நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 24, 2018

காக்கைக்குச் சோறு

கண்ணே... கனியமுதே.. கட்டிக் கரும்பே!..

ஏன்?.. என்ன ஆச்சு இப்போ?.. 
காலையிலயே புராணம் பாடுறீங்க!?..

கவலை ஏன்?.. கலக்கம் ஏன்?..
கறுத்திருக்கின்றதே உன் முகம்!..
கலங்குகின்றதே என் மனம்!..
ஏன்?.. ஏன்?.. ஏன்?..

பொறந்ததுல இருந்து எம் மூஞ்சி கறுப்பாத்தானே இருக்கு!..
இன்னைக்கு என்ன புதுசா ஆராய்ச்சி!...


இல்லே... நாளைக்கு மகாளய பட்சம் ஆரம்பமாகுது...
முனியாண்டி விலாஸ் ஐட்டத்துக்கெல்லாம் பஞ்சம் வந்துடுமே.. ந்னு...

என்னைக்காவது முனீஸ்வரன் இறங்கி வந்து
எனக்கு ஆடு கொடு... கோழி கொடு...ன்னு கேட்டுருக்காரா!...

தெரியாது!?..

அப்புறம் எதுக்கு அவரு பேரைச் சொல்லிக்கிட்டு அலையிறீங்க!..

சும்மா.. நாக்கு ருசி!...

இந்த மனுசப் பதர்களைப் போலவே நீங்களும் ஆயிட்டீங்க!...

என்னது?... மனுசப் பதர்களா!...
அவங்க நமக்கு அன்னம் பாலிக்கிறவங்க!...

ஆகா... அன்னம் பாலிக்கிறவங்க!..
சும்மாவா பாலிக்கிறாங்க அன்னம்?...
அவங்க பாவ மூட்டை கரையணும்..ன்னு பாலிக்கிறாங்க!...

இருந்தாலும் பாலிக்கிறாங்க இல்லே!...

அவங்க பாலிக்கிறதைத் தின்னுட்டு
நமக்குத் தான் பாவத்துக்கு மேல பாவம் ஏறிப் போச்சு...

என்ன செல்லம் இப்படிச் சொல்றே!...
ஜிலேபி, வடை, பாயாசம், அப்பளம் - 
இதெல்லாம் இந்த சென்மத்தில நமக்குக் கெடைக்குமா?..

ம்ம்... நம்ம மேல பிரியப்பட்டு வெக்கிறாங்க...ன்னா
நாம குடியிருக்கிற மரத்தை எல்லாம் ஏன் வெட்டுறாங்களாம்!...

கூட்டை இழந்து குஞ்சு எல்லாம் இழந்து
நாம பட்ட கஷ்டம் உங்களுக்கு மறந்துடுச்சா?...

மறக்கலை தான்!... இருந்தாலும்...

இருந்தாலும்.. ந்னு ஏன் இழுக்கிறீங்க?...
அடுத்த ஒரு ஜீவனோட கூட்டை அழிச்சுட்டு
நாம மட்டும் எப்படி நல்லா குடுத்தனம் பண்ணமுடியும்... ந்னு
நெனைச்சுப் பார்க்காத மனுசன் ஒரு மனுசனா!...

இவனுங்களால அழிஞ்ச
ஆலமரம் எத்தனை?.. அரச மரம் எத்தனை?..
வேல மரம் எத்தனை?..  வேங்கை மரம் எத்தனை?..
புங்க மரம் எத்தனை?..  புளிய மரம் எத்தனை?..
மா மரம் எத்தனை?.. மருத மரம் எத்தனை?..


ஆகா.. கவிதை எல்லாம் பாடுறீயே!..

சும்மா இருங்க... வயத்தெரிச்சலைக் கெளப்பாம!...
நாம பாட்டுக்கு ஒளிவு மறைவா கூட்டைக் கட்டிக்கிட்டோம்..
கொஞ்சிக்கிட்டோம்!.. குலாவிக்கிட்டோம்!..
எல்லாத்தையும் கெடுத்துப் போட்டது இந்த மனுசனுங்க தானே!...

எவனோ வெட்டித் தள்ளினான்.. எவனோ அள்ளிக் கட்டினான்!..
அதுக்காக எல்லாரையும் திட்டுறதா?...


இதுல ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்கா இல்லையா?..
மரத்தை வெட்டிட்டுப் போட்ட ரோட்டுல இவனும் போறானா இல்லையா?..

அதுக்காக ரோடு போடக்கூடாது... ங்கிறயா?...

ரோடு போடு!.. யாரும் வேணாம்...ன்னு சொல்லலை!..
வாய்க்கால் வரப்பை அழிக்காதே.. வயக்காட்டை ஒழிக்காதே...
மண்ணுக்கு வரம் - மரம்... ன்னாங்க... 
அந்த மரத்தை எல்லாம் அழிக்காதே...

மனுசனுக்கு மட்டும் தான் மரம் சொந்தமா?..
மத்த ஜீவராசிக்கெல்லாம் மரம் சொந்தம் இல்லையா?..

தங்கம்... நமக்கெதுக்கு இந்த அரசியல்?..
வா... அந்தப் பக்கமா போய் வேற ஏதாவது பேசுவோம்!...

அரசியல் இல்லை.. இதான் வாழ்க்கை முறை...

முறையோ.. நுரையோ.. நமக்கு எதுக்கு அதெல்லாம்?..

உங்க அப்பன் பாட்டன் வெச்ச மரத்தை என்ன வேணாலும் செஞ்சுக்க..
ஊர் பொது மரத்தை ஏன் வீணா வெட்டிச் சாய்க்கிறே!.. கேட்கிறது தப்பா!...

செல்லம்... நமக்கு எதுக்கு ஊர் வம்பு?..
இந்த மரம்... இல்லேன்னா... அந்த மரம்!..

இன்னுங் கொஞ்ச நேரத்தில கா..கா.. ந்னு
யாராவது சோத்தை வெச்சுக்கிட்டு கத்துவாங்க...
எறங்கிப் போனோமா..  ரெண்டு வாய் தின்னோமா..
நாலு முட்டையப் போட்டோமா..  குஞ்சு பொரிச்சோமா!.. ந்னு இருக்கணும்...

அந்த முட்டையும் தான் திருடித் திங்க வந்துடுறானுங்க!..

சரி.. விடு... முட்டைங்க தானே!.. போனாப் போகுது!..
வேற எங்கேயும் திருடுனா கையக் காலை ஒடைச்சுடுவாங்க!..

இவனுங்களுக்கு மட்டும் பிதுர் சாபம் எல்லாம் தீரணும்..
இவனுங்க புள்ளை குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்!..

ஆனா -
நாம மட்டும் கூடு இல்லாம குஞ்சு இல்லாம சாவணும்!..
நல்லா பேசுறீங்களே நீங்களும் ஞாயம்!...

குஞ்சு குளுவான் எல்லாத்தையும் இழந்துட்டு
நான் படுற பாடு எனக்குத் தானே தெரியும்!..

சரி.. சரி.. விடு.. மனசைத் தேத்திக்க!...
எனக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா!...

எவனோ சொன்னானாம்.. காக்கா எல்லாம் பித்ருக்கள்..
தாத்தா பாட்டி, அப்பன் ஆத்தா..வோட மறு உருவம்...ன்னு...

அப்படியே அது உண்மை...ன்னா
தாத்தா பாட்டி, அப்பன் ஆத்தா..வோட
குடும்பத்தை அழிக்கலாமா?..

அப்படியே எல்லாத்தையும் அழிச்சிப் போட்டுட்டு
அவங்க கிட்டயே கையேந்தி நிக்கலாமா..
எங்கள நல்லா வையிங்க... ன்னு!?..

கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டாங்களா?..

நல்ல நாளும் அதுவுமா -
ஏதோ ஒரு ஜீவனுக்கு ஒரு கை சோறு!.. ன்னா சரி...

பாவம் தீரணுமா!.. காக்காய்க்கு வை...
பணம் காசு சேரணுமா.. காக்காய்க்கு வை...

அப்புறம் காக்கா கூட்டுக்கே வேட்டு வை!..

ஸ்ரீராம்.... ன்னு ஒரு அண்ணாச்சி காக்கா பாட்டு வெளியிட்டாரே...
பரிகாரம்.... ன்னா என்ன வேணாலும் செய்வானுங்க.... ன்னு!...

மொட்டை மாடியில்
எனைக் கண்டால்
மூடியே வைப்பீர்
வற்றலைத் தான்..
அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..

ஆற்றில் குளித்து
சிறகு உலர்த்தி
குப்பை கூளம்
கிளறி நின்றோம்..
கூச்சல் கூட்டம்
பொறுக்காமல்
வேட்டுகள் போட்டு
எமை அழித்தீர்..



காக்கை நிறத்தில்
பெண் என்றால்
கலங்கித் தவித்துப்
பரிதவிப்பீர்..
கடுவினை தீர்ந்திட
வேண்டும் என்றால்
காக்கையைக் கூவி
விருந்து வைப்பீர்!..

இருந்தவர் பசிக்கு
சோறிடவில்லை..
சென்றதும் பழியெனப் 
பதறுகின்றீர்!..
தன்பிழை என்மேல்
ஏற்றி வைத்து..
எள்ளுடன் சோற்றை
ஏந்தி நின்றீர்!..

அப்படி... ன்னு...

அது.. தஞ்சாவூரு அண்ணாச்சி எழுதுனது ஆச்சே!..

ஆரு எழுதுனா.. என்னா?..
அந்தப் பாட்டு வெளியிட்டது ஸ்ரீராம்... அண்ணாச்சி தானே!...

சரி... அதுக்கு என்னா....ன்றே இப்போ!?...

அந்த மாதிரி -
இவங்களுக்கு வேணும்..ன்னா கூப்புடுவாங்களாம்!..
இல்லேன்னா.. வெரட்டுவாங்களாம்!...

அன்னைக்கு டீக்கடை பந்தல்ல உட்கார்ந்திருந்தப்ப பேசிக்கிட்டாங்க...

என்னா.... ன்னு!?...

இருக்கிற பரிகாரம் எல்லாம் செஞ்சு செஞ்சு அலுத்துப் போச்சாம்...
அதனால வர்ற வருசத்தில இருந்து - ஒரு காக்கா ஜோடிக்கு
வேட்டி சேலை எடுத்துக் கொடுக்கப் போறாங்களாம்!...

செஞ்சாலும் செய்வானுங்க!...
இருந்தாலும் அதெல்லாம் எதுக்குங்கறேன்?...

இருக்கிற மரம் மட்டைகளைக் காப்பாத்துனா
அது புண்ணியம் இல்லையா!...
ஆறு குளத்தை அழிக்காம இருந்தா
அது புண்ணியம் இல்லையா!... 

பரிகாரச் சோறு யாரு கேட்டா!?...
இந்த வருசம் மாளய பட்சத்துக்கு கீழே இறங்கவே மாட்டேன்!..

தங்கம்... அப்படியெல்லாம் சொல்லக்கக்கூடாது...

அன்னத்தில பின்னம் இல்லை...
அன்னம் அது சொர்ணம்...
அன்னம் சிவலிங்க ஸ்வரூபம்!..  -
அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க!...

மனுசங்க என்ன பாவம் செஞ்சாலும் என்ன பழி சொன்னாலும்
அதெல்லாம் தீர்றதுக்கு நம்ம கிட்ட கையேந்தி நிக்கிறாங்க...

அதுவே நமக்குப் பெருமை தானே!...

இவங்க நமக்கு சோறு வைக்கலே...ன்னா 
நாம என்ன வருத்தப்படவா போறோம்!?...

அவங்க வைக்கிற சோற்றை -
நாம திங்கலேன்னா தான்
மனங்கலங்கி மதி மயங்கி தடுமாறுறாங்க!...

கன்னங்கரேல்...ன்னு பொறந்தாலும்
நாம என்னைக்குமே மேல தான்!...

பளபள.... ன்னு இருந்தாலும் 
நம்ம கிட்டே கையேந்தி நிக்கிற 
மனுசனுங்க என்னைக்குமே கீழ தான்!..

அங்கே பாரு... இலையில சோற்றை வெச்சுக்கிட்டு
குடும்பமே - கா... கா... ன்னு கத்திக்கிட்டு நிக்குது!...

நாம கீழே இறங்கி ஒரு வாய் எடுத்தா 
அவங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா!..

நாமளும் அவங்களை மாதிரி வக்கிரமா இருக்கக் கூடாது...
வா... கீழே போய் ரெண்டு வாய் சாப்பிடுவோம்!..
அப்பளம் எல்லாம் வெச்சிருக்காங்கடா!...
வா.... செல்லம்... எம் பேச்சைக் கேளு..

பாவம் தீருதோ.. புண்ணியம் சேருதோ!..
படைச்சவனுக்குத் தான் அதெல்லாம் தெரியும்!..

நீ.. வா... நாமளும் சந்தோசமா இருப்போம்..
பிறத்தியாருக்கும் சந்தோசத்தைக் கொடுப்போம்!...

ஏதோ நீங்க இவ்வளவு தூரம் சொல்றிங்களே...ன்னு தான்!..
சரி... வாங்க... போய் ஒரு வாய் சாப்பிட்டுட்டு
நல்லா இருங்க மக்களா... ன்னு வாழ்த்திட்டு வருவோம்!.. 
***


அந்தக் காக்கைகள் 
கீழ் நோக்கிப் பறந்து இறங்கியதும்
அங்கே காத்துக் கிடந்தவர்களின் 
முகமெல்லாம் மலர்ச்சி... மகிழ்ச்சி...

அந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும்
உலகின் எல்லா உயிர்களுக்கும் ஆகட்டும்..

மகாளய பட்சம் - நாளை முதல்..
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

42 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    காகங்களின் உரையாடலை கேட்டு சிரித்து இரசிக்க இயலவில்லை.

    காரணம் உண்மைகள் சுடுகிறது அந்த மனுசப்பதர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாய் வாழ்வதால்....

    எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கு நல்வரவு...

      நானும் மிக வேதனையோடு தான் எழுதினேன்...

      காடுகளை அழித்து ஏதாவது செய்ய வேண்டியது...
      அங்கே இரைதேடி வரும் காட்டுப் பன்றி முதலான விலங்குகளையும் யானைகளையும் மின் வேலி வைத்து சாக அடிக்க வேண்டியது..

      சில தினங்களுக்கு முன் கூட 25 மயில்களை விஷம் வைத்து தீர்த்துக் கட்டியிருக்கின்றார்கள்...

      மனிதன் எங்கே போய்க் கொண்டிருக்கின்றான் என்றே தெரியவில்லை...

      எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன்...

      நீக்கு
    2. //25 மயில்களை விஷம் வைத்து// - இது மாதிரி நிறைய செய்திகளைப் படித்திருக்கிறேன். மனதால் அவங்களை வைதிருக்கிறேன்.

      சமீபத்தைய நெல்லை பயணத்தில் நிறைய இடங்களில் மயில்கள் ஏராளமாகப் பார்த்தேன். அவைகளை ரசிக்கணும். உணவு வைக்கணும்னு அவசியமில்லை. அவங்களே அவங்களுக்கான உணவைப் பார்த்துக்குவாங்க. ஆனா அதை அழித்து தோகையை உபயோகப்படுத்தணும்னு நினைப்பது க்ரூரகுணம். வெளியாட்கள் யாராவது, நம்ம குழந்தையோட கையை வெட்டி பாடம் பண்ணி சுவத்துல அலங்காரத்துக்கு வைக்கணும்னு நினைத்தால் நமக்கு எப்படி இருக்கும்?

      இதுதான், யானைகள் எங்கள் இருப்பிடங்களுக்கு வருகின்றன, பயிர்களை அழிக்கின்றன என்று கூக்குரலிடும் மனிதப் பதர்களைப் பார்த்தும் சொல்வேன். நீ ஏண்டா அவங்க இடத்தை ஆக்கிரமித்த என்று யாராவது பளாரிடவேண்டாமா? யானைகள் எப்போதும் பாதை மாற்றிக்கொள்ளாது. அது பல நூறு ஆண்டுகளாக அவர்கள் ஜீனில் உள்ளது.அதை மறித்தால் அவை என்ன செய்யும்?

      நீக்கு
    3. அன்பின் நெ.த..

      தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மை..

      ஆயினும், சமீபத்தில் கொல்லப்பட்ட மயில்களும் சில மாதங்களுக்கு முன் புதுச்சேரிக்கு அருகில் கொல்லப்பட்ட மயில்களும் தோகைக்காகக் கொல்லப்படவில்லை..

      விளை நிலங்களுக்குள் அத்து மீறி நுழைந்ததால்!...

      அவற்றின் வாழ்விடங்களை அழித்ததே இந்த மானுட சமுதாயம் தானே..

      அவை இரை தேட வழியற்றுப் போயின...
      விளைநிலங்களில் மேய்ந்ததால் வாழ்வற்றுப் போயின...

      நமது கலாசாரத்தில் ஞானத்தின் வடிவம் யானை என்பார்கள்..

      அந்த யானைகளின் வழித்தடத்தை ஆக்ரமித்து விட்டு
      ஞானம் பேசுகிறவர்களும் இருக்கின்றார்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காக்கைகளுக்கு தங்களுக்குள் உரையாடவே நேரமிருப்பதில்லை. உணவு தேடவே நேரம் போதவில்லை. ஆனாலும் அந்தி சாயும் பொழுதிலும், மத்திய நேர வெயிலிலும் சிலசமயம் இரண்டு காக்கைகள் ஒன்றோடொன்று உரசிப் பேசிக்கொள்ளும் ஒலியைக் கேட்டதுண்டா? நான் கேட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      தாங்கள் சொல்வதைப் போல்
      காலை வேளையில் ஓய்ந்திருக்கும் காக்கையைக் காணவே இயலாது..

      மதியப் பொழுதுகளில்
      தென்னை மட்டையில் அமர்ந்து குறுகுறுக்கும் காக்கைகளைக் கண்டதுண்டு...

      அதன் விளைவே இந்தப் பதிவு...

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம் நான் கேட்டதுண்டு. ரொம்ம்ம்ம்ம்ம்பவே ரசித்திருக்கிறேன். இப்போது கூடச் சில சமயம் பால்கனியில் இரண்டு வந்து அமர்ந்து கொஞ்சிப் பேசிக் கொள்ளும் அழகை ரசிப்பதுண்டு. அடுத்த முறை முடிந்தால் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனா எடுத்ததையே போடலை இன்னும் எங்க ப்ளாக்ல..ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  3. மனிதர்களின் பாவத்தைச் சுமந்தே கருப்பு மாறாமல் இருக்கின்றன காக்கைகள். ஒருவேளை வெள்ளைக் காக்கைகள் இருந்தாலும் மல்லாக்கப் பறந்து தற்கொலை செய்து கொள்ளுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நியாயமான வார்த்தைகள்...
      மனிதனின் பாவம் குறைவதென்பது ஏது?..

      என்றும் வற்றாத கேணி...

      நீக்கு
  4. மனிதன் சுயநலவாதி. தன்பாவம் தீர்க்கக் காக்கைகள் வேண்டும். ஆனால அவை அடைந்து கொள்ளும் வீடுகளை வெட்டுவான். பாலகுமாரன் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

    பறவைகள் அடையும்
    பெருமரங்கள் வீழ்ந்து
    மனிதர்கள் அடையும்
    கல்மரங்கள்
    முளைத்த காடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தாங்கள் குறைத்துள்ள கவிதையை வாசித்ததாக நினைவு இல்லை...

      சுய நல மனிதக் கூட்டத்துள்
      நானும் ஒருவனோ!..

      இருக்கலாம்..

      நீக்கு
    2. ஸ்ரீராம் செம....கல்மரங்கள் முளைத்த காடு!!!! யெஸ் யெஸ்


      கீதா

      நீக்கு
  5. நான் மொட்டை மாடியில் அல்லது வீட்டு வாசலில் பிஸ்கட்களும், முறுக்கும், சீடையும், ஏன், அப்பளமும் கூட காக்கைக்குத் தருவது நட்பின்பாற்பட்டே.. பாவம் தீர அல்ல!

    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      சுயநலம் இல்லாதவர்க்கு
      பாவம் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதில்லை...

      தங்கள் வருகையும்
      கருத்துரைகளும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
    2. அதே அதே அதே அதே ஸ்ரீராம்....மீ டூ. நானும் இந்தப் பாவம் புண்ணியம் என்று எந்த ஜீவராசிக்கும் உணவு கொடுப்பதில்லை. அன்பினால் நட்பினால்...சிலர் பார்த்திருக்கேன் பைரவ பூஜை செய்ய வேண்டும் என்றால் அதுவரை பைரவர்களைக் கண்டு விரட்டியவர் கூட அப்போது மட்டும் பைரவர்களுக்கு பன் ரொட்டி என்று போடுவார்கள்...என்ன மக்களோ...

      யெஸ் துரை அண்ணா சுநலம் இல்லாதவர்க்குப் பாவம் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதில்லை செம வரிகள்.

      துரை அண்ணா உங்க பதிவை ரசித்தேன் கூடவே ஸ்ரீராமின் பதில்கள் அனைத்தையும் ரசித்தேன்...

      ஸ்ரீராமின் கவிதை வெகு வெகு அருமை மிக மிக ரசித்தேன்....

      கீதா

      நீக்கு
    3. அது என் கவிதை இல்லை கீதா... பாலகுமாரன் கவிதை. சொல்லியிருக்கிறேனே...

      எங்கள் ப்ளாக்கில் வந்திருப்பது துரை அண்ணன் எழுதிய கவிதை.

      நீக்கு
  6. உரையாடல் மிகவும் அருமை...

    இரக்கம் இறந்து விட்டதும் ஒரு காரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மனிதர்கள் பலரும் தங்கள் பாவத்தைப்போக்க பரிகாரம் செய்வார்கள் அவர்கள் பாவம்போகுமா என்பதே ம்யூட் கேள்வி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      நமது கோட்பாடுகளில் புண்ணியங்கள் சேர்வதற்கான வழிகள் உள்ளன.. தவிர பாவங்கள் தீர்வதற்கு இல்லை..

      செய்தவற்றை அனுபவித்தே தீர்க்க வேண்டும்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. உண்மையில் காக்கைகள் பேசிக் கொண்டால் இப்படித் தான் இருந்திருக்கும். :( மரங்களை வெட்டிச் சாய்க்கின்றனர்! அப்புறமா மழை இல்லை, நீர்ப்பற்றாக்குறை என்கின்றனர். பெய்யும் மழையைச் சேகரிக்கணும். முடிந்தவரை சாலையோரங்களில் மரங்களை நட்டுப் பாதுகாக்கணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      மழை நீரைச் சேகரிக்கணும் .. மரங்களைப் பாதுகாக்கணும்.. - என்றாலே
      கசக்கின்றதே..

      என்ன செய்வது?...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. உங்கள் கவிதை அருமையா இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கவிதை ஏற்கவே எங்கள் பிளாக்கில்
      2017 செப்டம்பர் 8 அன்று வெளியிடப்பட்டுள்ளது..

      பாராட்டுரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. காக்கைகள் உரையாடல் மிக அருமை.
    என் அம்மா தினம் காக்கைக்கு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.
    கவிதைகள் அருமை.
    மரங்கள் நட்டு வளர்த்து பறவைகளுக்கு கூடு அமைக்க வசதி செய்து கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.உணவு என்பது விடுபட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைய மக்கள் எப்படியெல்லாம் பரோபகாரமாக இருந்திருக்கின்றார்கள்....

      அதெல்லாம் ஒரு கனவு போல ஆகி விட்டது...

      நீக்கு
  12. ஹா ஹா ஹா அருமையான நகைச்சுவையுடன் கூடிய பதிவு. அந்த பனைமரங்களைப் பார்க்க அதிகம் கவலையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஞானி..

      பனை மரங்களை இப்படித்தான் ஆயிரக்கணக்கில் வெட்டித் தள்ளிவிட்டார்கள்...

      இப்போது மீண்டும் ஆர்வமாக பனங்கொட்டைகளை விதைக்கின்றார்கள்...

      பார்க்கலாம்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. பனை மரத்தின் எல்லாப் பகுதியும், வாழை, தென்னையைப் போல உபயோகப்படும். முன்பெல்லாம் வீடுகளில் மேல் பகுதியை (காரை வீடுகளில் மட்டப்பா என்று சொல்வார்கள்), பனை மரங்களிலிருந்து எடுத்த துண்டுகளைத்தான் குறுக்கே போடுவார்கள். நெல்லைக்குக் கீழுள்ள பகுதியில் பனைமரங்கள்தான் மிக அதிகம், அதனால் வாழ்க்கை பெற்றனர் நம் முன்னோர்கள்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. படித்து முடித்ததும் எங்களுக்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. துரை அண்ணா நான் இப்படித்தான் பல சமயம் நினைப்பதுண்டு அதை அப்படியே காக்கைகளின் உரையாடலில் கொண்டு வந்து நச்....மிக மிக ரசித்தேன் ஆனால் மனம் என்னவோ செய்தது. பாவம் காக்கைகள். நான் அடிக்கடி நினைப்பது காக்கைக்கு உணவு வைக்கும் மக்கள் ஏன் அதை விரட்ட வேண்டும் மரங்களை அழிகக் வேண்டும் என்று...அதை இங்கு கண்டதும் அட!!! என்று தோன்றியது..

    நல்ல பதிவு

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அந்தக் காக்கைகள் வாழட்டும். மனிதம் செழிக்கட்டும். அழுத்தமான பதிவு துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
  17. நெடிய பின்னூட்டம் இப்போ மறைந்துவிட்டது.

    நாம சக்கையை எடுத்துக்கொண்டு முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழியை மறந்துவிட்டோம். ஒவ்வொரு விலங்கு, பறவையையும் நேசிக்கணும் என்று அவர்கள் பண்டிகைகளோ, விழாக்களோ இல்லை கடவுளர்களோடு தொடர்பு படுத்தியோ இல்லை கதைகள் மூலமோ நமக்குச் சொன்னார்கள்.

    ஆனால் நாம அதை மறந்துவிட்டோம்.

    காக்கைக்கு தினமும் அன்னமிடவேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அதற்கு 'வடை, அப்பம், முருக்கு, பாயசம்' என்று பரிமாறுவது எனக்குச் சிரிப்பா வருது. காக்கைக்கு அன்னம் மட்டும்தான் என்பது சாஸ்திரம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் நெ.த..

    >>> வடை, அப்பம், முறுக்கு, பாயாசம்.. என்று பரிமாறுவது.. <<<

    காக்காய் எல்லாம் முன்னோர்கள் என்று சொல்லி வைத்ததன் விளைவு இது!..

    காக்கைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  19. காகங்களின் உரையாடல் மூலம் நல்ல செய்தி சொல்லி இருப்பது சிறப்பு. நேற்று ஒரு காணொளி பார்த்தேன் - வாட்ஸப்-ல். காகத்தினை பிடித்து வைத்துக் கொண்டு பல தட்டுகளில் இருந்து கொத்திக் கொத்தி சாப்பிட வைக்கிறார் ஒருவர் - என்ன ஜென்மமோ....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..