நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 25, 2021

கருட தரிசனம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
நாச்சியார் கோயிலின்
பங்குனிப் பெருவிழாவில்
நிகழ்ந்த கருடசேவை
காணொளிகள்
இன்றைய பதிவில்..

வலையேற்றியவர் தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..

திவ்ய தேசம் - திருநறையூர்
( நாச்சியார் கோயில்)
பெருமாள் - ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
தாயார் - ஸ்ரீ வஞ்சுளவல்லி
தீர்த்தம் - அநிருத்த தீர்த்தம்
தல விருட்சம் - வகுளம் (மகிழ மரம்)
**
ஸ்ரீநிவாஸ விமானத்தின் கீழ்
கிழக்குத் திருமுகமாக
கல்யாணத் திருக்கோலம்..


இத்திருத்தலத்தின் சிறப்பு
கல் கருடன்..

பங்குனி
ப்ரம்மோத்ஸவத்தின்
நான்காம் நாள்
கல் கருட சேவை..

இன்று கருட தரிசனம்
கருடாழ்வாரின்
அற்புத தரிசனம்..



மங்களாசாசனம்..
பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன் தன்
தேரை ஊரும் தேவதேவன் சேரும் ஊர்
தாரை ஊரும் தண்தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே..
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

8 கருத்துகள்:

  1. கருட தரிசனம் மிக அருமை.
    காணொளிகள் கண்டேன்.
    ஓம் நமோ நாராயணாய

    இந்த திருவிழாவை ஒரு முறை கண்டு களித்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. அற்புத தரிசனம்.  இரண்டு காணொளிகளும் பார்த்தேன்.  அருள்மழை பொழியட்டும்.  அகிலம் காக்கப்படட்டும்.  நான் இந்தக் கோவிலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒருவர் கூட மாஸ்க் ஒழுங்காக போடவில்லை என்பதும் கண்ணில் பட்டது.  முகத்தில் மாஸ்க் இருக்கும் அனைவரும் வாய்க்கும் கீழே இறக்கி விட்டிருக்கின்றனர்!  காவல்பணியில் இருக்கும் போலீஸ்காரர் கூட செல்பியும் காணொளியும் எடுப்பதில் கவனமாக இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  4. கல் கருட சேவை - காணொளிகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா.

    ஸ்ரீராம் சொல்வது போல முகக் கவசம் பற்றிய கவலை மக்களுக்கு இல்லவே இல்லை! “எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்” என்ற நிலைக்கு வந்து விட்டார்களா? இல்லை என்றால், “நமக்கு ஒண்ணும் ஆகாது” என்ற எண்ணமா?

    அனைவருக்கும் நல்லதையே கருட பகவான் அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டு மூன்று முறை சேவிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

    கருடசேவையின்போது தாயார் பல்லக்கை ஏளச்செய்தேன் (ஒரு நிமிடம்தான், நான் ஆசையுடன் கேட்டதால் அனுமதித்தனர். பெருமாளுக்கும் கேட்டிருக்கலாம் ஆனால் என்னால் முடியாது என்று தோன்றியது)

    கல்கருட சேவை என்பது பெரிய கொண்டாட்ட நிகழ்ச்சி. மாலை சிறப்பான உணவு (வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு), பஜனை, நாதஸ்வர தவில் நிகழ்ச்சி என்று களைகட்டும்.

    பதிலளிநீக்கு
  6. இரண்டு முறை போயிருக்கோம் என்றாலும் கல் கருட சேவை பார்த்தது இல்லை. இந்த வீடியோ எனக்கும் வந்தது. கண்டு களித்தோம். கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் இருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கணும். ஆனால் சொன்னால் கேட்பவர் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான தரிசனம். இக் கோவிலைப் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். கல் கருட சேவை தரிசனம் திருப்தியாக கிடைத்தது. அங்கு சென்றிருந்தால் கூட இவ்வளவு அழகாக கருட தரிசனம் செய்திருக்க முடியாது.

    ஓம் ஸ்ரீ ஹரி நமோ நாராயணாய நமஃ.. ஸ்ரீமன்நாராயணனின் இன்னருள் சர்வ லோகத்தையும் காத்து ரட்ஷிக்கட்டும். தெய்வீக பதிவுகளை தரும் தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..