நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 24, 2013

கவியரசர் கண்ணதாசன்கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் (24 ஜூன் 1927) இன்று.

வாழ்க்கையின் ஓட்டத்தோடு  திருக்குறள் வருவதைப் போல கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடல் வரிகளும் கூடவே வரும்.

காவியத் தாயின் இளையமகன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தவர்.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களையும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும்  - அவர் எழுதியதாக சொல்லப்படுகின்றது.

அவர் எழுதியவற்றுள் எத்தனை எத்தனையோ மேற்கோள்கள் காட்டலாம்!..

இருப்பினும் - ஒன்றே ஒன்று!...

பாடல் இடம் பெற்ற திரைப்படம் - சாந்தி நிலையம். இயக்குநர் - திரு.ஸ்ரீதர்.
மெல்லிசை மன்னர் இசையமைப்பில் சுசிலாஅம்மா பாடிய பாடல் இது.


கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்!


கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது!
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது?
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது!
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?

இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்!


பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சைப் பிள்ளை மழலை மொழியில் தன்னைக் கண்டாராம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பைத் தந்தாராம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றாராம்!...


கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளுடன் தான் 
பொழுது விடிகின்றது!

தமிழ் அறிந்தோர் - உள்ளங்களிலும் இல்லங்களிலும்!..

6 கருத்துகள்:

 1. கருத்துள்ள பாடல்...எனது முகநூலிலும் இதைப் பகிர்ந்துள்ளேன்...

  https://www.facebook.com/dindiguldhanabalan

  பதிலளிநீக்கு
 2. திரு. தனபாலன் அவர்களின் வருகைக்கு நன்றிகள்!.. காலத்தை வென்று நிற்பவை கண்ணதாசனின் பாடல்கள்!...

  பதிலளிநீக்கு
 3. ஆம் அய்யா. தமிழ் அறிந்தோர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிக்கமற நிறைந்திருப்பவர்தான் கண்ணதாசன். கண்ணதாசனின் பிறந்தநாளில் கண்ணதாசனினை நினைவலைகளைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்!.. அவருக்கு நிகர் அவரே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரமன் கூட ஒரு கண்ணதாசன் தான்
   உன்னை படைத்த தாலே !!!

   என வரும் ஒரு பாடல் வரிகள்

   நீக்கு
  2. அன்பின் செந்தில் குமார் அவர்களே வருக!.. வருக!.. தங்களின் கருத்துரைக்கு எனது நன்றி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..