நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 17, 2021

மக்கள் பணி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கொடுமையான இக்காலகட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுடையோர் சிகிச்சை பெறுவதற்காக -

தருமபுர ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் அவர்கள் -  தருமையாதீனக் கலைக் கல்லூரியில் நூறு படுக்கைகளை அமைத்து வழங்கியுள்ளார்கள்..

 மேலும் சுற்றுப் புற கிராமங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் நாள்தோறும் இரண்டாயிரம் பேருக்கு  ஆதீனத்தில் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கிடவும் ஆவன செய்துள்ளார்கள்..

மக்கள் பணியே மகேசன் பணி என்றுரைத்தனர் ஆன்றோர்.. அப்படிச் செய்பவரே தொண்டர் எனப்பட்டனர்..

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!.. என்பது ஔவையார் திருவாக்கு..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

10 கருத்துகள்:

 1. மகத்தான சேவை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 2. எவ்வளவு நல்ல சேவை இச்சமயத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது போல தொண்டர்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு சேவை. தகவல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. எனக்கும் மாயவரம் நட்புகள் அனுப்பி வைத்தார்கள் இந்த படத்தை.
  சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
  சன்னிதானம் அவர்களுக்கு வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 5. சேவைகள் தொடரவேண்டும் எனப் பிரார்த்திக்கும் சமயத்தில் இதை எல்லாம் இந்த ஊடகங்கள் சொல்வதே இல்லை என்னும் உண்மையும் மனதை வாட்டுகிறது. நல்லதொரு சேவை/அவசியமானதும் கூட. தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

  பதிலளிநீக்கு
 7. இதற்கு நான் கொடுத்த பின்னூட்டத்தைக் காணோம்!  ஆனால் மற்ற கேமேன்ட்ஸ் என் மெயில் பெட்டிக்கு வருகின்றன!  வணங்கி பாராட்டி பின்னூட்டம் கொடுத்திருந்தேனே..!

  பதிலளிநீக்கு
 8. கருத்தான, கவனமான சேவை. ஆதீனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
  நானும் தமிழ் மீடியாவை -குறிப்பாக ஆன்-லைன் மீடியாவை- எனக்கே வெறுப்பு வரும்வரை, சுற்றிச் சுற்றி வருகிறேன் தினமும். ஒரு பயலும் இதை எங்கேயும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வு பற்றி இங்குதான் தரிசிக்கிறேன்.

  தமிழ்நாடு அரசு என்னடாவென்றால், மீடியா ஆட்களும் ’களப்பணியாளர்கள்’ தான் என்கிறது. அரசு சலுகைகளும் இனி கொடுக்கப்படும்-மக்கள் வரிப்பணத்திலிருந்து. ஏன்? மக்களுக்கு நாட்டின் நல்ல நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து, அவர்களின் மனதில் தினம் பீதியையும், குழப்பத்தையும், சந்தேகத்தையும், ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பையும், குரோதத்தையும் விடாது வளர்ப்பதற்காக.. தேச சேவை..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..