நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 10, 2017

அங்கும் இங்கும்

கடந்த வியாழனன்று திருமயிலை தரிசனம்..

அன்றைக்குப் பிரதோஷம்.. எனவே திருக்கோயிலினுள் மக்கள் வெள்ளம்..

அங்கே எடுக்கப்பட்ட சில படங்கள்..











திருமயிலை தரிசனம் முடிந்தபின் அருகிலிருக்கும்அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில்..

முண்டகம் எனில் தாமரை..
அன்னையில் விழிகள் தாமரைப் பூக்களை நிகர்த்தவை....

எனவே - முண்டகக்கண்ணி... தாமரை விழியாள்..




திருக்கோயிலை மிகவும் சுத்தமாக பராமரிக்கின்றார்கள்.. பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கின்றது..

தீர்த்தமும் திருச்சாம்பலும் வழங்கி அருளிய முண்டகக்கண்ணியம்மன்
உண்டு மகிழ்வதற்கு அன்னமும் பாலித்தாள்..


அன்னையின் விதானம்


கோடி கோடியாய் நலங்களை வாரி வழங்கியருளும்
முண்டகக்கண்ணி அம்மனுக்கு இங்கே ஓலைக் கூரையே விதானம்...

தொடர்ந்து -
அருள்மிகு கோலவிழி பத்ரகாளியம்மன் திருக்கோயில்..




இங்கும் தூய்மை அழகு ஆகியன பிரகாசித்தன..

திருக்கோயிலினுள் நுழைந்ததுமே - சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்..

அம்பிகைக்கு நிவேதனம் ஆகிய பொங்கல்..

உயிரினுள் கலந்து பரவியது - பொங்கலின் சுவை..


சென்னையில் சில தினங்கள் மட்டுமே..

அங்கே கண்ட காட்சிகள்..

எந்தக் கோணத்தில் இருந்து கொண்டு அவற்றைப் பற்றிச் சொல்வது!?..

வெயில் என்றாலும் மழை என்றாலும்
ஆயிரம் சிறகுகளுடன் அவரவரும் பறந்து கொண்டிருக்கின்றார்கள்..

இயந்திர வாழ்க்கை என்பார்கள்..

இயந்திரமும் நாமும் ஒன்றா!..

ஆனாலும்
இயந்திரமும் தோற்றுப் போகும்..

எதையெல்லாம் அடைந்திருக்கின்றார்கள்?..
அதற்கு விலையாக எதையெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள்?..

சென்னையிலிருந்த போது
வியாழக்கிழமை முன்னிரவுப் பொழுதில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது..

அதற்குப் பின் வெகு நேரத்திற்கு ஒவ்வொரு வீட்டிலும் முடங்கிப் போனது இயல்பு நிலை..

ஆனாலும் -

நாளைக் காலையில் சீக்கிரம் எழவேண்டும்.. என்ற சிந்தனையுடன்
அன்றைய பொழுது கடந்து செல்கின்றது...

மீண்டும் இனிய உதயம்..




சென்னைக்கு வாழ்த்து சொல்லியபடி
நமது பயணம் தஞ்சையை நோக்கித் தொடர்ந்தது..

வாழ்க நலம்!..
***

24 கருத்துகள்:

  1. அழகிய தரிசனம்
    அன்பின் ஜி தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி சந்திக்கலாம் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கின்றேன்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தாய் மண் தஞ்சையில், உங்கள் விஜயம் மகிழ்ச்சிகரமாக இருக்குமென நம்புகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. உங்களுடன் கோயில் உலா வந்தோம். தஞ்சையில் உங்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      விரைவில் தங்களைச் சந்திப்பேன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான தரிசனம்...

    படங்கள் அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகான தரிசனம்.
    செய்திகள் அருமை.
    ஊருக்கு வந்து இருக்கிறீர்களா?
    குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கடந்த வெள்ளியன்று தஞ்சைக்கு வந்தேன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நானும் தரிசித்துக் கொண்டேன். தாய்நாடு விஜயமா? கொண்டாடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      வெள்ளியன்று தஞ்சைக்கு வந்தேன்..
      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இதமான வெப்பதட்பம் கொண்ட எங்கள் ஊரும் நினைவிருக்கட்டும் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஆகா
    தஞ்சைக்கு வந்துள்ளீர்களா
    மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      விரைவில் தங்களைச் சந்திப்பேன்..
      தங்கள் அன்பின் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான புகைப்படம்

    பதிலளிநீக்கு
  11. கோவில் தரிசனத்திலிருந்து வெகேஷன் ஆரம்பிக்கிறதா? குவைத்திலிருந்து ஊருக்குச் சென்றிருக்கும் உங்களுக்கு ஊரில் உள்ள வெப்பம் "குளுகுளு" என்றிருக்கப்போகிறது. விடுமுறை நலமாக அமையட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      உற்றார் உறவினர் வீடுகளுக்குச் செல்வதைக் காட்டிலும் கோயில்களுக்குச் செல்வதே அதிகம்..

      சென்னையில் இருந்த சில நாட்களில் மழை பெய்து வெம்மை சற்று குறைந்தது...

      தஞ்சைக்கு வந்ததில் இருந்து மழை முகம் இல்லை.. வெக்கையாக இருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அட! திருமயிலை வந்தீர்களா சகோ! அறிந்திருந்தால் சந்தித்திருந்திருப்பேன்! அழகான படங்கள்.

    விடுமுறையா! இனிதான நாட்களாய் அமைந்திட இனியவாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      விடுமுறையில் வந்திருக்கின்றேன்.. சென்னையில் சில நாட்கள் மட்டுமே.. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..