நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 28, 2015

ஸ்ரீராம் ஜயராம்

அலைகடல் நடுவண் ஓர் அனந்தன் மிசை
மலைஎன விழிதுயில் வளரும் மாமுகில்
கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை..
(பாலகாண்டம் - கம்பராமாயணம்)


இவ்வண்ணமாக - அமரர்க்கு உரைத்த அன்பின் வாய்மையால், 

பங்குனி மாதம் வளர்பிறை - நவமி திதி புனர்பூச நட்சத்திரத்தில் உச்சிப் பகல் பொழுதில் கௌசல்யா தேவியின் திருமகனாக - 

பாற்கடலுள் துயிலும் பரம்பொருள் ஸ்ரீராமனாக திருஅவதாரம் செய்தார்.

இன்று ஸ்ரீராமநவமி!..

வற்றாதப் பெருங்கருணை வையகத்தில் தோன்றிய நன்னாள்!..


மக்கள் நலம் பெறுதற்கு மழலையாய் வந்துதித்த வள்ளல் பெருமானைத் தாலாட்டிக் களிப்பெய்துகின்றார் - குலசேகராழ்வார்.

ஸ்ரீராமன் பிறந்த நாளில் குலசேகராழ்வார் அருளிய தமிழமுதம் பருகுவோம்!..

குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி.
எட்டாம் திருமொழி.

-: நன்றி :-
ஸ்ரீ நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
(diravidaveda.org)
 * * *
ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!..

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்திறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ!..

ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்
கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ!.

தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ!..


பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ!..

சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கண்மணியே
சிற்றவைதன் சொற்கொண்ட சீராமா தாலேலோ!..

ஸ்ரீ கோதண்டராமன் - புன்னைநல்லூர், தஞ்சை
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே
வாலியைக் கொன்றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கண்மணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ!..

மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கண்மணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ!..

ஸ்ரீ கோதண்டராமன் - தில்லைவிளாகம்
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கண்மணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ!..

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கண்மணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ!..


கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொன்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!..


ஸ்ரீராமா!.. நின்னைத் தொழுது நிற்கும் 
அடியவர்கள் அனைவரும் 
ஒரு சொல் - ஒரு இல் - ஒரு வில்
- என விளங்கி நிற்க அருள்வாயாக!..

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதய ஸீதாய பதயே நம:

ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..
ஓம்  
* * *

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
   ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
   ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..

   நீக்கு
 3. நான் எழுதி இருந்த சாதாரணன் ராமாயணத்தில் இருந்து
  /பூதேவி ஸ்ரீதேவி இருபுறம் இருக்க,
  அனைத்துலகாளும் ஆபத்பாந்தவன்,
  அனாதரட்சகன், பாம்பணையில் துயிலும்
  பரந்தாமன , அமரர் ம்ற்றேனையோர் துயர்
  துடைக்க, தீவிலங்கை அரக்கர்கோனை
  வேருடன் அழிக்க, தயரதன்தன் வேள்விக்குப்
  பலனாய், ரவிகுலத் திலகமாய் கோசலை மகனாய்
  பரத இலக்குவன் சத்துருகனன் எனும்
  மூவருக்கும் மூத்தவனாய் இராமனாய்
  அயோத்தியில் அவதாரம் செய்து/ ஸ்ரீராமனாய் பூஜிக்கப் படுபவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   ஸ்ரீராம நவமியன்று - ஸ்ரீராமனுக்கு நல்வாழ்த்து கூறி
   நமது தளத்தில் ராமகாவியம் வழங்கிய தங்களுக்கு அன்பின் வணக்கங்கள்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..

   நீக்கு
 4. புன்னைநல்லூர் கோதண்டராமரைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறே தில்லைவிளாகம் ராமரையும் பார்த்திருக்கிறேன். தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் பார்க்கவும், படிக்கவும் வாய்ப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
   ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..

   நீக்கு
 5. நல்லதொரு விடயங்களை அறியத்தந்தீர்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..

   நீக்கு
 6. படங்கள் அழகு ஐயா...
  ஸ்ரீராம் ஜெயராம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அழகான படங்கள் ஐயா...
  நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. வணக்கம்
  ஐயா.

  நல்ல விளக்கம் ஐயா.அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 9. அருமையான பதிவு அழகான படங்கள் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி.

   நீக்கு
 10. அருமையான...விஷயங்கள்...ஐயா...நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 11. தங்கள் பதிவில் பல நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள் ....நன்றி...

  வாழ்க வளமுடன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
   வாழ்க நலம்!..

   நீக்கு