நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 05, 2015

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி

கண்ணன் பிறந்தான்.. எங்கள் கண்ணன் பிறந்தான்..
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான்.. எங்கள் மன்னன் பிறந்தான்..
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..  


சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரோ பவளவாயீர் வந்து காணீரே.. (23)


மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே.. (28)  



மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.. (34)


மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே.. (40)



முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே.. (41)


எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர்
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட வாராய்.. (157)




கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக் கன்று மேய்ப்பார்க்கு ஓர்கோல் கொண்டு வா
தேவ பிரானுக்குக் கோல் கொண்டு வா.. (174)


தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.. (215)


தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உளம்விட்டு ஊண்மறந்து ஒழிந்தனரே.. (254)


குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி ஊதி
கன்றுகள் மேய்த்துத் தன்தோழரோட கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டுஎன்றும் இவனையொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடிவந்து காணாய்
ஒன்றும் நில்லாவளை கழன்று துகலேந்திள முலையுமென் வசமல்லவே.. (257)



வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ள இடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்.. (334)



மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து
வண்ணக் கருங்குழல் மாதரொடு மணந்தானைக் கண்டாருளர்.. (336)

 பெரியாழ்வார் அருளிய திருப்பாசுரங்கள் 
பதிவினில் இடம் பெற்றுள்ளன..


நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும்
அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகங்கள் தோறும் பிறக்கின்றேன்!..
* * *

ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளிய
மதுராஷ்டகம்


மூங்கில்களும் புல்லாங்குழல் வடிவாகி
புருஷோத்தமனின் புகழினைப் பாடி உய்வடைகின்றன..

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியாகிய இன்று
நாமும் - மன்னவன் புகழினைப் பாடி உய்வடைவோம்!..

வஸுதேவ ஸுதம் கம்ஸ ஜானூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் வந்தே கிருஷ்ணம் ஜகத்குரும்..
* * *

இன்று ஆசிரியர் தினம்!..

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்!..




ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்
அன்பின் வணக்கங்கள்!..

கல்வியும் ஞானமும் தழைத்தோங்குவதாக!..
வாழ்க நலம்!..
* * *

19 கருத்துகள்:

  1. கண்ணன் பிறந்த நாளன்று
    பேயாழ்வார் பாசுரங்களைப்
    பருகிப் பாடிட
    அருளிய நும் அன்புக்கு
    எவ்விதம் நான் நன்றி சொல்வேன்.

    அதுவும் கண்ணன் அருளே.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வெகு நாட்களுக்குப் பின் தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  2. வணக்கம்,
    வாழ்த்துக்கள் படமும் பாடலும் அருமை, அழகாக சொல்லியுள்ளீர்கள், மனதை மயக்கும் பாடல் அதனோடு படம்.
    காணொளி தான் காணயிலவில்லை,,
    வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி தங்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
    காணொளி மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. ஆலிலைக் கண்ணனின் பாசுரங்களும் பரவசமூட்டும் படங்களும்
    அற்புதம் ஐயா!

    நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. அத்தனை அழகு!
    மாதவனின் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டி வாழ்த்துகிறேன்!

    ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. பெரியாழ்வாரின் பாசுரங்களில் சிலவற்றை எடுத்துப் பகிர்ந்ததற்கு நன்றி.உங்கள் கண்ணன் அருளட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மாயக்கண்ணனின் கோகுலாஷ்டமி, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. மாயக் கண்ணனின் அனைத்து கோலங்களையும் குறும்புகளையும் காணக்கண் கோடி வேண்டும். அனைத்தும் கண்டு களித்தேன். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ...!
    மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள். ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  8. கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கண்ணன் அழகு. கவிதை அழகு. புகைப்படங்களும் அழகு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. கண்ணன் பாடல்களும், எம். எஸ் அம்மா பாடலும் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..