நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 20, 2019

சிட்டுக்குருவி வாழ்க..



சிட்டுச் சிட்டுக் குருவி..
செல்லச் சிட்டுக் குருவி..
சேதி பல எங்களுக்குச் 
சொல்லித் தரும் குருவி!..

எப்போதும் எங்களுடன் இருந்தனை நீயும்..
சொல்லாமல் போனதுவும் என்ன ஒரு நியாயம்?...

உனக்கொரு பங்கு.. எனக்கொரு பங்கு.. 
ஆடிப்பாடி உங்களுடன் இருந்தது அந்த நாள்..
நாகரிக வாழ்க்கையில் மாறியது இந்த நாள்...
கூரை வீட்டுத் தாழ்வாரம் எங்கள் கூடு ஆனது..
கும்மாளம் கொண்டாட்டம் நாட்கள் பல சென்றது..

மாறி வந்த காலத்தினில் எத்தனையோ மாற்றம்..
மனிதா.. உன் வாழ்க்கையில் ஏணி போல ஏற்றம்..
ஆனாலும் சிற்றுயிர்கள் வாழ வழி காணோம்..
கூடழிந்து துணையழிந்து வாழ்விழந்து போனோம்..



அங்கொன்றும் இங்கொன்றும் மாற்றங்கள் வந்தன..
நல்லோர்தம் எண்ணங்கள் எம்பக்கம் நின்றன..
சின்னச் சின்ன வகையாய் வாழ்வதற்கு வழிகள்..
ஆனாலும் தீர்ந்திடுமோ மனிதனின் பிழைகள்..



உமக்கொரு உரிமை இருப்பதைப் போல
எமக்கொரு இனிமை இப் பூமியிலே
வெல்வது யாரெனப் போட்டிகள் வேண்டாம்..
இயற்கையை வென்றிட நினைத்திடல் வேண்டாம்...

நாங்களும் களத்தில் இருக்கிறோம்..
புல்லும் பூண்டும் பறவையும் மிருகமும்
மனிதா நீயும் இணைந்து இருந்தால் உலகம்...
இதில் ஒன்று ஒழிந்திட மற்றது வாழ்ந்திட
நினைத்தால் இங்கு மூண்டு விடுமே கலகம்..

உங்களுடன் ஒருவராக நாங்களும் இருந்தோம்..
இன்று வீடற்று கூடற்று கவலையில் ஆழ்ந்தோம்!..
எங்கள் மேல் இனியேனும் இரக்கம் கொள்வாய்..
எளியோமும் வாழ்வதற்கு வழிவகைகள் செய்வாய்..


சிற்றுயிர் அனைத்தையும் வாழ வைப்பாய்..
வரும் சந்ததி தனையே காத்து நிற்பாய்!..
அன்பெனும் கொடியினை ஏற்றி வைப்பாய்...
அருள் எனும் விளக்கினைக் காத்து நிற்பாய்!...

சிட்டுக் குருவிகள் வாழ்க...
பல்லுயிர் பெருகிப் பூமியும் வாழ்க!... 
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. காலை வணக்கம் துரை அண்ணா.

    சிட்டுக் குருவிகளின் படங்கள் மிக அழகாக இருக்கின்றன...

    இங்கு பங்களூரில் இதுவரை நான் சிட்டுக் குருவிகளைப்பார்க்கவே இல்லை..

    அவர்களுக்கும் இப்பூமியில் வாழ உருமை உண்டுதானே!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    படங்கள் மிகவும் அழகு

    அவர்களும் வாழப்பிறந்தவர்களே...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. குட்மார்னிங். இன்று சிட்டுக்குருவிகள் தினமா? அதற்கொரு தினத்தை வைத்தான் மனிதன். ஆனால் அது அதன் போக்கில் நிம்மதியாய் வாழ மனத்தை வைக்கவில்லையே!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கவிவரிகளை ரசித்தேன்.

    உடன் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் கேடு விளைவித்து தனது வசதிகளை பெருக்கிக்கொள்ளும் மனிதன் பின்னொருநாளில் இறைக்கையோடு ஒன்றாத தனிவாழ்வு வாழப்போகிறான்.

    பதிலளிநீக்கு
  6. பலப்பல சிட்டுக்குருவிப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. இங்கு ஒன்றே ஒன்று மட்டும்..

    ஆரம்பகாலங்களில் மனிதர்களின் துன்பம் கேட்டு ஆறுதல் சொல்லும் இடத்தில இருந்தன போலும் அவை...

    "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? எனை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல....!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மிகவும் பிடித்த பாடல் -

      சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு!.

      சுசிலா அம்மா அவர்களுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த பாடல்..

      நீக்கு
    2. எனக்கும் பிடித்த பாடல் 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு'. ஆனாலும் நினைவுக்கு வந்தது 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே' பாடல்தான்

      நீக்கு
  7. இன்று தலைநகரில் சிட்டுக்குருவிகள் தினத்திற்காக ஒரு நிகழ்வு என நேற்று தெரிந்தது. செல்லலாம் என்றால் அலுவலகம் உண்டு :(

    சிட்டுக்குருவிகள் - இப்படி பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக அழிந்து வருவது வேதனை.

    பதிலளிநீக்கு
  8. சிட்டுக்குருவி தினத்தில் குருவி படங்களும், கவிதையும் மிக அருமை.சிட்டுக்குருவிகள் வாழ்க! பல்லாண்டு வாழ்க!

    பதிலளிநீக்கு
  9. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு அய்யா...

    பதிலளிநீக்கு
  10. மறக்க முடியுமா இந்நாளை...? அருமையான பகிர்வு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. படங்களுடன் கூடிய உங்கள் வரிகளும் அருமை அண்ணா...இப்படியான உலகம் ஒன்றைத்தானே நாம் எல்லோருமே விரும்புகிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. எந்த புதிய கண்டுபிடிப்பும் அல்லது இயற்கையைச் சிதைக்கும் நிகழ்வும், பெரிய பெரிய மாற்றங்களை உருவாக்கிவிடும். ஏசி, பிரிட்ஜ் வந்து வெப்பநிலை அதிகமாச்சு, நம் உடம்பு சாதாரண வெப்பநிலையைக்கூட தாங்கமுடியாமல் ஆகிவிட்டது. இதுபோல பல நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  13. படங்களும் அதற்கான உங்கள் வரிகளும் மிக மிக அருமை ஐயா.

    செல்ஃபோன் டவரினால் சிட்டுக் குருவிகள் அழிவதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக எங்கேயோ வாசித்த நினைவு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. செல்ஃபோன் கோபுரத்தினால் சிட்டுக்குருவி இனம் மட்டும் அழியுமா? மற்றப் பறவைகளுக்குப் பாதிப்பு இருக்காதா? செல்ஃபோன் கோபுரத்துக்கும் சிட்டுக்குருவி அழிவுக்கும் காரணம் இல்லை என்றே நினைக்கிறேன். இது குறித்து முன்னரும் எழுதினேன். சிட்டுக்குருவிகள் வேட்டையாடப் படுவதாகச் சொல்கின்றனர். இங்கே விராலிமலையில் சுமார் பத்தாண்டுகள் முன்னர் வரை மயில்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும். இப்போ ஒரு மயிலைக் கண்ணால் பார்க்க முடியலை! :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..