நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

கோமள யாமளை

இன்று மங்கலகரமான
ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை..

இன்றைய பொழுதில் -
சிந்திப்பதற்கும் வந்திப்பதற்கும்
அன்னை அபிராமவல்லியின் திருவடிகள்..


இல்லாமை சொல்லி  ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே..(054)

நாயேனையும் இன்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்னபேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே..(061)

ஸ்ரீ முத்துமாரியம்மன் - தஞ்சை
பாரும் புனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே..(068)

மாமதுரை மீனாள்
தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்ழலாள் அபிராமி கடைக்கண்களே..(069)

ஸ்ரீ நீலாயதாட்சி - நாகை
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் 
பண்களிக்கும் குரல்வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன்பேரழகே..(070)

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமகென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளிசெம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே..(073)

ஸ்ரீ வராஹி - தஞ்சை
பயிரவி மஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே..(077)

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என்துணை விழிக்கே..(078)

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே..(079)

ஸ்ரீ காந்திமதி
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னைஇனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே..(084)

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே..(099)


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே..(100)

ஸ்ரீதுர்கா - வேதாரண்யம்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவியடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..

***

உடையாளே சரணம்.. சரணம்..
ஒல்கு செம்பட்டு உடையாளே சரணம்.. சரணம்
ஒளிர்மதிச் செஞ்சடையாளே சரணம்.. சரணம்..

ஓம் சக்தி ஓம் 
*** 

16 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. வெள்ளி காலைப்பொழுதில் தரிசனம் கண்டேன் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அபிராமவல்லியை, அங்கையற்கண்ணியை இவ்வுலகைக் காக்கும் சக்தியானவளை இன்று கண் குளிரக் கண்டு மகிழ்ந்தோம்/மகிழ்கிறோம்....

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இறை இலக்கியங்கள் நன்கு உதவுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. எல்லா அம்மன் படங்களும் அழகு.தரிசனம் செய்தேன் வெள்ளிக்கிழமையில்.
    பாடல்கள் பகிர்வு அருமை.பெளர்ணமிக்கு அபிராமி அந்தாதி படிப்பேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வேதாரண்யம் துர்கா அழகிய காட்சி அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வேதாரண்யத்தின் துர்க்கை மிகுந்த வனப்புடையவள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வெள்ளிக்கிழமையும் அதுவும் அபிராமி அந்தாதியும் சம்பந்தப்பட்ட படங்களும் நன்றாக உள்ளது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வெள்ளிப்பதிவை ஞாயிறில் கண்டு ரசித்தேன். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..