நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

உலக சுற்றுலா நாள்

செப்டம்பர் - 27.

இன்று உலக சுற்றுலா நாள்..

1980ல் இருந்து உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகின்றது..

காணற்கரிய காட்சிகள் பலவும் பரந்த உலகில் விரிந்து கிடக்கின்றன..

பல்வேறு பட்ட மக்களின் கலை பண்பாடு நாகரிகம் - இவற்றை இயன்றவரை உய்த்து உணர்ந்து அனுபவித்தலே சுற்றுலாவின் நோக்கம்..


வேறெந்த நாட்டிலிருந்தும் -
வெளிநாட்டிற்கு ஒரு சுற்றுலா என்று விரலை நீட்டும் போது -

கண்ணெதிரே காட்சியாக விரிந்து நிற்பன - பாரதத்தின் சுற்றுலா தளங்கள்!..

ஆண்டுக்கு ஐந்து மில்லியனுக்கும் மேலாக வெளிநாட்டிலிருந்து -
இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதாக அறியப்படுகின்றது..

இது தான் - இவ்வளவு தான் என்றில்லாமல் -

கண்ணுக்கு இனிய மலைகள், வனங்கள், நதிகள், கடற்கரைகள் என,
பல்வேறு அழகின் சிரிப்புகளைத் தன்னகத்தே கொண்டது நம்நாடு..

பாரம்பர்யமிக்க வரலாறு, பண்பாடு - இவற்றுக்கான ஆதார பூமி - இந்தியா..

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த கட்டிடக் கலையை
நாம் கொண்டிருக்கின்றோம்!..

Elephanda Caves
வெளிநாடுகளில் இருந்து ஆன்மீக நாட்டம் கொண்டு -
புறப்படுவோரின் சரணாலயமாகத் திகழ்வது - நமது தாயகம்..

பழைமையும் புதுமையும் கலந்து விளங்கும் நாகரிகச்சின்னங்கள் தான் எத்தனை.. எத்தனை!..

மலையைக் குடைந்து வடிக்கப்பட்ட குடைவரை குகைக் கோயில்கள் தான் எத்தனை.. எத்தனை!..

உயர்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய தனித்துவமான கட்டுமானங்கள் அவை!..

வெள்ளியை உருக்கி வார்த்ததென பனி படர்ந்த இமாலயச் சிகரங்கள்.. 
பச்சைப் பட்டு போர்த்தினாற் போல மேற்கு மலைத் தொடர்கள்..

நீலச்சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண்ணாக கடற்கரை வெளி..

அவை மட்டுமா!..

ஒரு சிறு புல்லைக் கூடக் காண இயலாதபடிக்கு - பரந்து விளங்கும் பாலை நிலம்!..

மீனாட்சியம்மன் கோயில் - மதுரை
ஆயிரங்கால் மண்டபம் - மதுரை
மாமல்லபுரம்
அடர்ந்த வனங்கள், மலைச் சிகரங்கள், மலை இடுக்குகள், நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள், நதிக்கரைகள், கடற்கரைகள் - என கொட்டிக் கிடக்கும் அழகை எல்லாம் பட்டியலிடவும் கூடுமோ!..

நகரங்களில், கிராமங்களில் - என, 

விண்ணுயர்ந்த நெடுங்கோபுரங்களுடன் - கண்ணைக் கவரும் சிற்ப அற்புதங்களுடன் - விளங்கும் கோயில்கள் தான் எத்தனை எத்தனை!..

கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள் - 
இன்னும் பழைமை மாறாமல் விளங்கும் மலை வாழிடங்கள்!..

அவை அத்தனையையும் - கண்டு மகிழ இந்த ஒரு பிறவி போதுமோ!?..

தஞ்சை பெரியகோயில்
தஞ்சை அரண்மனை - மணிமாடம்
தஞ்சை அரண்மனை - காவல்கோபுரம்
தஞ்சை அரண்மனை - மராட்டிய அரசவை
தஞ்சை அரண்மனை - சரஸ்வதி மஹால்
கங்கை கொண்ட சோழபுரம்
தாராசுரம்
மனோரா உப்பரிகை - மல்லிப்பட்டினம் - பட்டுக்கோட்டை
நீலகிரி மலைரயில்
வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் மூடர்களும் மூர்க்கர்களும் நம்மிடையே இருக்கின்றனர்..

அவர்கள் அடக்கப்பட வேண்டியவர்கள். ஒழிக்கப்பட வேண்டியவர்கள்..

அங்கொன்றும் இங்கொன்றுமாக - நிகழும் வருத்தத்திற்குரிய சம்பவங்களைத் தவிர்த்து -

நம் நாட்டில் சுற்றுலா சிறப்புடனே திகழ்கின்றது..

ஹலபேடு - கர்நாடகா
கஜூராஹோ
இந்திய அரசின் சுற்றுலாத்துறை - அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நிறையவே செய்கின்றது

இந்திய சுற்றுலாத் தலங்களை இங்கே காணுக -  INCREDIBLE INDIA


இந்தியாவில் உலக பாரம்பர்ய சின்னங்கள் - 29.
இவற்றுள் - கலாச்சார சின்னங்கள் - 18.

கழுகுமலை - கோவில்பட்டி - தூத்துக்குடி
சித்தன்னவாசல் - புதுக்கோட்டை
கற்கால ஓவியங்கள் - திருமயம் - புதுக்கோட்டை
தமிழகத்தில் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளவை - 410.

இவற்றுள் -
ஆதிச்சநல்லூர் போன்ற தொல்நகர்களுடன் கூடிய பாரம்பர்ய சின்னங்கள் - 248.

பெருமைமிகு தமிழக சுற்றுலாத் தலங்களை - இங்கே காணுக!..

இருப்பினும்,

சுற்றுலாத் தலங்களின் அழகை - பெருமையை, பாழ்படுத்துவதற்கெனவே - ஒரு கூட்டம் அலைகின்றது..

கையில் கிடைத்த கூரான கம்பிகளைக் கொண்டு ஆங்கே சுவர்களில் குடைந்து கிறுக்குவதும் , சிதைப்பதும் இவற்றின் நோக்கம்..

இந்த வக்கிரங்கள் களையப்பட வேண்டியவை..

இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை..

மேலும் - தமிழகத்தின் புராதனமான கோயில்களில் திருப்பணி என்ற பெயரில் கல்வெட்டுகளைச் சிதைக்கின்றனர்.. 

சிற்பங்களின் மீது கடுமையான வேகத்துடன் கூடிய Sand Blast செய்கின்றனர்..

சமீபத்தில் கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயிலில் - மணல் வீச்சு மூலம் - சிற்பம் ஒன்று பாழாகிப் போனது..

அனைத்து ஊடகங்களிலும் இந்தச் செய்தி வெளியானதும் - அந்தச் செயல் நிறுத்தப்பட்டது..

கலை வல்லுனர்கள் - திறமையுள்ள ஸ்தபதிகள் இவர்களைக் கொண்டு -
சீரமைக்கும் பணியை நடத்த வேண்டும் - என்பது அறநிலையத் துறைக்குத் தெரியாமல் போனது - வியப்புதான்!..

நம்மவர்கள் ஆக்கியதை விட - அழித்தவைகளே அதிகம்!..


திருக்குற்றாலம்
இருப்பினும் -

இயந்திரத்தனமாகிப் போன இன்றைய வாழ்வின் அவலங்களில் இருந்து சற்றேனும் நாம் நம்மை மீட்டெடுத்துக் கொள்ள சுற்றுலா பயணங்கள் இன்றியமையாதவை!.

நமக்கு அருகிலே இருக்கக்கூடிய ஆனந்த அருவிகள் - சுற்றுலாத் தலங்கள்!..

வாழுங்காலத்திலேயே மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரக்கூடியவை!.. 

கண் கவரும் கேரளம்

இந்த நாளில், பிறந்தநாள் காண்கின்றது - கூகுள்!..

நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்!..


கவலைகளை எல்லாம் வீட்டிலேயே கழற்றிப் போட்டு விட்டு - 

அருகிலுள்ள ஏதாவதொரு சுற்றுலா தளத்தின் அழகில் - 
இயற்கை எழிலில் நாம் ஈடுபடுவோமேயானால் - 

இளமையையும் இனிமையையும் 
அழகையும் ஆரோக்கியத்தையும் 
மீட்டெடுக்கலாம் என்பது உறுதி!..

வாழ்க நலம்!.. 
* * *  

12 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு ஜி இணைப்புகளுக்கு சென்று வந்தேன் கண் கொள்ளாக்காட்சிகள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான பகிர்வு ஐயா
    ஒவ்வொருப் படங்களையும் காணக் காண
    அவற்றுள் சில இடங்களுக்காவது,
    வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆவல்
    மேலிடுகிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மைதான் ஐயா.. Elephanda Caves மற்றும் கஜூராஹோ முதலிய தலங்களுக்கு சென்று வரவேண்டும் என ஆவல் தான்!..

      தங்கள் வருகைக்கு நன்றி.. கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. சிறப்பான பகிர்வு.

    தகவல்கள் தொகுப்பிற்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. அருமையான தொகுப்பு, முதலில் வாழ்த்துக்கள்.
    தங்கள் புகைப்படங்கள் பார்க்கும் போது கவலைமறந்து சுற்றுலா சென்ற உணர்வு தான். தங்களின் பணிச்சுமைக்கிடையேயும் அழகாய் நீரோற்ற நடையில்,,,,,,,,,,,
    அருமை,அருமை,, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகை மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. உண்மைதான்1காண வேண்டிய இடங்கள் இந்தியாவில் கொட்டிக் கிடக்கின்றன.மிக அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. அருமையான அழகான படங்களுடன் பதிவு அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. பதிவும் புகைப்படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..