நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 14, 2015

சந்திப்புத் திருவிழா

திருவிழாவில் சந்திப்பு - என்பது எதிர்பாராத மகிழ்ச்சி..

சந்திப்பு தான் திருவிழா - எனும் போது -
கூடுதலான எதிர்பார்ப்பு.. கூடுதலான மகிழ்ச்சி!..

அந்த எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் - இதோ வெகு அருகில்!..


அன்னைத் தமிழுக்கு அணி செய்யும் விதமாக
சீர்மிகும் புதுக்கோட்டை மாநகரில்


வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா - 2015.,
2015 அக்டோபர் 11 - ஞாயிறன்று மலர்கின்றது..


பலவகையிலும் முத்திரை பதித்து - 
எல்லா ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்து வரும் 
திருமிகு நா. முத்து நிலவன் அவர்களுக்கும் 
திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
தோளுக்குத் தோளாக துணை நிற்கும் 
புதுக்கோட்டைப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..

அமைப்புக் குழு, நிகழ்வுகள், விருதுகள், நன்கொடை, நூல்வெளியீடுகள், வருகைப் பதிவு படிவம், வருகைப் பதிவு பட்டியல் மற்றும் பதிவர்களின் பார்வையில் என - அனைத்து விவரங்களும்,

வலைப்பதிவர் சந்திப்பு - 2015., புதுக்கோட்டை 

- எனும் தளத்தில் காணக் கிடைக்கின்றன

அழகுத் தமிழுக்கு அணி செய்யும் வலைப்பதிவர்கள் அனைவரையும் விழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்..


கவின்மிகும் விழாவில் -

கவிதை ஓவியக் கண்காட்சி
வலைப்பதிவர்களின் அறிமுகம்
தமிழிசைப் பாடல்கள்
நூல் வெளியீடு
குறும்பட வெளியீடு
பதிவர்களுக்கு விருது வழங்குதல்
தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியிடுதல்
பதிவர்களுக்காக போட்டிகள் - பரிசுகள் வழங்குதல்
புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
பதிவர்களின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை

- என, நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது..


நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வலைப்பதிவர் கையேடு வழங்கப்பட இருக்கின்றது..

அத்துடன் - குறிப்பேடு, பேனா இவற்றுடன் பயணக் கைப்பை ஒன்றையும் மனமுவந்து வழங்குகின்றனர்.

இடையில் - நொறுக்குத் தீனிகளும் தேநீரும்..

முக்கியமாக - உணவு..

நமக்கு சோறு முக்கியம்!.. சோறு தான் முக்கியம்!..

இந்த அடிப்படையில்,

புத்தம் புதுக்காலையில் -

இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, காபி/தேநீர்!.. (போதுமா!..)

வெயில் விளையாடும் மதியத்தில் -

மணக்கும் பசு நெய் தவழும் முல்லை அரும்பு போல சோறு, கூடவே பருப்புப் பொடி, கீரைக் கூட்டு, பருப்பு உருண்டைக் குழம்பு, மோர்க்குழம்பு, வாழைப்பூ வடை, வெங்காய பகோடா, வற்றல், வடகம், அப்பளம்!..

(பாயாச வாளி இன்னும் வரலை!.. - என, நினைக்கின்றேன்!..)

மாலைப் பொழுதில் மயக்கத்தில் -

வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், புட்டு, இடியாப்பம், கொத்தமல்லி சட்னி, காபி/தேநீர்!..

வேற.. எங்கே.. புதுக்கோட்டைக்குத் தான்!..
இதுக்கும் மேல - இரவின் மடியில் -

நவதானிய தோசை, வெஜிடபுள் தோசை, புதினா தோசை, முடக்கத்தான் தோசை + தூதுவளைச் சட்னி!..

மறுபக்கம், அதே இரவில் -
பிரத்யேகமா புலால் பிரியர்களுக்கு (மட்டும் ..ன்னு சொல்றாங்க!..)

முட்டை மாஸ்!.. (சுடச்சுட வாழை இலையில கட்டித் தருவாங்களாம்.. அப்படியே.. இலையோட சேர்த்து தின்னுடலாமாம்!.. அம்புட்டு ருசியாம்!..)

சுத்து பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, முட்டை லாப்பா, ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசை.. + பாயாக் குழம்பு, கெட்டிக் குழம்பு, கோழிக் குழம்பு..

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்..
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்!..

சாப்பாட்டு விஷயத்திலும் அப்படித்தான் - என்று நினைக்கின்றேன்!..

மேலும், நண்பர்கள் சிலர் - பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் - தமது நூல் பிரதிகள் பலவற்றை வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றார்களாம்..


அன்புக்குரிய வலைப்பதிவர்கள் பலரும் -
தங்கள் தளங்களில் சந்திப்புத் திருவிழாவிற்குத் தோரணம் கட்டி விட்டார்கள்..

அகிலத்திற்கும் அழைப்புகளாம் தன்னானே.. னானே..
- என்று, திருமிகு கில்லர் ஜி அவர்கள் தளத்தில் உல்லாசப் பாட்டு!..

போகுமிடம் களைகட்டுது 
- என்று, திருமிகு தேன்மதுரத்தமிழ் கிரேஸ் - தளத்தில் கவிமழை!..

கவிமழைச் சாரல் சிலுசிலுப்பு
தமிழொடு நடக்கக் கலகலப்பு!..

அழைப்பிதழ் இனிதாய் பளபளப்பு
அன்பினில் இதயம் மினுமினுப்பு!..

- என்று மகிழ்வுடன் கருத்துரை வழங்கினேன்..

புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே.. தங்கம்!..
- என, திருமிகு இளைய நிலா -  தளத்தில் தங்கத் தமிழ்த் தோரணங்கள் ஆடுகின்றன..


அன்புக்குரிய சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் -
வித்தகர்கள் - எனும் தனது நூலினை விழாவில் வெளியிடுகின்றார்கள்..


வலைப்பதிவர் திருவிழா - 2015 நிகழ்விற்கென, தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது..

அதன் விவரம் -

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

நன்கொடை அளிப்பவர்கள் - இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்..

நான் இன்று தான் - எனது பங்களிப்பினை வழங்கினேன்..

இதற்கிடையே -

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில்,



தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும்

ஐந்து வகையான கட்டுரைப் போட்டிகள். வகைக்கு மூன்று வீதம் மொத்தம் வழங்கப்பட இருக்கும் தொகையின் மதிப்பு ரூபாய். 50,000!..


ஒவ்வொரு பரிசுடனும் -
தமிழ்க் களஞ்சியம் - இணையம் வழங்கும் கேடயமும் உண்டு!..

ஆக, எல்லாவகையிலும் சிறப்புற நிகழ இருக்கின்றது - சந்திப்புத் திருவிழா!..


சென்ற ஆண்டு மதுரை - சந்திப்பிலும் கலந்து கொள்ள இயலவில்லை..

அப்போது, நினைத்துக் கொண்டேன் - அடுத்து வருடம்.. - என்று..

இந்த ஆண்டும் இயலவில்லை!..

மனம் மட்டும் - அங்கே!.. புதுக்கோட்டையில்!..

காலம் கனிந்து வரும்..
அப்போது கனவுகள் மெய்ப்படும்!..

திருமிகு நா. முத்துநிலவன் அவர்களுக்கும்
அவருடன் ஓய்வறியாது உழைக்கும்
தோழமைகளுக்கும் அன்பின் வணக்கங்கள்!..

வாழ்க நலம்!.. 
* * *

27 கருத்துகள்:

  1. வலைப் பதிவர் சந்திப்பு பற்றிய சிறப்பானதொரு பதிவு ஐயா
    தாங்களும் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன்
    நன்றி ஐயா
    காலம் கனிந்து வரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சிதான்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. உடன் கைகோர்த்து பதிவெழுதிய உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகாக... விளக்கமாக... அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் அய்யா... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      சிறப்புடன் வழங்கும் தங்கள் பணியும் மகத்தானது..
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. புதுகைபதிவர் திருவிழாவைப் பற்றிய தகவல் களஞ்சியமாக இருக்கிறது பதிவு!!! மிக அருமை@!! புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. மனம் மட்டும் புதுக்கோட்டையில்..... தில்லியிலும் அதே நிலை.....

    சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      உண்மையே அதுதான்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வணக்கம்,
    அப்போ தாங்கள் வரவில்லையா?????????,
    ஒட்டகம் வாங்க சொன்னதாக,,,,,,,,,
    தாங்கள் வருவதாக நினைத்தேன், மனம் இங்கே, அருமையான பகிர்வு,
    சாப்பாடு அமர்க்களம்,
    வாருங்கள் ,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
      கலகலப்பான கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. கலகலப்பான கருத்துரையா?
      தாங்கள் அப்போ வரவில்லையா?

      நீக்கு
  7. ஐயா!.. இது உங்க வலைப்பூ தானா????......

    ஆச்சரியரித்தில் நான்!
    அசத்தீட்டீங்க போங்க.. ! தொகுப்பு அற்புதம்!..

    வாயெல்லாம் ஊறுதையா சாப்பாட்டு வகையாறாக்களைப் பார்க்கும்போது!
    போட்டிகள்!.. பரிசில்கள்!.. அனபளிப்புகள் என்று தூள் பறக்குது செயற்பாடுகள்!

    அமர்க்களம்தான் ஐயா!
    இந்த வருடமும் கலந்துக்க முடியலை என்னால்!..:(
    ஏக்கம் துக்கமாகி ஏன் இந்தப் பிறப்பு எனக்குன்னு
    சலிச்சுக்குறவரைக்கும் போகுது!..:’(

    எல்லாரையும் ஒருசேர ஒரே இடத்தில பார்க்கக் கிடைக்கணுமே!.

    எனது பதிவையும் இங்கு குறிப்பிட்டுத்
    தங்கள் பதிவுத் தொகுப்பைத் தந்தமைக்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த தங்கள் கவிதை அருமை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. அன்பின் ஜி
    அசத்தலோ அசத்தலான பதிவு
    மாநாட்டைப் பற்றிய பதிவுகளில் இதுதான் அட்டகாசமாக பதிவு இதை உரக்கச் சொல்வேன்
    உறைக்கச் சொல்வேன்
    உலகுக்கு..
    அருமை வாழ்த்துகள்...
    புதுக்கோட்டை பதிவர்கள் யாரும் காணாத எனது பதிவையும் முன்னிலை படுத்தியது கண்டு மனம் மகிழ்ந்த நன்றி.

    இன்றைக்கு ராத்திரி ஒட்டகம் இங்கேயே நிற்கட்டும் நான் ஃபுல்லா கவனிச்சுக்கிறேன் ஜி
    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த தங்கள் ஏலேலோ பாட்டு அருமை..

      ஒட்டகம் அங்கேயே இருந்தால் - கவனித்துக் கொள்ளுங்கள்..
      பாவம்.. அது.. நிறைய தண்ணி குடிக்கும்!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. அருமை அருமை! மிக மிக அருமையான தொகுப்பு! அனைத்துத் தகவல்களும் அடங்கிட ஒரு பெட்டகமாய் அருமையாய் தந்துள்ளீர்கள் ஐயா! மிக மிகச் சிறப்பான விழா பற்றிய தொகுப்பு....வார்த்தைகல் இல்லைச் சொல்லிட....வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த பதிவுகளில் தங்கள் பதிவுகளும் மகத்தானவையே!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  10. அருமையான அசத்தலான பதிவு சார். தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  11. பதிவர் விழா விபரங்களை உங்களுக்கே உரித்தான பாணியில் அழகழகான படங்களுடன் பகிர்ந்தமை வெகு சிறப்பு! பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  12. அய்யா வணக்கம். நமது விழாப் பற்றிய பதிவர்களின் பதிவுகளிலேயே கலக்கலான (வெர்ஸடைல்?) பதிவு என்றால் இதுதான்... தகவல்கள், தள அறிமுகங்கள், அதற்கான தனித்தனிப் படங்கள் என அற்புதமாக உள்ளது அய்யா. மிக்க நன்றி தங்கள் நன்கொடையும் வந்தது, மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்.
    (தாமத வருகைக்கு மன்னிக்க..எங்கள் நண்பர்கள்தான் கருத்திட்டுள்ளார்களே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வணக்கம்.. தங்களது பாராட்டினுக்கு மிக்க நன்றி..

      தாங்கள் பல வேலையாக இருக்கின்றீர்கள்..
      தாமத வருகைக்கு மன்னிப்பு என்ற வார்த்தை - அதெல்லாம் வேண்டாம்!..

      மனதை நெகிழச் செய்கின்றது..
      உழைக்கும் வர்க்கத்திற்கு ஓய்வென்பது ஏது!..

      மேலான வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பதிவர் விழா சிறப்பு பதிவு அருமை
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..