நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 29, 2018

கல்யாண தரிசனம்

காலகாலமாக நிகழ்ந்து வருகின்றதொரு கோலாகலம்...

பல வருடங்களுக்குப் பின் காணக் கிடைத்தது...

உடனடியாகப் பதிவு செய்வதற்கான சூழ்நிலை அமையவில்லை...

சில நாட்கள் தாமதமாகி விட்டது..
எனினும், எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..

கடந்த திங்களன்று
திருமழபாடியில் ஸ்ரீ நந்தியம்பெருமானின் திருக்கல்யாண வைபவம்...

அன்று மாலை நான்கு மணியளவில் திருமழபாடிக்குச் சென்றோம்...

அங்கே அவ்வளவாகக் கூட்டமில்லை...

அப்போது தான் மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது,,,


முதல் பல்லக்கில்
ஸ்ரீ ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும்
தங்களது சுவீகாரப் புத்திரனாகிய நந்தியம்பெருமானுடன் வீற்றிருந்தனர்,,,

இரண்டாவது பல்லக்கில்
ஸ்ரீ மழபாடிநாதனும் பாலாம்பிகையும்
வியாக்ரபாத முனிவரின் புத்ரியாகிய சுயம்பிரகாஷிணி தேவியுடன்
வீற்றிருந்தனர்..

சுயம்பிரகாஷிணி தேவியை சுயசாம்பிகை என்றும் கூறுகின்றனர்...

மணமக்களுடன் திருக்கோயிலைச் சுற்றி எழுந்தருளிய பல்லக்குகளை
ஆரவாரத்துடன் வரவேற்று ஆராதித்தனர் மக்கள்...






வீட்டுக்கு வீடு வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன...
மாவிலைத் தோரணங்கள் தென்னங்குருத்துகளுடன் ஆடிக் கொண்டிருந்தன...

தங்கள் வீட்டுக் கல்யாணத்தைப் போல
அத்தனை ஜனங்களின் முகங்களிலும் அப்படியொரு மகிழ்ச்சி...



மாப்பிள்ளை அழைப்பினைத் தொடர்ந்து
திருக்கோயிலில் ஸ்வாமி தரிசனம்...

திருக்கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட படங்கள்
இன்றைய பதிவில்!...




திருமூலத்தானம்
தலவிருட்சம் - பனை
அடுக்கு திருமாளிகைச் சுற்று


லக்ஷ்மி தீர்த்தம்
மாலை மயங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில்
திருக்கோயில் வாசலில் ஆயிரக்கணக்கில் ஜனத்திரள்....

அனைத்து சடங்குகளும் மங்கலகரமாக நிகழ்த்தப் பெற்று
இரவு எட்டு மணியளவில் மாங்கல்யதாரணம் நிகழ்ந்தது...

அதற்குப் பின்
நந்தியம்பெருமானும் சுயம்பிரகாஷிணி தேவியும்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவீதி எழுந்தருளினர்...


திருக்கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் இல்லங்களிலும்
பக்தர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்பட்டது...

திருக்கோயிலுக்கு எதிரே கொள்ளிட நதி.. நீரற்றுக் கிடந்தது..

நெடிய மணல்வெளியில்
கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா களைகட்டியிருந்தது..




கீழுள்ள படங்கள் உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினரால்
வழங்கப்பெற்றவை..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...


திருமாங்கல்ய தாரணம்
கீழுள்ள வைபவங்கள் திருவையாற்றில் நிகழ்ந்தவை..






அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழிண்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கையம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. அழகான படங்கள்....

    கல்யாண வைபவம் உங்கள் மூலம் கண்டு களிக்க முடிந்தது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. படங்களையும் பதிவையும் ரசித்தேன். நீரில்லாக் கொள்ளிடம். ம்....

    பதிலளிநீக்கு
  3. கல்யாண வைபவம் தரிசனம் கண்டு மகிழ்ச்சி.
    அழகான படங்களுடன் பதிவு அருமை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கொள்ளிடத்தில் வெற்றிடம். வேதனை. திருக்குளத்தில் நீரைப் பார்ப்பதே அபூர்வம். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  5. திருமழபாடி நண்பர் தமிழ் இளங்கோவின் ஊர் இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. நந்தியம்பெருமாள் சுயம்பிரகாஷினி தேவி திருக்கல்யாணத்தைப் படங்கள் மூலம் தரிசிக்கச் செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் திருமண வைப்வம் போலேயே ஆண்டவனுக்கும் மணம் செய்து மகிழ்கிறார்கள் தஞ்சைக்கு வந்தாகி விட்டதா

    பதிலளிநீக்கு
  8. படங்களும் பதிவும் அருமை துரை அண்ணா...கொள்ளிடம் இப்போது நீரில்லாமல் விற்பனைகள் நடக்கும் இடமாகிவிட்டதே! மக்களின் சுயநலம் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது..!!

    நந்திஎம்பெருமானின் திருமண வைபவம்

    பதிலளிநீக்கு
  9. நான் காலையில் போட்ட கமென்ட் எங்கே போச்சு? ஆஹா!!
    படங்களும் நந்திஎம்பெருமான் கல்யாணம் பற்றிய விவரணமும் பதிவும் மிக மிக அருமை.. அதுவும் அந்தக் குளம் படமும், கடைகள் எல்லாம் இருக்கும் படமும் அழகு....கோயில் அருகில் இருக்கும் கடைகளைப் பார்ப்பதே மகிழ்வாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன் பதிவு அருமை. அனுபவங்களை எழுத்தில் பகிர்ந்து கொள்வதே தனி அனுபவம் தான். நான் பார்த்திராத நிகழ்வுகள். நேரில் கண்டது போலிருந்தது. சிறப்பு.

    #084/2018/SigarambharathiLK
    2018/03/29
    கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
    https://newsigaram.blogspot.com/2018/03/KAVIK-KURAL-14-NANDRUM-THEEDHUM-NAKKE-SEIYUM.html
    பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
    #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
    #சிகரம்

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஜி அழகிய திருக்கல்யாணக் காட்சிகளை காண வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. தலைப்பைப் பார்த்ததுமே நீங்கள் எங்களை அழைத்துச்செல்கின்ற இடத்தை உணர்ந்தேன். நிறைவான தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான் கல்யாணம்.. அந்தக் கடைகளைப் பார்க்க ஆசையாக இருக்கு.. நான் வள்ளி தெய்வானையின் திருக்கல்யாணம் பல தடவைகள் பார்த்திருக்கிறேன் ஊரில்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கல்யாணம். கொள்ளிடம் மட்டுமல்ல, காவிரியும் கல்லணையும் கூடக் கலங்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..