நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 21, 2018

செந்தூரும் உவரியும்

ஸ்ரீவைகுண்டத்தில் தரிசனம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம்
திருக்கோயிலில் நடை அடைக்க ஆயத்தமானார்கள்...

அருள்தரும் கள்ளர் பிரானைத் தண்டனிட்டு வணங்கி விடை பெற்றோம்....

இரவு உணவு அருமையிலும் அருமை...

9.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு
திருச்செந்தூருக்குப் பயணமானோம்...

அந்த இரவுப் பொழுதிலும்
திருச்செந்தூர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது....

ஆனாலும் கடற்கரையில் இதமான குளிருடன் காற்று..

கோயில் வாசலில் சுக்குமல்லிக் காபி விற்றுக் கொண்டிருந்தார்கள்...
கருப்பட்டி வாசத்துடன் இதமாக இருந்தது....

கிழக்கு வெளி நடையில் தலை சாய்த்துப் படுத்தோம்...


இந்த வெளி நடையில் அமைக்கப்பட்டிருந்த மண்டபம் தான்
சில மாதங்களுக்கு முன் - வடக்கு மூலையில் இடிந்து விழுந்தது...

இப்போது முற்றாக வெளிநடை மண்டபம் முழுவதையும்
தகர்த்துத் தள்ளி விட்டார்கள்...

அத்தோடு திருக்கோயிலுக்கு வரும் வழியில் இருந்த கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டார்கள்....

தேவஸ்தான கடைகளில் அர்ச்சனைப் பொருட்கள் விற்கப்பட்டன..
அவைகளும் இப்போது இல்லை...




பொழுது விடியும் முன் எழுந்து
கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி முடித்து
ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஸ்வாமியைத் தரிசனம் செய்தோம்....

நிம்மதியான நிறைவான தரிசனம்...





சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன் கையெழுத்தே... 
- கந்தரலங்காரம் :-

கூட்டம் அவ்வளவாக இல்லை...
ஆனாலும், மக்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்..

திருக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில்
ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாளைச் சேவித்தோம்..

வெளியில் சந்தன மாமலையின் குகைக்குள்
ஸ்ரீ வள்ளியம்மையைத் தரிசித்தோம்...


கடைகள் ஏதும் இல்லாததால் - 
இந்த வருடம் கருப்பட்டி வாங்க இயலவில்லை....

காலை உணவுக்குப் பின் - 
உவரியை நோக்கிப் பறந்தது மனம்!...

ஸ்ரீ மனோன்மணி அம்பிகையுடன் ஸ்ரீ சந்த்ரசேகரர்
உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில்
ராஜகோபுரத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன....

ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்
புதிதாக எழுப்பப்படும் ராஜகோபுரம்
அன்று மாலையில் குலதெய்வ வழிபாட்டினை நிறைவேற்றினோம்...

இரவு அங்கேயே தங்கி விட்டு
மறுநாள் காலையில் கடலில் நீராடியபின் 
தெப்பக்குளத்திலும் நல்ல தண்ணீர் கிணற்றிலும் நீராடி
மீண்டும் சிவதரிசனம் செய்தோம்..

வன்னியடி ஸ்ரீ சாஸ்தா சந்நிதியை வலம் செய்து வணங்கினோம்...




ஸ்ரீநாக வழிபாடு


முற்பகல் அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்குச் சென்று
Inter City Express மூலமாக திருச்சியை அடைந்து
நல்லபடியாக தஞ்சைக்கு வந்து சேர்ந்தோம்...

இன்றைய பதிவில்
திருச்செந்தூரிலும் உவரியிலும் எடுக்கப்பட்ட
சில படங்கள் - தங்களுக்காக!...

அடுத்த சில தினங்களில் 
மீண்டும் பயணங்கள் தொடர்ந்தன...

அதனைப் பற்றிய தகவல்கள் - அடுத்தடுத்த பதிவுகளில்!...
***

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே..(5/90)
-: அப்பர்பெருமான் :-

வாழ்க நலம்...
ஃஃஃ 

21 கருத்துகள்:

  1. இப்பதிவில் படங்களில் தெளிவும் க்லாரிடியும் இருக்கிறதுகாமிரா வித்தி யாசமா மிகவும்நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. வணக்கம். சில கோவில்கள் மதியம் இரண்டு மணிவரை கூட திறந்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக திருமணஞ்சேரி.

    பதிலளிநீக்கு
  3. இரவு உணவு அருமை என்று சொல்லிய நீங்கள் எங்கு, என்ன சாப்பிட்டீர்கள் என்றும் சொல்லி இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே, நானும் நினைச்சேன்.

      நீக்கு
    2. ஹைஹை ஹை ஸ்ரீராம் கீதாக்கா நானும் அதே ஹைஃபைவ்!!! இல்லை இல்லை ஹைடென் ரெண்டு பேரையும் தட்டணுமே! ஹா ஹா ஹா....எனக்கும் உடனே தோன்றியது...திங்க ஆசை போகவே போகாது ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  4. திருச்செந்தூர் கடற்கரை படமும், தண்ணீர் விட்டு அலம்பி விட்டாற்போன்ற பிரகாரமும் அழகு. திருச்செந்தூரும், நெல்லை காந்திமதியையும் தரிசிக்க வேண்டும் எண்டு நீண்ட நாட்களாக ஆசை.

    பதிலளிநீக்கு
  5. ஆக, குலதெய்வம் பார்க்கப் போகும்போதுதான் நிறைய கோவில்கள் பார்க்கிறோம்!

    உவரி உட்பட எல்லாக் கோவில் படங்களும் அழகு. அண்ணியுடன் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஜி
    அழகிய படங்களுடன் நாங்களும் தரிசித்தோம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். விபரமான பதிவு அருமையாக நாங்களும் உங்களுடன் தரிசித்த உணர்வை பெற்றோம்.
    முகப்பு வாயிலில் மயிலுடன் தரிசனம் அற்புதமாய் இருந்தது. படங்கள் அனைத்துமே மிக அழகாக இருந்தது. உவரியின் கோவிலும் சாஸ்தா கோவிலும் நன்றாக இருந்தது. அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. முதல்முறை திருச்செந்தூர் போனப்போ நல்ல தரிசனம். அடுத்தடுத்த பயணங்களில் சிரமம் தான். என்றாலும் ஷண்முகநாதனைத் தரிசித்தோம். நெல்லைக் கோயிலில் எல்லாம் அவ்வளவு கூட்டம் இல்லை. படங்கள் எல்லாம் மிக அருமையாக வந்திருக்கின்றன. இம்மாதிரிக் கோயில்ப் பிரகாரங்களில் படுத்துப் பொழுதைக் கழித்துக் கோயில்களுக்கு தரிசனம் செய்யப் போன காலங்கள் எல்லாம் இப்போ இல்லை! இப்போப் படுக்கக் கட்டில், மெத்தை கேட்குது உடம்பு! தங்கத் தனி அறை கேட்குது. குளிக்க வெந்நீர்! :( காலம் மாறிப் போச்சு!

    பதிலளிநீக்கு
  9. அழகான படங்கள்.

    உங்களுடன் நாங்களும் சேர்ந்து செந்தூர் முருகனை தரிசித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அனைத்தும் அருமை... எங்களுக்கும் அருமையான தரிசனம்...

    பதிலளிநீக்கு
  11. உவரி கோவில் பார்த்தது இல்லை.
    குலதெய்வ வழிபாடு தரிசனம் , வன்னியடி சாஸ்தா படங்கள் எல்லாம் அருமை.
    திருச்செந்தூரில் எப்படியும் மயில் காட்சி கொடுத்து விடும் போகும் போதெல்லாம்.
    கோவில் தரிசனக்காட்சிகள் , பாடல்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  12. செந்தூர் முருகனின் படங்கள் போடவில்லையே. அவன் வாகனம் மயில் கோவில் கோபுரத்தில் மிக அழகு

    ஶ்ரீவைகுண்டத்தில் இரவு உணவு அருமை என்று எழுதியிருக்கீங்களே. கோவில் பிரசாதமா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட கடையா? நாங்கள் அங்கு கள்ளர்பிரானைத் தரிசனம் செய்ய இருக்கிறோம்.

    அப்பர் குறிப்பிட்ட, வீசு இள வேனில், வண்டு அறைப் பொய்கை போன்றவை காணக்கிடைக்காததாகிவிட்டதே.

    இடுகையில் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  13. மிக அழகிய படங்கள்...


    அனைத்தும் மிக அழகு..ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  14. திருச்செந்தூர் சென்று நிறைய நாட்கள் ஆகிவிட்டன...அக்குறை தீர்ந்தது

    பதிலளிநீக்கு
  15. அருமையான கோயில்.. அழகிய மனதுக்கு இதம் தரும் தரிசனம்.

    பதிலளிநீக்கு
  16. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கலா அண்ணியைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்.. கலா அண்ணியைப் பார்த்திட்டேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்... அழகா சாந்தமா இருக்கிறா...

    பதிலளிநீக்கு
  17. திருச்செந்தூர் சென்று பல வருடங்கள் ஆகி விட்டன. மீண்டும் செல்லும் ஆவலை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. திருநெல்வேலி சீமையில் எந்த கோயிலையுமே தரிசனம் செய்ததில்லை. அங்கெல்லாம் செல்ல இறையருள் வாய்க்கும் என்று நம்புகிறேன்.
    படங்கள் வெகு அழகு. நன்றி!

    பதிலளிநீக்கு
  18. படங்கள் எல்லாம் தெளிவா அழகா இருக்கு .அந்த முருகன் சிலைக்கு மேலே சுவற்றில் அமர்ந்திருப்பது சிலையா இல்லை நிஜ மயிலாரா ?

    அண்ணி அவர்களையும் பார்த்திட்டேன் :)

    பதிலளிநீக்கு
  19. துளசி: நல்ல கோயில் உலா தரிசனம் என்று தெரிகிறது. நான் இக்கோயில்கள் போனதில்லை நெல்லையப்பர் கோயில் தவிர. திருச்செந்தூர் பல வருடங்களுக்கு முன் அதன் பின் சென்றதில்லை. உவரியும் போனதில்லை. படங்கள் மிக அழகாக இருக்கின்றன

    கீதா: நாங்களும் கோயிலில் தலை சாய்த்துப் படுத்ததுண்டு. அப்படியே கடலில் நீராடி குளத்தில் நீராடி என்று சென்றதுண்டு. செந்தூர் கோயில் பார்த்து பல வருடங்களாகிவிட்டது மகனின் மொட்டை அங்கு போட்டதோடு அதன் பின் போகவில்லை அண்ணா. உவரி கோயில் நான்திருமணத்திற்கு முன் சென்றது. உவரி பற்றி நீங்கள் முன்பே சொல்லியிருக்கீறீர்கள் நினைவு வந்தது.
    உங்கள் குலதெய்வ கோயிலும் அழகாக இருக்கின்றது. இதுதான் முதலில் எங்கள் அண்ணியைப் பார்க்கிறோம்.

    அந்த மயில் அழகு!! எல்லா படங்களும் மிக மிக அழகு என்றால் கடல் சுரியன் எழுச்சி கண்ணைக் கவர்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..