நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 26, 2018

ஆடல் காணீரோ..

ஒவ்வொரு வருடமும்
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தப்பெறும் அபிஷேகங்கள் ஆறு...

மார்கழித் திருஆதிரை, சித்திரைத் திருஓணம், ஆனி உத்திரம்
- ஆகிய நட்சத்திர நாட்களில் மூன்று அபிஷேகங்கள்..

ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களின்
வளர்பிறைச் சதுர்த்தசி நாட்களில் மூன்று அபிஷேகங்கள்..

ஆக, ஆறு அபிஷேகங்கள்...

அந்த வகையில்
கடந்த புரட்டாசி சதுர்த்தசி நாளன்று சகல சிவாலயங்களிலும்
ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் சிவகாமவல்லி அம்பிகைக்கும்
அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்துள்ளன...

அந்த கோலாகல திருக்காட்சிகள் - இன்றைய பதிவில்...

அத்துடன், கடந்த சனிப் பிரதோஷத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில் நிகழ்ந்த திருக்காட்சிகளும் இடம் பெறுகின்றன..

திருக்கோயில்களில் நிகழ்வுற்ற
வைபவங்களின் படங்களை வழங்கியோர்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்...

அவர்தமக்கு மனமார்ந்த நன்றி...

தஞ்சை பெரிய கோயிலில்
பிரதோஷ நாளின் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீ பிரஹதீஸ்வர ஸ்வாமி 
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் மறக்கேன்
மின்நெடும் புருவத்து இளமயில் அனையார் விலங்கல்செய் நாடகசாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை ராசராசேச்சரத்து இவர்க்கே...(9/16/8)
-: கருவூரார் :-

ஸ்ரீ பெரியநாயகி அம்மன் 
ஸ்ரீ வராஹி அம்மன் 
ஸ்ரீ சிவ ஷண்முக மூர்த்தி 
முத்தங்கி தரிசனம்
புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன்
அருள்தரும் ஆடல் வல்லானின் 
அலங்காரம்

திருத்தலங்கள் தோறும் திகழ்கின்ற
சிவாலயங்களில் விளங்கும் நடராஜ சபை அனைத்தும்
திருச்சிற்றம்பலம் என்றே புகழப்படும்..

திருத்தலங்கள் தோறும் தரிசித்து வணங்கிய
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்
தில்லைச் சிற்றம்பலத்தினைத் தரிசித்த வேளையில்
அருளிச் செய்த திருப்பாடல்களைப் பொதுவாகக் கொண்டு
பல்வேறு திருத்தலங்களில் திகழும்
நடராஜ சபைகளைப் போற்றி
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றேன்..

அருள்திரு அண்ணாமலை நாதன் 
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே 
துஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி ஆடுமாறே.. (4/22/1)

ஸ்ரீ உண்ணாமுலையாள்
திருஅண்ணாமலை
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டெரி ஆடுமாறே.. (4/22/2)

ஸ்ரீ கயிலாயநாதன்
ஐயன்பேட்டை - காஞ்சிபுரம்.
ஸ்ரீசிவகாமசுந்தரி
ஐயன்பேட்டை -  காஞ்சிபுரம்.
பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாகம் ஆகிச்
செய்யெரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம் பலத்தே
கையெரி வீசி நின்று கனலெரி ஆடுமாறே.. (4/22/4)

ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர்
திருச்சோற்றுத்துறை - தஞ்சாவூர்.
ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர்
திருச்சோற்றுத்துறை - தஞ்சாவூர்.
 
ஸ்ரீ செம்பொற்சோதியான்
திருஐயாறு - தஞ்சாவூர்.
 
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.. (4/23/1)

ஸ்ரீ அக்னியேஸ்வரர்
திருக்கஞ்சனூர் - தஞ்சாவூர் (Dt).
ஸ்ரீ அபிமுகேசர் - திருக்குடந்தை
கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளிபங்கா
ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடையசோதீ
திருத்தமாந் தில்லைதன்னுள் திகழ்ந்தசிற் றம்பலத்தே
நிருத்தம் நான் காணவேண்டி நேர்பட வந்தவாறே.. (4/23/2)

ஸ்ரீ நாகேஸ்வரர் - திருக்குடந்தை 
ஸ்ரீ கோனேரிராஜபுரம் - தஞ்சை (Dt) 
கண்டவா திரிந்துநாளுங் கருத்தினால் நின்றன்பாதம்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன்குறிப் பினாலே
வண்டுபண் பாடுஞ்சோலை மல்குசிற் றம்பலத்தே
எண்டிசை யோரும்ஏத்த இறைவநீ ஆடுமாறே.. (4/23/5)

திருக்குற்றாலநாதன் - குற்றாலம் - நெல்லை.
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய
ஐயநீஅருளிச் செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி
வையகந் தன்னில் மிக்கமல்கு சிற்றம்பலத்தே
பையநின் ஆடல் காண்பான் பரமநான் வந்தவாறே.. (4/23/7)
-: திருநாவுக்கரசர் :-
* * *
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

35 கருத்துகள்:

  1. காலை தரிசனம் நன்று
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு....

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தலைப்பே, மனதில் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பாடலை ஒலிக்கச் செய்கிறது. (ஆடல் காணீரோ.. விளையாடல் காணீரோ). நல்ல தலைப்பை பெரும்பாலும் நீங்க கொடுக்கறீங்க.

    நடராஜ மூர்த்தங்களைத் தரிசனம் செய்துகொண்டேன். என்ன மாதிரியான பாரம்பர்யம் இந்த தேசத்தில், அதிலும் தமிழகத்தில். இதில்தான் தமிழன் மிகச் சிறந்து விளங்கினான். அவன் மொழி, பக்தி, நாகரீகம்.... எவ்வளவு பழைமையானது.

    இடுகையைப் படிக்க பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ. த..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      அதுவரையிலும் உள்கூடாக இருந்த உலோகத் திருமேனிகளை
      அழுத்தம் திருத்தமாக கனமுடன் செய்வித்தவன் -

      மாமன்னன் ராஜராஜ சோழன்...

      ஆனால், அதற்கு முன்பே ஈடு இணையற்ற வார்ப்புருவாக அமைந்தது -

      கோனேரிராஜபுரம் நடராஜர்..

      அச்சிலை தானே சுயம்புவாக எழுந்தது என்றும் ஐதீகம்....

      கீழே சொல்கிறார் -
      ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்... கோனேரிராஜபுரம் நடராஜரைப் பற்றி...

      அந்தக் கோயிலை எழுப்பியவர்
      ராஜராஜனின் பெரிய பாட்டனாராகிய கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மாதேவி...

      நீக்கு
    2. அன்பின் நெ. த.

      இதற்கு முந்தைய பதிவினையும் வாசித்து கருத்திடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. கோனேரிராஜபுரம் நடராஜரைப் பார்க்கையில் மெய் சிலிர்க்கும். திருவையாறிலும் பார்த்திருக்கேன். திருக்குற்றாலத்திலும் பார்த்திருக்கேன். கஞ்சனூர் போனோம். ஆனால் நடராஜரைப் பார்த்தேனா என்பது நினைவில் இல்லை! :) அருமையான தரிசனங்கள்! மிக்க நன்றி. இந்த நடராஜர் சிலையின் அழகைப் போல் வேறு எந்தச் சிலையிலும் பார்க்க முடியாது! அதிகம் களவாடப்பட்டதும் நடராஜர் சிலைகளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      மிகச் சிறு வயதில்
      கோனேரிராஜபுரம் சென்ற நினைவு..

      கருவிலி, திருவீழிமிழலை இவை எல்லாம் அருகில் உள்ள தலங்கள்..

      நடராஜர் திருமேனி கலைப் பொக்கிஷம்...

      அதனால் தான் பலவாறாகப் பறி கொடுத்தோம்...

      நீக்கு
    2. சில வருடங்கள் முன்னர் கூடப்பார்த்தோம். நடராஜரின் கன்னத்து மருவும், கைநகங்களும் உண்மையான ஆள் நிற்பது போலத் தான் இருக்கும். இன்னும் உத்தரகோசமங்கை நடராஜரைக் காணக் கொடுத்து வைக்கலை! கருவிலி தான் அடிக்கடி போறோமே! திருவீழிமிழலைக்கோயில் கோபுரம் கருவிலியில் இருந்து பார்த்தாலே தெரியும். அங்கேயும் போயிருக்கோம். படிக்காசு பெற்று மக்கள் பசிப்பிணி தீர்த்த தலம். அந்த இடத்தையும் பார்த்திருக்கோம்.

      நீக்கு
    3. கீசா மேடம்... எனக்கு மாயவரத்தில் வீடெடுத்துத் தங்கி, சில வருடங்கள் இருந்து (என் விருப்பம் கடைசி வரையில்), சுற்றி எல்லாத் தலங்களுக்கும் சென்றுவரவேண்டும் (flying visit இல்லை. ஆர அமர, தலங்களைப் புரிந்துகொண்டு... உதாரணமா முனைவர் ஜம்புலிங்கம் ஐயா இவர்களைப் போன்று ஒவ்வொன்றையும் தெரிந்தவர்களோடு, தரிசனம் செய்யணும்னு). வாய்ப்பை அவன் சுலபமாகக் கொடுத்துவிடுவானா?

      நீக்கு
    4. கும்பகோணத்தில் இருந்தால் தான் கோனேரிராஜபுரம் எல்லாம் கிட்ட! மாயவரம் கொஞ்சம் தள்ளிப் போயிடும். ஸ்ரீராம் சிதம்பரம் போனது சொல்லி இருந்தால் கிட்டே இருந்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம். அவர் சிதம்பரம் போனது பற்றி எழுதியதாயும் நினைவில் இல்லை.

      நீக்கு
  5. தரிசனம் செய்துகொண்டேன். தஞ்சை ப்ரகதீஸ்வரர் பார்த்திருக்கிறேன். சிதம்பரம் பார்த்திருக்கிறேன் - அதுவும் சமீபத்தில்தான். கோனேரிராஜபுரம் உட்பட பிற ஸ்தலங்கள் தரிசித்தது இல்லை. அப்படி சென்றதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  6. சிதம்பரம் தஞ்சை ஆகிய இடங்களில் சிவன் கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  7. பிரகதீஸ்வர் சிவனை படம் எடுக்க அனுமதி உண்டா மாலை அலங்காரங்கள் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  8. மாயவரத்தில் பலவருடங்கள் இருந்து நடராஜபெருமான் பார்க்க வைத்தார் அவர் இருக்கும் தலங்களை.நெல்லைத்தமிழன் சொன்னது போல் .

    கோனேரிராஜபுரம் நடராஜர் பார்க்க பார்க்க அழகு.
    கோவிலில் ஒவ்வொரு நடராஜருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்.
    திருவெண்காடு நடராஜரையும், சிதம்பரம் நடராஜரை
    செய்தவரும் ஒருவரே என்பார்கள்.
    சிதம்பரம் நடராஜர் போலவே அழகாய் இருப்பார். நடராஜசபையும் சிதம்பரத்தை விட அழகு திருவெண்காடு சபை.

    அத்தனை நடராஜர் தரிசனமும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், திருவெண்காடும் பார்த்திருக்கோம், சில முறைகள், கடைசியாப்பார்த்தது 2014 ஆம் ஆண்டில்

      நீக்கு
  9. தலைப்பு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  10. https://tinyurl.com/yc59x3tp நடராஜர் பத்திச் சிதம்பர ரகசியம் எழுதினப்போ எழுதியவை. ஒரு ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.

    பதிலளிநீக்கு
  11. எனக்குப் பிடிச்ச பிரகதீஸ்வரர்[சிவலிங்கம் என்றால் எனக்கு பிடிச்ச கடவுள்].. வராஹி அம்மன் எல்லோரையும் பார்த்ததில் பரவசமாகி விட்டேன்ன்.. அருமையான கலக்சன்ஸ்.

    பதிலளிநீக்கு
  12. மஞ்சடைச் சோலைத் தில்லை, நாறுபூஞ் சோலைத் தில்லை என்றெல்லாம் படிக்கும்போது, முன்னொருகாலத்தில் அப்படி சோலை சூழ்ந்து இருந்ததா அல்லது பக்தி மேலீட்டில் பாடும்போது உயர்வு நவிர்ச்சி அணியா என்று தெரியலை.

    இதுபோலவே திருவரங்கம், பெரும்பாலான திவ்யதேசங்களைப் பற்றி ஆழ்வார்கள் பாடுவர். (சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோவில், வண்டினம் முரலும் சோலை... அப்புறம், மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் என்றெல்லாம்).

    எனக்கு, அப்படி வளப்பமுடன் இருந்தவைகள் இப்போது அழிந்துபட்டனவா இல்லை இதெல்லாம் உயர்வாக ஆழ்வார்கள்/நாயன்மார்கள் பாடினவைகளா என்று சந்தேகம்.

    நீங்கள், சபை என்றதும், பல்வேறு சபைகளைப் பற்றிக் குறிப்பிடுவீர்கள் என்று நினைத்தேன் (சித்திரசபை, தாமிர சபை, கனக சபை...). வேறு ஒரு பதிவில் இதை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ. த..

      இன்று வெள்ளிக்கிழமை..
      இணையம் வெகு இழுவை.. இருந்தாலும் நாளைய பதிவினை எழுதிக் கொண்டிருக்கின்றேன்...

      தங்களது இந்தக் கருத்துரைக்கான பதிலை
      தனிப் பதிவாக திங்களன்று தருகின்றேன்..

      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. பையரவு அசைத்த அல்குல் - என்ற வரிகளில் அர்த்தம் புரிய ஆழ்ந்துபோனேன். (பையரவு-நாகம். பெரியாழ்வார் திருமொழியில் (துப்புடையாரை), பையரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரமமூர்த்தி என்று வரும்). (புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்-திருப்பாவை, செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-நம்மாழ்வார் திருவாய்மொழி)

    தமிழ்ப் பாக்களைப் படிக்கும்தோறும் அதன் கவிதை, ஒப்புவமை, அணிகள், இன்பம் பயக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. நேற்றே பதிவு பார்த்தாச்சு வாசித்தாயிற்று. கருத்து இரவு போட முடியலை...- கீதா

    பதிவு வழக்கம் போல படங்களுடன் அருமை ஐயா/ அண்ணா

    கீதா: வராகி அம்மன் படம் செம அழகு

    பதிலளிநீக்கு
  15. ஆடல் காணீரோ தலைப்பைப் பார்த்ததும் இப்பத்தான் வெங்கட்ஜி தளத்தில் ஒருஆடல் பார்த்துட்டு வந்தேன் அதுவும் நினைவுக்கு வந்துருச்சு!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் (ஐயன்பேட்டை தவிர) சென்றபோதிலும், தில்லைக்கூத்தனின் நடனத்தை தற்போது பல இடங்களில் உங்களால் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி. ஐயன்பேட்டை என்று கூறியுள்ளீர்களே ஐயா? அந்த ஊர் எங்குள்ளதென்று கூறமுடியுமா? நாவுக்கரசர் தேவாரம் மேற்கோளாகத் தந்துள்ளீர்கள். பெரும்பாலும் நான் பார்த்த இடமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயம்பேட்டை என்னும் ஊர் தஞ்சாவூர்----கும்பகோணம் வழியில் வரும். துரை ஐயன்பேட்டை என எழுதி இருக்கார். அப்படி ஓர் ஊர் இருக்கானு தெரியலை! ஐயம்பேட்டையைத் தான் ஐயன்பேட்டைனு எழுதி இருக்காரோ?

      நீக்கு
    2. அன்பின் முனைவர் ஐயா அவர்களுக்கு,

      இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐயன்பேட்டை -
      காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது..

      நண்பர்கள் அனுப்பியிருந்த படங்கள் மூன்று...

      நான் அவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை இரண்டு..

      படங்களை பதிவு செய்தபோது ஐயன்பேட்டை என்றால்
      தஞ்சைக்கு அருகில் உள்ளது தானே என நினைத்து எழுதி விட்டேன்...

      தாங்கள் இதற்கு விவரம் கேட்டபோது தான்
      நீக்கிய படத்தைத் தேடிக் கண்டு பிடித்துப் பார்த்தேன்..

      அந்த ஒன்றில் மட்டும் ஐயன்பேட்டை காஞ்சிபுரம் என்று குறித்திருக்கின்றனர்...

      பிழைதனை உணர்ந்து பதிவில் குறித்திருந்ததை சரி செய்து விட்டேன்...

      ஐயன்பேட்டை என்பது தஞ்சை நாயக்க மன்னர்களிடம் தலைமை அமைச்சராகப் பணி புரிந்து குடந்தை மகாமகக் குளத்தைச் சீரமைத்து சுற்றிலும் பதினாறு சிறு கோயில்களை எழுப்பிய ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் அவர்களின் நினைவாக வழங்கப்படும் பேராகும்..

      தஞ்சை கொங்கணேஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள
      கமல புஷ்கரணி என்பது ஐயன் குளம் என்றாகியது இவரால் தான்...

      திரு ஆரூருக்கு அருகில் இன்னொரு ஐயன்பேட்டை உள்ளது..

      ஆனால் அவ்வூர்ப் பெயருடன் மணக்கால் என்று சேர்த்து
      மணக்கால் ஐயம்பேட்டை என்று எழுதுவார்கள்...

      இப்போது தான் அறிந்து கொண்டேன் காஞ்சிக்கு அருகிலும் ஒரு ஐயன்பேட்டை உள்ளதென்று...

      தங்களது வினாவினால் நானும் புதிய செய்தி ஒன்றினைத் தெரிந்து கொண்டேன்...

      மேலும் பதிவில் -

      எம்பெருமானின் நாட்டியத்தைக் குறிப்பதற்காக
      தில்லைச் சிற்றம்பலத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப்பதிகங்களின் திருப்பாடல்களைப் பதிவு செய்துள்ளேன்...

      அந்தந்த தலங்களுக்கான பாடல்கள் அல்ல - அவைகள்...

      நன்றி..

      நீக்கு
    3. விளக்கத்துக்கு நன்றி. ஐயன்குளம் தெரியும். திருவாரூருக்கு அருகிலும் ஐயன்பேட்டை உள்ளதா?

      நீக்கு
    4. அன்பின் கீதா அக்கா அவர்களுக்கு..

      பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐயன்பேட்டை காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது...

      ஐயன்பேட்டை தஞ்சாவூர் என்று பிழையாகச் சொல்லிவிட்டேன்...

      பிழை திருத்தப்பட்டு விட்டது..

      மேலே முனைவர்கள் அவர்களுக்காக பதிவில் விவரமாகச் சொல்லியிருக்கின்றேன்..

      ஐயன் பேட்டை என்பதைத்தான் நம் மக்கள் ஐயம்பேட்டை என்கிறார்கள்..

      அதிலும் தஞ்சை ஐயன் பேட்டையை அய்யம்பேட்டை என்றே எழுதுவார்கள்..

      நான் - அய், அவ் .. என்பனவற்றை புழங்குவதில்லை...

      குழப்பம் தீர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன்...

      நன்றி..

      நீக்கு
  17. பல தலங்களிலிருந்தும் படங்கள்.

    இறை தரிசனம் கண்டு மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..