நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை நிறைநிலா
வெள்ளிக்கிழமை
அன்பின் நல்வாழ்த்துகள்
திருப்புகழ்
கதிர்காமம்
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ... தனதான
திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ... பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
***


நிறைநிலா நாளில் முருகன் வணக்கம் பாடல்பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குசித்ரா பெளர்ணமி இந் நாளில் சித்திரகுப்தனார் சரிதம் படிப்பார்கள் கோவில்களில் கஞ்சி ஊத்துவார்கள்.
அன்னை இல்லாதவர் விரதம் இருந்து உணவு படைத்து அன்னையை வணங்கி சாப்பிடுவார்கள்.
ஓம் முருகா சரணம்.
பராசக்தி தாயே சரணம்.
தங்கள் அன்பின் வருகையும் மேல் விவரமும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
நிறை நிலா நாளில் முருகன் திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
சித்ரா பௌர்ணமி நன்னாளில் இறைவனைத் துதித்து மகிழ்வோம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
சித்ரா பௌர்ணமியில்தான் அழகர் ஆற்றில் இறங்குவார். மதுரையே கோலாகலமாக இருக்கும். சித்திரைத் திருவிழா களைகட்டும். தெருவெங்கும் ஜனவெள்ளமாய் இருக்கும்.
பதிலளிநீக்குதமிழகத்தின் பெருவிழா அது...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
பத்து வருடங்களுக்கு முன் சித்ரா பௌர்ணமி நாளில்தான் என் அப்பா மறைந்தார்.
பதிலளிநீக்குசித்ரா பௌர்ணமி நாளில் சிவகதி....
நீக்குஓம் சாந்தி