆனந்த நடராஜரை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. செப்பறை என்பதைப் பார்த்ததும் இங்கும் அப்புறம் கீதாக்கா சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது.

    அழகான படங்கள் நல்ல தரிசனம்.

    சிஞ்சா போடும் அந்தக் குட்டிப்பையன் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..