நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

வரம் தருவாய்..

இன்று ஆடிக்கிருத்திகை...

திருமுருக வழிபாடு இயற்றும் அன்பர்களுக்கும்
சிவநேசச் செல்வர்களுக்கும்
மிகுந்த சிறப்புடைய நாள்..

முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் 
ஆலயங்கள் எல்லாவற்றிலும் கோலாகலம்...

இந்த நாளில்
பழனியம்பதி வாழ் பாலகுமாரனைப் பணிந்திருப்போம்...


நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்த்ர சொரூபா  நமோ நம
ஞானபண்டித சாமீ நமோ நம - வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம - பரசூரர்


சேத தண்டவிநோதா நமோ நம
கீத கிண்கிணி பாதாநமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம - கிரிராஜ


தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள் தாராய்..


ஈதலும் பலகோலால பூஜையும்
ஓதலுங் குண ஆசார நீதியும்
ஈரமுங் குருசீர்பாத சேவையும் - மறவாத


ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழமண்டல மீதே மனோகர
ராஜகம்பீர நாடாளுநாயக - வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறிமாகயி - லையில் ஏகி


ஆதியந்த உலாஆசு பாடிய
சேரர் கொங்குவைகாவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே!...
***



முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..

சரவணபவ குக 
ஷண்முக சரணம்..
ஃஃஃ