ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்!..
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீராஜராஜேஸ்வரி என விளங்கும் பராசக்தி அம்பிகையைப் பற்றிய
எட்டு ஸ்லோகங்கள்.. அத்தனையும் அற்புதமானவை...
ஆயுளையும் ஆரோக்யத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும்
சர்வ மங்கலங்களையும் தர வல்லவை...
சர்வ வல்லமையுடன் எங்கும் நிறைந்திருப்பவளாகிய
அம்பிகையைத் துதிக்கும் இந்த அஷ்டகத்தில் அவளது
திருப்பெயர்களே பயின்று வருகின்றன.
அன்னையின் - அழகும் அருளும் ஆற்றலும் நிறைந்து விளங்கும் திருப்பெயர்களுடன் கூடிய அஷ்டகம் , எல்லா நாட்களிலும்
பாராயணம் செய்தற்கு ஏற்றவை...
ஒன்றிய மனத்துடன் நாளும் பாராயணம் செய்யும் போது -
அன்னையின் திருநாமங்களை உச்சரித்ததன் பலனாக -
அஷ்டகத்தின் உட்பொருளான அவளே -
நமது உள்ளத்தில் தோன்றி ஒளிர்வாள்... சத்தியம்!..
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்.
அம்பிகைக்கு ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்.
அம்பிகைக்கு ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்.
அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனி காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயெளவனா ஸுபகரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த சந்தாயினி
வாணி பல்லவ பாணி வேணு முரளி கானப்ரியா லோலினி
கல்யாணி உடுராஜபிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா நூபுர ரத்ன கங்கணதரி கேயூர ஹாராவலி
ஜாதீசம்பக வைஜயந்தி லஹரி க்ரைவேய கைராஜிதா
வீணா வேணு விநோத மண்டிதகரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா ரெளத்ரிணி பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகி வைஷ்ணவி
ப்ரஹ்மாணி த்ரிபுராந்தகி ஸுரநுதா தேதீப்ய மானோஜ்வாலா
சாமுண்டா ச்ருதரக்ஷ போக்ஷ ஜனனி தாக்ஷாயணி வல்லவி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா சூலதனு குசாங்குச தரிஅர்த்தேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாஸுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரி ஆர்யா விஸம்ஸோபிதா
காயத்ரி ப்ரணவாக்ஷராம் ருதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருதா
ஓங்காரி விநதா ஸுதார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா சாஸ்வதா ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்தா ஜனனி யா வை ஜகன் மோஹினி
யா பஞ்ச ப்ரணவாதி ரேபஜனனி யா சித்கலா மாலினி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா பாலித பக்தராஜ ரசிதம் அம்பாஷ்டகம் ய: படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ச ஐஸ்வர்ய மவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தே மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகையே!..
சந்திர கலையைச் சூடியவளே!..
ஈரேழு புவனங்களுக்கும் ஆதாரமானவளே!..
தூம்ர லோசனனை வதைத்தவளே!..
புல்லாங்குழல் ஏந்திய கோவிந்த வடிவானவளே!..
முண்ட மாலைகளுடன் சண்பக மாலைகளையும்
ரத்னாபரணங்களையும் அணிந்திருப்பவளே!..
பத்ரகாளி எனவும் வைஷ்ணவி எனவும் வராஹி எனவும்
வையகத்தில் தோன்றி தீமைகளை அழித்தவளே!..
வையகத்தில் தோன்றி தீமைகளை அழித்தவளே!..
சூலம், வில், கசை, அங்குசம் எனும்
ஆயுதங்களைக் கொண்டவளே!..
ஐம்பெருந் தொழில்களைப் புரிபவளே!..
ஓங்கார ஸ்வரூபிணியே!..
சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் வரையிலும்
பிரம்மனுடன் முப்பத்து முக்கோடித் தேவர்களையும்
ஈன்றளித்துக் காத்தவளே!..
நல்லறிவின் கலைகளாக ஒளிர்பவளே!..
சகல செல்வங்களையும் அருள்பவளே!..
விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவியானவளே!...
விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவியானவளே!...
தாயே பராசக்தி!..
நின் திருவடித் தாமரைகளில்
தலை வைத்து வணங்குகின்றேன்!..
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ