நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 12, 2013

சதய விழா

ஸ்ரீபிரகதீஸ்வரர் திருக்கோயில். 

தஞ்சை பெரியகோயில் எனப்படும் இத்திருக்கோயில் - தஞ்சைக்கு மட்டுமல்ல, அகண்ட பாரதத்திற்கு மட்டுமல்ல - அகில உலகத்திற்கும்,

தமிழரின் கலைத் திறனுக்கும் அளப்பரிய ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் - கலைப்பெட்டகம்!..


மாமன்னன் ராஜராஜ சோழன் - இத்திருக்கோயிலைஎழுப்பி  மங்கல நீராட்டு செய்தபோது இத் திருக்கோயிலின் திருப்பெயர் ''ராஜராஜேஸ்வரம்''  என்பதாகும்.


புராண வரலாற்று சிறப்புடன் திகழும் இத் திருக்கோயில் - காணும் தோறும் புதிய தகவல்களைத் தருகின்றது என்பது - அரிய செய்தியாகும்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் - சதய நட்சத்திரத்தன்று - திருக்கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் - இந்த ஆண்டும் 10/11 அன்று தொடங்கிய 1028ஆம் சதய விழா நேற்று (11/11) இரவு இன்னிசை நிகழ்ச்சியுடன் மங்கலகரமாக நிறைவு பெற்றது. விழாவினை முன்னிட்டு திருக்கோயில் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.








மாமன்னன் ராஜராஜ சோழனின் பன்முகங்களையும் அருமை பெருமைகளையும் விளக்கும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டிருந்த பந்தலில் - தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள்,லய நாத சங்கமம், மோகினி ஆட்டம்,கவியரங்கம், பட்டி மன்றம் ஆகியனவும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முதல் நாள் - பன்னிரு திருமுறை வீதியுலா - நான்கு ராஜ வீதிகளிலும் கோலாகலமாக நிகழ்ந்தது.

வெகுகாலமாக  பன்னிரு திருமுறைகளைச் சுமந்தபடி, ராஜவீதிகளில் வலம் வந்த வெள்ளையம்மாள் - சிவனடி சேர்ந்த பிறகு,

இவ்வாண்டு - திருவையாறு - ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் யானை - தர்மாம்பாள்  இறைபணியை மேற்கொண்டு பன்னிரு திருமுறைகளைத் தாங்கியபடி பவனி வந்தது - பக்தர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது.

இரண்டாம் நாள்  -

யாக சாலையில் புண்ணிய நதிகளின் நீரால்  கடம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, இறை சக்தியை ஆவாகனம் செய்து வேதமந்த்ர கோஷங்களுடன் பூஜைகள் நடந்தன. யாகசாலை பூஜைகள்  - பூர்ணாஹுதியுடன் - நிறைவேறி,



ஸ்ரீபிரகதீஸ்வரருக்கும் ஸ்ரீ பெரிய நாயகி அம்மனுக்கும் 47 வகையான திரவியங்களாலும் நிறைவாக பூஜிக்கப்பட்ட கடஸ்தாபன புனித நீராலும் பேரபிஷேகம் நிகழ்ந்தது.

அதன் பின் பெருந்தீபவழிபாடும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இரவு  எம்பெருமானும் அம்பிகையும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள -


வைரமுடிக் கிரீடத்துடன் ராஜராஜ சோழ மாமன்னன் இருகரம் கூப்பி வணங்கியவாறு -  உடன்வர, வீதியுலாவும் நிகழ்ந்தது

இதில் உள்ளூர், வெளியூர் அன்பர்கள் என ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு வழிபட்டு இன்புற்றனர்.

சதய விழா-  திரு. கு. தங்கமுத்து அவர்கள் தலைமையிலும்  தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு பாபாஜி ராஜா போன்ஸ்லே அவர்களின் சீரிய பங்களிப்பிலும் மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பையன் அவர்கள் முன்னிலையிலும் சிறப்புடன் நடந்தேறியது.

நகர டி.எஸ்.பி. திரு அர்ஜுன் அவர்கள் தலைமையில் குவிந்த காவல் துறையினர் பக்தர்களையும், சாலைப் போக்குவரத்தையும் சிறப்பாக கண்காணித்து - ஒழுங்குபடுத்தினர்.

தஞ்சையில் இருந்தும் - இந்நிகழ்வுகளில் முழுமையாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

எனினும்  - இயன்றவரை எடுக்கப்பட்ட படங்களை பதிவிட்டுள்ளேன்.

அனைவரும் இன்புற்றிருக்க  - 
மாமன்னன் ராஜராஜ சோழனின் நல்லாசிகளும்,

ஸ்ரீபிரகந்நாயகி உடனாகிய ஸ்ரீ பிரகதீஸ்வர ஸ்வாமியின் 
பேரருளும் அமுதம் எனப் பொழிவதாக!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

14 கருத்துகள்:

  1. வரலாறும் படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு
  3. சதய விழா படங்கள் அருமை. படங்களுடன் தகவல்கள் நிறைய கிடைக்கப் பெற்றேன்.
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. தஞ்சையிலும் தங்கள் பணி தொடர்கிறது. படங்கள் அருமை ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  5. சதய விழா பற்றி விரிவாக அறியத் தந்தீர்கள் ஐயா!
    படங்களும் அருமையாக இருக்கின்றது.
    உங்கள் தயவால் நானும் இப்படியாயினும் அறிந்துகொள்ள முடிந்ததே..
    அதுவும் அவன் செயலே...

    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், அதுவும் அவன் செயலே!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. சதயத் திருவிழா நிகழ்ச்சி பற்றிய செய்திகளை தந்தமைக்கு நன்றி. நான் சின்ன வயதிலிருந்தே கண்டு மகிழ்ந்த தஞ்சை வெள்ளையம்மாள் இருந்த இடத்தில் திருவையாறு தர்மாம்பாள் யானை இறைப்பணி செய்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  7. திருவையாறு - ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் யானை - தர்மாம்பாள் இறைபணியை மேற்கொண்டு பன்னிரு திருமுறைகளைத் தாங்கியபடி பவனி வந்தது - பக்தர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது.

    சதய விழா நேரடி காட்சிப்பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், சதய விழாவின் போது நான் தஞ்சையில் இருந்தது - பெரும் பேறு!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  8. பகிர்வுக்கு நன்றி. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..