நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 20, 2018

அன்பினில் வாழ்க..தாமரைப் பூவுல சாமி இருக்கும்....ன்னு சொன்னாங்களே!..
ஒரு காலத்துல வீட்டுக்குள்ளே கூடு கட்டினோம்!..
இப்போ.. நிலைமை இப்படியாகிப் போச்சு!..
ஏதோ.. கிடைச்சதைக் கொண்டு சந்தோஷம்
ஆறு கரை புரண்ட காலம்
ஒரு துளியாவது வேணுமே!..
இப்படி ஆகிப் போச்சே!..
கஜ கர்ணம் போட்டாலும்!?....
அண்ணே... எனக்கும் கொஞ்சம்!...
இயற்கை ஆர்வலர்களால்
சிற்றுயிர்களுக்கு வாழ்விடங்கள் அமைக்கப்பட்டாலும்
அவற்றிலும் பற்பல பிரச்னைகள்...

நல்லவங்க இதையாவது செஞ்சாங்களே!..
என்ன செய்ய?...  எனக்கும் சந்ததி வேணுமே!..
இவற்றுக்கெல்லாம் தீர்வு -
இயற்கையைப் பேணுதல் ஒன்றே!...

நல்லவர்க்கு மட்டுமே வனம்!...
மனிதன் இயற்கையை சேதப்படுத்தாமல் விட்டு வைத்தால்
இயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்...

தெய்வமே.. எங்களைக் காப்பாற்று.. 
இறைவனே இயற்கை.. இயற்கையே இறைவன்..
இயற்கை இருக்கட்டும்.. இயற்கையாகவே இருக்கட்டும்!.

இயற்கை இருக்கும் வரைக்கும் தான் நமக்கு இங்கே இருக்கை!..


இன்னைக்கு வழக்கம் போல அண்ணன் வீட்டுக்குப் போகணும்...
நாமும் வாழ்வோம்..
வையகத்தையும் வாழ வைப்போம்..

இயற்கையும் வாழ்க..
இயற்கையோடு இணைந்த இன்பமும் வாழ்க!..
***

15 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  பொருத்தமான நாளில் அழகிய கருத்தோவியங்களின் களஞ்சியத்தை காண்பித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. // இயற்கை இருக்கும் வரைக்கும் தான் நமக்கு இங்கே இருக்கை! //

  ஆஹா...

  பதிலளிநீக்கு
 3. வாவ்! ரொம்ப அருமையா இருக்கு துரை செல்வராஜு அண்ணா..

  அந்த கஜ கர்ணம் அடிக்கும் குருவி ஆஹா!! அழகு...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள்.
  தெய்வம் காப்பாற்றும் குருவியை .
  எங்கள் குடியிருப்பில் எங்கள் வீட்டு எதிரில் மீண்டும் குருவி வந்து இருக்கு.

  சிட்டுக்குருவி பறந்து செல்வதை காணும் போது மகிழ்ச்சி ஆகுது மனது.

  பதிலளிநீக்கு
 5. இயற்கை இருக்கும் வரை தான் நமக்கு இருக்கை/// செமை வரிகள் அண்ணா...உண்மையான வரிகள்

  தெய்வமே காப்பாற்று...ஆஹா அழகு!!! குருவி....குருவியின் உடலில் இருக்கும் அந்தக் கலர்...டிசைன் என்ன அழகு இல்லையா...கையில் பிடித்துத் தடவிக் கொடுக்க வேண்டும் போல இருக்கு....

  கீதா

  பதிலளிநீக்கு
 6. தாமரை மொட்டும் அதன் மேலிருக்கும் அந்த ஒற்றைக் குருவியின் அத்தனை அழகு!! படங்கள் அத்தனையும் சிறப்பாகவும் இருக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. மனிதன் சேதப்படுத்தாமல் வைத்திருந்தால் இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்!!//

  ஆமாம்..ஆனால் இன்னும் அழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. போட்ட கருத்தைக் காணோம். இன்னைக்கு நடக்கும்போது (பூங்காவில்), சிட்டுக்குருவிகளைப் பார்த்தேன். அதில் ஒன்று சூல் கொண்டதுபோல் தோன்றியது. இங்கு சிட்டுக்குருவிகளைப் பற்றிய இடுகை.

  எல்லாமே சிட்டுக்குருவிகளா? அல்லது சில பல பட்டுக்குருவிகளையும் போட்டுள்ளீர்களா?

  தெய்வீக இடுகைக்கு Waiting. ஏகன் அனேகன் என்ற வார்த்தைகள் சில நாட்களாக மனதில் சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. ரசித்தேன் அண்ணா அதுவும்...கடைசி வரிகள் இயற்கையும் வாழ்க...இயற்கையோடு இணைந்த இன்ம்பமும் வாழ்க!!! அருமை..

  கீதா

  பதிலளிநீக்கு
 10. ஆஹா... அருமையான படங்களுடன் இன்றைய நாளுக்கு அர்த்தம் சேர்த்தீர்கள். இறைவன் காலடியில் விழுவது போன்ற படம் மனிதன் காலடி போலவும் தோன்றுகிறது. " ஏய்.. மனிதா... உன்னைப்போலவே நாங்களும் உயிர்கள்தான்.. சுயநலமாய் இருக்காதே.. கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறோம்" என்று கேட்பது போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. படங்களுக்குப் பொருத்தமான சொற்றொடர்களை அமைத்து அசத்தியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. அனைத்துப் படங்களும் பார்க்க பார்க்க ஆசையா இருக்கு... சிட்டுக்குருவிகளையும் பார்த்து அலுக்காது.

  பதிலளிநீக்கு
 13. பாராட்டுகள். இன்னும் முற்றிலும் சிட்டுக்குருவி இனம் அழிந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன். மாறி வரும் கட்டிட அமைப்புகள், சுற்றுச் சூழல் சிட்டுக் குருவிகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை.

  பதிலளிநீக்கு
 14. அருமையான படங்கள் அதை ஒட்டிய விளக்கங்கள். பறவை ஆர்வலர்கள் சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடங்கள் அமைத்துத் தருவதாக கோமதி அரசு கூறி இருந்தார். பொதுவாகச் சிட்டுக்குருவிகள் மனிதரோடு கூடி வாழும் தன்மை கொண்டது.

  பதிலளிநீக்கு