நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 03, 2017

அன்பின் ஒளி

உலகம் சிவமயம்

ஸ்ரீ ஞான விநாயகர் துணை


ஜூலை முதல் தேதியன்று அபுதாபிக்கு வந்ததிலிருந்து
மருமகன், மகள், செல்லக்கிளியாய் பேத்தி
இவர்களுடன் மகிழ்ச்சியாய் மணித் துளிகள்..

என்ன ஒரு குறையென்றால்
அன்பின் கில்லர் ஜி அவர்களும்
அன்பின் குமார் அவர்களும் தற்சமயம் இங்கில்லாதது தான்!..

சென்ற ஆண்டிற்கு முந்தைய வருடம்
அவர்களுடன் கழித்த மாலைப் பொழுது மனதில் ஊடாடுகின்றது..

இதற்கிடையே -
நேற்று இரவில் புதிதாய் புத்தம் புதிதாய் ஒரு வரவு...

அபுதாபி மாநகரில் மடி கணினி ஒன்றினை வாங்கினோம்..

அதிலிருந்து வெளியாகும் முதல் பதிவு - இது!..

முதல் எழுத்தாக உகரம்..

தமிழின் ஐந்தாவது எழுத்து..

இதனைப் பிள்ளையார் சுழி என்பர்..

ஆனால் ஆன்றோர் தரும் விளக்கம் வேறு..

’’ உ’’ எனும் எழுத்து உலகைக் குறிப்பது..

உலகம் என்பதன் மறுவடிவம் சிவம்..

அதனாலேயே, உலகம் சிவமயம் எனச் சொல்வர்..

எண்ணியலில் (Numerology)  இலக்கம் ஐந்தின் சிறப்பு செம்மையாகச் சொல்லப்பட்டிருக்கும்..

மிகுந்த பெருமைக்குரிய எண் ஐந்து..

ஒன்று முதல் ஒன்பது வரையிலான இலக்கங்களுள் நடுவாக இருப்பது ஐந்து..

ஐந்திற்கு முன்னும் பின்னுமாக நான்கு இலக்கங்கள்..

விநாயகருக்கும் சிவபெருமானுக்கும் ஐந்தின் அடையாளங்கள் உரியன..

ஈசன் எம்பெருமானை -
நாயகன்.. நடு நாயகன்.. நடு ஆனவன்..
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன் என்றெல்லாம் சொல்வர்..

முன் - நடு - பின் - என்பதே மிகப் பெரிய விஷயம்...

சபை ஒன்றின் நடு வீற்றிருத்தல் என்பது ஒருவர்க்கு பெரும்பேறு...

ஆருருவாய என் ஆரமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளே!..

- என்றுரைப்பார் மாணிக்கவாசகப் பெருமான்..

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணியவள் அபிராமி!.. - என்கின்றார் அபிராமிபட்டர்..

அந்த நிலையைத் தரவல்லன- அறிவும் ஞானமும்..

எங்கும் எதிலும் நடு நிலை காத்தல் மாண்பாகும்..

நடுநிலை தவறுதல் மிகப் பெரும் பாவம் என்று சொல்லி வைத்தனர்..

நீதி மன்றத்தில் நடு இருக்காமல் ஓரம் சொன்னவர்க்கு ஏற்படும் கதியை ஔவையார் எடுத்துரைக்கின்றார்..

நடு!.. - என்று, விதை ஒன்றினை விதைப்பதையும் கூறும் தமிழுலகம்..

நடு என்பதைக் குறித்து மேலும் மேலும் விவரிக்கலாம்..

அவற்றை மறை பொருளாகக் குறிப்பதே உகரம்..

அந்த உகரம் தமிழில் ஐந்தாவது எழுத்து என்பது சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பு..

உயிர், உடல், உறவு,
உள்ளம், உணர்வு, உவப்பு,
உணவு, உடை, உறையுள் -

எனும் பொருள் மிகுந்த சொற்கள் - செந்தமிழுக்கே  உரிய சிறப்பு..

எத்தனையோ சிறப்புடைய தமிழின் மற்றுமொரு சிறப்பு எண்ணலங்காரம்..

அப்பர் பெருமான் திங்களூரில் விடம் தீர்த்தருளிய திருப்பதிகம் - எண்ணலங்காரத் திருப்பதிகம் ஆகும்..

ஞான சம்பந்த மூர்த்தியும் எண்ணலங்காரத் திருப்பதிகம் அருளியுள்ளார்..


புதிதாக தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினாலும்
புதிதாக கணினி வடிவமைத்தாலும் -
அதில் முதலில் திரையிட்டுப் பார்க்கும் திரைப்படம் - திருவிளையாடல்...

காலத்தால் மறக்க முடியாத திரைப்படம் திருவிளையாடல்..

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் எண்ணலங்காரம் கொண்டு
கன்னித் தமிழுக்கு சிறப்பு செய்த பாடல் இன்றைய பதிவில்...

எழுத்துருக்கள் இன்னும் சரியாக புதிய கணினியில் பொருந்தவில்லை போன்றதொரு நினைப்பு...

பதிவைக் காணும் போது குறையேதும் தென்பட்டால் குறிப்பிடவும்..

வரும்நாட்களில் சரி செய்து விடலாம்..


ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்..
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்..

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்..
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்..

பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்..

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்..
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்..

காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும்
நிலையான ஊற்றாகி நின்றானவன்

அன்பின் ஒளியாகி
நின்றான் அவன்!..

அன்பின் ஒளியாகிய எம்பெருமான் 
எல்லா உயிர்களும் மகிழ்ந்திருக்க
உள்ளம் நெகிழ்ந்திருக்க நலம் அருள்வானாக!..

வாழ்க நலம்..
*** 

16 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  நலமுடன் அபுதாபி சென்றமை அறிந்து மகிழ்ச்சி.
  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. இடமாற்ற்ம் மன மாற்றம் தருமா. வாழ்த்துகள் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   அன்பின் உறவுகளைக் கண்டதும் உற்சாகம்.. மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. புதிய மடிக்கணினிக்கு வாழ்த்துகள். எழுத்துருவில் மாற்றம் எதுவும் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   எழுத்துருவில் மாற்றம் ஏதும் தென்படாதது குறித்து மகிழ்ச்சி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அபுதாபி வருகையும், குடும்பத்தினருடனான உங்கள் மகிழ்ச்சியும் நிறைவைத் தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பேத்தியுடன் இருப்பது மகிழ்ச்சியான தருணம்.
  புதிய மடிகணினிக்கும், அதில் பார்த்து பகிர்ந்த செய்திகளுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

 7. வாழ்த்துக்கள் ஐயா..
  புது மடிகணினிக்கும்...மகிழ்வான தருணங்களுக்கும்...

  பதிலளிநீக்கு
 8. அன்புடையீர்..

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 9. எழுத்துருவில் எந்த மாற்றமும் இல்லை! புது மடிக்கணினிக்கு வாழ்த்துகள்! மகிழ்வான தருணங்கள்! எப்போதும் இது நிலைத்திருக்க இறைவனிடம் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!

  துளசி, கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..