நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 16, 2016

வாக்கு தவறாதீர்..

இன்று தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல்!..

அரவக்குறிச்சி தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர -
232 தொகுதிகளிலும் காலையில் இருந்தே வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..


தமிழகம் முழுதும் 5.77 கோடி வாக்காளர்கள்..

இவர்களுடைய பொன்னான வாக்குகளுக்காக - 3,728 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்..

வாக்குப் பதிவிற்காக 65,486 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன..

இவற்றுள் 27,961 சாவடிகள் CCTV  கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகின்றன..இதுவரை - வாக்குப் பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றது..

தேர்தல் பணியில் சுமார் 4,70,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நாளிதழ்கள் வாயிலாக அறியமுடிகின்றது..
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.. (0547)

இந்த வையகத்தினை நீதி நெறிமுறையுடன்
மன்னவன் காப்பாற்றுவான் எனில், 
அந்த நீதி நெறிமுறையே 
அம்மன்னவனைக் காப்பாற்றும்!..

வள்ளுவப் பெருந்தகையின் 
அமுத வாக்கு
இன்றைய குடியாட்சிக்கும் பொருந்தும்..

வாழ்க தமிழினம்..
வளர்க தமிழகம்!.. 
* * * 

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நல்லாட்சி மலர வேண்டும்.
  வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   உண்மையில் நல்லாட்சி மலர வேண்டும்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. இனியாவது நல்லாட்சி மலரட்டும் வாழ்க ஜனநாயகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   மீண்டும் நல்லாட்சி மலரட்டும்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதிவு செய்வேன், அடுத்த வாரம். (தஞ்சாவூர்..தள்ளிவைக்கப்பட்டு விட்டதல்லவா?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தஞ்சையில் இதுவரை இப்படி நேர்ந்ததில்லை..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமை. எனக்கு தமிழகத்தில் வாக்குரிமை இல்லை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தமிழகத்தில் வாக்குரிமை இல்லையா!.. நல்லவேளை தப்பித்தீர்கள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வாக்களித்தேன் ஐயா...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் வாக்களித்தமைக்கு மகிழ்ச்சி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. நானும் வாக்களித்தேன். வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பதிவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் வாக்களித்தமைக்கு மகிழ்ச்சி.
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. என்னால் வாக்களிக்க இயலவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களுக்கு நல்வரவு..

   வாக்களிக்க இயலாதபடிக்கு - ஏதோ ஒரு சூழ்நிலை..
   அடுத்து தேர்தல் வரட்டும்.. பார்க்கலாம்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. ஆஹா பதிவு செய்து விட்டேன். திருவையாறு தொகுதி என்பதால்,,,

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மறவாமல் வாக்களித்தமைக்கு மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..