நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 05, 2018

ஞான குரு

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களையும்

குணாநிதியாகிய ஸ்ரீ மஹாகணபதிப் பெருமானின்
சதுர்த்தி விழா இன்று முதல் ஆரம்பமாகியிருக்கின்றது...

காரைக்குடிக்கு அருகிலுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானின் சந்நிதியில் திருக்கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது...

காலையிலும் மாலையிலுமாக தொடர்ந்து பத்து நாட்களுக்கு 
விநாயகப் பெருமான் திருவீதி எழுந்தருள்கின்றார்...

முதல் நாளின் தரிசனம் தங்களுக்காக - இன்றைய பதிவில்...

வழக்கம் போல 
உழவாரம், சிவனடியார் திருக்கூட்டத்தினர் வழங்கிய படங்கள்..

அவர்தமக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்...




கொடியேற்றத் திருக்காட்சிகள்...






தெய்வத் திருமேனியை குருவடிவாகப் போற்றுவது நமது பாரம்பர்யம்..

அதனினும் மேலாக,
நல்வழி காட்டும் குருநாதர்களைத் தெய்வமாகவே கொண்டாடுவதும் நமது மரபு...

குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருளென

- என்பது ஔவையார் திருவாக்கு...

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

- என்று அழைப்பவர் அருணகிரிநாதர்...

க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்..

- என்பது ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்...

அப்பன் நீ.. அம்மை நீ.. ஐயனும் நீ!...

- என்றார் அப்பர் பெருமான்...

ஐயன் எனில் - ஆசிரியர்....

நல்லாசிரியர் வடிவத்தில் - நாம் தெய்வ தரிசனத்தைக் காணலாம்...

மாதா பிதா குரு தெய்வம் - என்பது ஆன்றோர் வாக்கு...

தாய் சொல்லித் தந்தையை அறியும் நாம்
தந்தையினால் குருவினை அடைகின்றோம்...

குரு தான் தெய்வத்தை உணர்த்துகின்றார்...

தெய்வம் என்பது உயரிய ஞானம்..
உயரிய ஞான நிலையே தெய்வ நிலை!...

அந்த நிலைக்கு நம்மை ஏற்றுபவர் ஆசிரியர்...

5 செப்டம்பர் 1888 - 17 ஏப்ரல் 1975

இன்றைய தினம் -
நமது நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும்
முதல் குடியரசுத் தலைவருமாகிய
Dr. S. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்..


ஆசியராக தமது வாழ்க்கையைத் தொடங்கி
நாட்டின் உயரிய பதவியை அடைந்த அவருடைய பிறந்த நாள்
ஆசிரியர் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது...

5 செப்டம்பர் 1872 - 18 நவம்பர் 1936

மேலும்,
தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக
தன்னையே அர்ப்பணித்தவராகிய
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளும் இன்று தான்...

மேலோர்களைச் சிறப்பித்துக் கருத்தில் கொள்வது
நம் வாழ்வை வளப்படுத்துவதாகும்...


அவ்வழியில் நின்று 
ஆசிரியப் பெருமக்களைப் 
போற்றி வணங்குகின்றேன்...


குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேஸ்வர:
குரு ஸாக்ஷாத் பரப்ரம்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

குருவே சரணம்
ஃஃஃ

27 கருத்துகள்:

  1. படிப்படியான விளக்கம் அருமை ஐயா...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ரசித்த பதிவு. நான் சிறு வயதில் 5-6வது படிக்கும்போது, பிள்ளையார் பட்டிக்குப் போயிருக்கிறேன். கோவில் நினைவில் வெகு மங்கலாக இருக்கிறது (பொன்னமராவதி பக்கத்தில் நாங்கள் இருந்தபோது). இங்குள்ள கொழுக்கட்டை விசேஷம் என்பார்கள் (மிகப் பெரிய அளவில் செய்யப்படுவது).

    பாடல் 'க்ருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்' என்பதுதான். ஆனால், நீங்கள் விரித்து 'வந்தே க்ருஷ்ணம் ஜெகத் குரும்' என்று சொல்லியுள்ளது தவறில்லை. அர்த்தம் நீங்கள் சொல்லியதுதான். (மன்னிக்கணும்... குற்றம் கண்டுபிடிக்கறமாதிரி தெரிந்துவிடக்கூடாது. அது என் நோக்கமில்லை. தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ' என்றுதான் வரும்)

    ஆசிரியர் தினத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நமக்கு 'அ ஆ' எழுத ஆரம்பித்துக்கொடுப்பது நமது ஆசிரியர்தான். நம் ஆசிரியர்களில் பலர் நம்மைத் திட்டியிருக்கலாம். இருந்தாலும் நம்மால் அந்த ஆசிரியர்களை நினைக்கும்போது வரும் மகிழ்ச்சி உண்மையிலேயே சொல்லமுடியாது. நாம் வாழ்வில் ஒரு நிலை அடைந்த பிறகு, அந்த ஆசிரியர்களைப் பார்த்து, 'சார்... நான் இந்த நிலைக்கு வந்துட்டேன். எல்லாம் நீங்கள் அளித்த கல்வி' என்று சொல்லவேண்டும் எனத் தோன்றாமலிருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      திருமுறைகளிலும் திருப்புகழிலும் தனித்தனியாக முழு அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகள் உள்ள திருப்பாடல்கள் உள்ளன..

      நான்கு வரிகளை எட்டாக, பதினாறாகப் பாடலாம்...

      அந்த வகையில் ஸ்லோகங்களின் ஈற்றடிகளை மாற்றிச் சொல்வதுண்டு...

      தஸ்மை ஸ்ரீ மஹாகுரவே நமஹ என்று கூட வணங்குவதுண்டு...

      அது அப்படியே இங்கு வந்துவிட்டது..

      சொற்பிரயோகங்களை திருத்தி விட்டேன்...

      தங்கள் வருகையால் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. அன்பின் நெ.த..

      சீக்கிரமே பதிவைத் தர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் கூட, இப்படி ஆகியிருக்கலாம்...

      தங்கள் அன்பினுக்கு நன்றி...

      நீக்கு
  3. அழகிய விளக்கங்கள் ஜி
    ஆசிரியர் தினவாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. துரை அண்ணா இனிய காலை வணக்கம்...ஞான குருவை அப்புறம் வந்து காண்கிறேன்...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கீதா ரெங்கன்... நட்புலா இன்று முதல் மீள் தொடக்கமா? வாழ்க...

      நீக்கு
    2. அன்பின் கீதா..
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அழகாய் மூன்று விஷயங்களை ஒன்றிணைத்திருக்கிறீர்கள். அழகிய பாடல்வரி மேற்கோள்கள். காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. வ வு சி பிறந்தநாளைப் பற்றி வேறு யாருமே எங்குமே பேசவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      வ.உ.சி. அவர்களைப் பற்றி யாரும் பேசவில்லை...

      ஏனெனில் நமது கட்டமைப்பு அந்த மாதிரி...

      நீக்கு
  7. இராதாகிருட்டினன்
    வ வு சி
    போற்றுதலுக்கு உரிய மாமனிதர்கள்
    இராதாகிருட்டினனை நினைவுகூர்கிறோம், ஆனால் வ.உ.சி யை மறந்துதான் போய்விட்டோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு...

      // வ.உ.சி. அவர்களை மறந்து தான் போய்விட்டோம்..//

      திரண்டிருந்த செல்வத்தை நாட்டுக்காக இழந்தார்.. மக்கள் நன்றி மறந்தனர்...

      வள்ளுவரே சொல்கிறார் -
      உய்வில்லை .. என்று..

      நீக்கு
    2. ஜெயக்குமார் சார்/துரை செல்வராஜு சார்.... இதனை ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்.

      வ உ சி படத்தையும் அவர் பையன் படத்தையும் காட்டின திருச்சி மலைக்கோட்டை யானை கட்டும் இடத்துக்கு எதிரே கடை வைத்திருப்பவர், அரசின் மக்களின் பாராமுகத்தைப் பார்த்து வருத்தப்பட்டார். நாம எப்போ தேசத் தலைவர்களையும் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களையும் சாதிக்கண்ணோட்டத்தோடு பார்க்க ஆரம்பித்தோமோ அப்போவே நாம் நம் தரத்திலிருந்து குறைந்துவிட்டோம்.

      நீக்கு
  8. அழகிய தரிசனம்...

    மிக்க நன்றி ..


    இங்கிருந்து நானும் ..நாளும் பல கற்பதால் நீங்களும் ஆசிரியரே ..அதனால் தங்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      1977/78 ல் நானும் ஆசிரியப் பணிக்கு முயன்றேன்..
      ஆனால் அதற்கான எழுத்து இல்லை...

      வலைத் தளங்களில் நாளும் நாளும் நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அனைவரும் நல்லாசிரியர்கள் தான்...

      ஆக - அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...

      நீக்கு
  9. அழகான பதிவு அண்ணா. குரு என்னும் சொல்லைப் பார்க்கும் போதும் சரி வாசிக்கும் போதும் சரி உடனே எனக்கு என் ஆசிரியர்கள் முதல் யாசிப்பவர் வரை நான் பாடம் (வாழ்க்கைப் பாடம் அது பலரிடமிருந்தும் நல்லதும், எப்படி இருக்கக் கூடாது என்ற பாடமும்) கற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் நினைவுக்கு வருவார்கள். கூடவே ஏசுதாஸ் அவர்கள் தன் கச்சேரிகளில் குரு வந்தனமாகத் தவறாமல் பாடும் பாவன குரு பாடலும் நினைவுக்கு வரும். அவர் தமிழ்ப்பாடல் கச்சேரிகளில் அதற்கு இணையான குரு வணக்கம் தமிழ்ப்பாடல் ஒன்றும் பாடுவார் அது சட்டென்று நினைவுக்கு வரவில்லை....

    ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிவுடன் கூடிய வணக்கங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா அவர்களுக்கு நல்வரவு...

      தாங்கள் சொல்லும் ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்டதில்லை...
      அவரது நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு அமையவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான பதிவு.
    படங்கள் அழகு.
    பிள்ளையார்பட்டி விழா படங்கள் நேரில் தரிசனம் பெற்ற உணர்வை தந்தது.
    ஆசிரியர் தின வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன் இன்று.
    நேற்று இந்த பதிவு தெரியவில்லை டேஸ்போர்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு நல்வரவு ..

      தங்கள் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பிள்ளையார் பட்டிக் கொடியேற்ற நிகழ்வுகளைத் தொலைக்காட்சியிலும் பார்த்தேன். ஆசிரியர் தினத்தையும் இதையும் அழகாய் ஒன்றிணைத்து அருமையான பதிவாய்க் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. தாய் சொல்லித் தந்தையை அறியும் நாம் / இம்மாதிரி நீங்கள் எழுதினால் ஆட்சேபணை வராது ஆனால் நான் எழுதியபோது கருத்து வேறு பாடுகள் இருந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களுக்கு நல்வரவு...

      <<< தாய் சொல்லித் தந்தையை அறியும் நாம் >>>

      உண்மைதானே ஐயா.. தாய் தானே முதல் குரு!...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..