நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 23, 2021

நந்தி கல்யாணம்

             

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி மாதத்தின் புனர்பூசம்

சிவநேயச் செல்வர்கள்
விரும்பியேத்தும் நாள்..

" நந்தி திருக்கல்யாணம்!.. "


ஈசன் எம்பெருமான்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை
விரும்பியழைத்துத்
திருக்காட்சி நல்கிய
திருமழபாடியில் நிகழ்கின்றது..


கடந்த ஆண்டு தீ நுண்மித்
தொற்றின் காரணமாக
திருக்கோயிலினுள்
நிகழ்ந்த வைபவம்
இவ்வாண்டு
பொது வெளியில் மக்கள்
மத்தியில் நிகழ்கின்றது...


அம்மையப்பனின்
அபிமானம் பெற்று
சிலாத முனிவருக்கு
திருக்குமாரராக அவதரித்த
நந்தீசனுக்கும்
வியாக்ரபாத முனிவரின்
திருக்குமாரியாகிய
சுயம்பிரகாஷிணிக்கும்
சுபயோக சுபதினமாகிய
இன்று மாலை
திருமழபாடி
ஸ்ரீ சுந்தராம்பிகை உடனாகிய
ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி
திருக்கோயிலில்
சீரும் சிறப்புமாக
திருக்கல்யாண வைபவம் 
நிகழ்கின்றது..



அனைவரும் திருவருளைச்
சிந்தித்து மகிழ்க..

முந்தைய ஆண்டின்
திரைக்காட்சிகள்
இன்றைய பதிவில்!...
***

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி..
-: காஞ்சிப்புராணம் :-

எந்தை நந்தீசன் திருவடிகள் போற்றி..
என் தாய் சுயம்பிரகாஷிணி
போற்றி.. போற்றி..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. நந்தீஸ்வரர் திருக்கல்யாணம்...  கேள்விப்பட்டதில்லை.   அவர் அருளை வேண்டுவோம்.  ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தாங்கள் நந்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கேள்விப்பட்டதில்லை என்பது ஆச்சர்யம்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எப்போவும் போல் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கண்டு மகிழ்வோம். படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. நந்தி கல்யாணம் பார்த்தால் "முந்திக் கல்யாணம்" வரும் என்பார்கள். எங்கே! என் தம்பி மகனுக்குப் பத்தாண்டுகளாகப் பெண் தேடியும் கிடைக்கவில்லை. நந்தியெம்ப்ருமான் தான் அருள் புரியணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கல்யாணம் என்றில்லை.. வேறு நல்ல் விஷயங்களை எதிர்பார்த்தும் வேண்டிக் கொள்ளலாம்... என் மகனுக்கும் வேலை வாய்ப்பினை வேண்டிக் கொண்டிருக்கின்றோம்... நந்தீசன் அனைவருக்கும் நல்லருள் புரிவாராக...

      மகிழ்ச்சி .. நன்றியக்கா...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள். நந்தி திருக்கல்யாண வைபவம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இன்று அழகான படங்களுடன் நந்திகேஷ்வரரின் கல்யாணத்தை தங்கள் பதிவில் பார்த்து மகிழ்ச்சி எய்தினேன். அவர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் நந்தீஸ்வர கல்யாண வைபவத்தைக் கேள்விப்பட்டதில்லை என்பது வியப்பு... வருடந்தோறும் இது பற்றி விரிவாக எழுதியிருக்கின்றேன்...

      தங்களன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நந்திஸ்வரர் திருக்கல்யாணம் காட்சிகள் கண்டு மனம் மகிழ்ந்தேன்.
    அனைவருக்கும் திருவருள் கிடைக்கட்டும்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரு மகிழ்ச்சி.. நன்றி...

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

      நீக்கு
  5. ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நந்தீஸ்வரர் கல்யாணம் - காட்சிகள் நன்று. தொடரட்டும் பக்தி மணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்பின் வழி தனபாலன்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..