நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 03, 2015

விழித்துக் கொள்வோம்..

இரண்டு நிமிடங்களில்!..

மாய வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டது. 
விற்பனைக்காக ஆடியும் பாடியும் வலை வீசப்பட்டது. 

தயாரித்தவனே - இப்படியொரு அமோக விற்பனையை எதிர்பார்த்திருக்க மாட்டான்!..

விளைவு - இளம் பிள்ளைகளுக்கும் மற்றையோர்க்கும் விருப்பமான உணவாகிப் போனது.

மேகி!..


விரும்பி உண்டவர்களை - உண்ணத் தொடங்கியிருக்கின்றது.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் ஈயம் (Lead) மிக அதிக அளவில் கலக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து வெளியிட்டது -

உத்தரப்பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் (FSDA - The Food Safety and Drug Administration).

அதைத் தொடர்ந்து நாடு முழுதும் அதிர்ச்சி அலைகள்..

பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈயத்தின் அளவு - 0.01-2.5 ppm.

ஆனால் மேகி நூடுல்ஸ்ஸில் கண்டறியப்பட்டுள்ள அளவு 17.2 ppm.

இது அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட மிக மிக அதிகம்

குறைந்த அளவு தான் என்றாலும் ஈயம் கலந்துள்ள உணவைத் தொடர்ந்து உண்பதால் - குழந்தைகளுக்கு மூளைத்திறன் குறையும் என்கின்றது - உலக சுகாதார நிறுவனம்.


நூடுல்ஸ் - இந்த மண்ணுக்கேற்ற உணவே அல்ல!..

அவசியம் உண்ண வேண்டிய உணவும் அல்ல!..

இதில் - நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் - என எவையும் கிடையாது.

முழுக்க முழுக்க மைதா மாவினால் தயாரிக்கப்படுவது. இதனுடன் கொழுப்பு, உப்பு, செயற்கைச் சுவையூட்டும் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

இத்தகைய தயாரிப்பில் தான் -  விஷத் தன்மையுடைய ஈயம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நூடுஸ்ஸை தொடர்ந்து உண்பதால் - 
நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

நூடுல்ஸ் - நமக்கு விளைவிக்கும் கேடுகள்:-

கடுமையான தலைவலி, தொண்டை எரிச்சல், வயிற்று வலி,.

சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வீக்கம்.

கருவிலிருக்கும் சிசு பாதிக்கப்படலாம்.

நூடுல்ஸ்ஸைப் பதப்படுத்தி - அது வழுவழுப்புடன் இருப்பதற்காக அதில் சேர்க்கப்படும் மெழுகு, உப்பு மற்றும் ரசாயனங்கள் முழுமையாக ஜீரணம் ஆவதற்கு இரண்டு நாட்கள் ஆகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்..

நூடுல்ஸ் நம் பிடியில் என்றால் - நாம் நோய்களின் பிடியில்!..

இத்தனைக்கும் காரணம், இதில் கலக்கப்பட்டிருக்கும் - 

மோனோசோடியம் குளுட்டாமேட் (Monosodium Glutamate) என்ற உப்பு.

MSG எனப்படும் இது ஒருவகையான அமினோ அமிலம். சுவையூட்டுவது.  
சுவை கூட்டி உண்பவரை அடிமையாக்கும் குணம் கொண்டது. 

குழந்தைகளை மீண்டும் மீண்டும் விருப்பத்துடன் சாப்பிட வைப்பது இதுவே!.. 

அதனால்தான் - மேகி விளம்பரங்கள் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதாகக் காட்டி - குழந்தைகளைக் குறி வைத்துத் தாக்கின..


எதிர்பார்த்த விஷயம் வெற்றிகரமாக நடந்தது. தயாரிப்பாளர்களின் பணப்பெட்டிகள் பொங்கி வழிந்தன.. 

பணத்தின் மீது கொண்ட வெறியினால் - நடைமுறைகள் மீறப்பட்டன..  

அதற்குத் துணையாக காசுக்காக எதையும் பேசி நடிக்கும் நடிக நடிகைகள் வாய் கொள்ளாப் புன்னகையுடன் முன் வந்தனர்..

எதையும் கண்டுகொள்ளாத மக்களின் அமோக ஆதரவினால் - 
நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுட்டாமேட்டின் அளவு அதிகமானது..

மோனோசோடியம் குளுட்டாமேட்டைப் பற்றிய கூடுதல் தகவல்:-

It's very difficult to find any canned or packaged food item that does not contain MSG in one of its hidden forms. 

It's in canned and boxed soups, dried soup mixes, frozen prepared meals, canned prepared meals, fast food, junk food, snack food, Chinese food, gravy, stew, chili, canned beans, salad dressing, seasoning blends and mixes, bullion, broths, and prepared pasta products. 


Most restaurant food contains loads of MSG. It's what makes the restaurant experience so compelling. 


Hot food bars at grocery stores have foods containing MSG. Even high priced prepared foods that market themselves as gourmet are laced with MSG, such as the soup mixes and other non-dessert products at Harry and David's

You won't escape MSG shopping at Whole Foods or other stores that claim to sell healthy food. Many of the bagged, bottled, frozen and canned foods at Whole Foods contain MSG hidden under another name. 


Some of the deli dishes as well as those on the hot bar and the take-out rack contain hidden MSG.


(Thanks to - Food matters.,)


கடுமையான விளைவுகளைத் தரும் - மோனோசோடியம் குளுட்டாமேட் பற்றிய விழிப்புணர்வு மேலை நாட்டினரிடம் இருக்கின்றது.

நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் -

The Most Dangerous Excitotoxins

எனக் குறிப்பிடப்படும் ஆறு ரசாயனங்களுள் முதலிடத்தில் இருப்பது -

மோனோசோடியம் குளுட்டாமேட்!..

அதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வலைத் தளங்களில் கிடைக்கின்றன.

உங்கள் கவனத்திற்கு - இதோ இணைப்புகள்..

The Dangers of MSG
Harmful Effects of MSG

பீகாரில் - மேகி நூடுல்ஸ்ஸினால் - வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே - விரைவான நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் மீதும் விளம்பரத்தில் தோன்றி நடித்த பாலிவுட் பிரபலங்களின் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்ட நீதி மன்றம் - காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் ஐவரையும் கைது செய்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார், எனில் -

இதன் தீவிரம் விளங்குகின்றது.

ஆனாலும் வெளியிடப்பட்டுள்ள ஆய்வக முடிவுகளை நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது - என்பது குறிப்பிடத்தக்கது.

மேகி உண்பதற்கு ஏற்றதல்ல!.. என - டில்லியிலுள்ள உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அறிவித்துவிட்டது.

அரசு உத்தரவின் பேரில் வணிக நிறுவனங்களிலிருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்படுவதை வணிகர்கள் எதிர்க்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு கேள்வி!..

உண்பதற்கு ஏற்றவை அல்ல!.. - என அறிவிக்கப்பட்டிருக்கும் இதனை, 
நீங்கள் - உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பீர்களா?..

மனம் மரத்துப் போனது போலும்!..

மேகி நூடுல்ஸ் வகைகளுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.

தொடர்ந்து - தமிழகத்திலும் மேகி நூடுல்ஸின் மாதிரிகளைச் சேகரித்து மோனோ சோடியம் குளுட்டாமேட் மற்றும் ஈயத்தின் அளவினைக் கண்டறிய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நூடுல்ஸின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு - சென்னை, கோவை மதுரை, தஞ்சை, சேலம், நெல்லை ஆகிய மாநகர்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


நமது பாரம்பர்ய உணவு வகைகளுள் சேராதது - இந்த நூடுல்ஸ்!..

எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும் என்ற நினைப்பில் - மாறிப்போனார்கள் மக்கள்..

இத்தகையவர்களால் - ஆண்டொன்றிற்கு கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டியதாம் நெஸ்லே நிறுவனம்.

பாரம்பர்ய உணவைக் கண்டாலே - குழந்தைகள் வெறுத்து ஒதுக்குவதாகக் காட்டப்படும் விளம்பரங்களால் வீழ்ந்தது ஆரோக்கியம்!..

பாரம்பரிய உணவுகளை மட்டுமே ஏற்றுப் பழகிய நம் உடலை நாமே கெடுத்து விட்டோம்!..

என்றுமே தீய விஷயங்களில் தான் ஈர்ப்பு அதிகமாக இருக்கும்..

நம் நாட்டில் - மண்ணுக்கு ஒருவிதமாக - மக்களுக்கென்று மரபு வழியான உணவு வகைகள் இருக்கின்றன.

அவற்றை உண்டுதான் வளர்ந்தோம்..
இத்தனை காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

நூடுல்ஸ் பற்றிய எனது கருத்துரை (22/5)

திடீரென எங்கிருந்தோ ஒருவன் வந்து - எதையோ சொல்கின்றான்..

நமது ஊடகங்களின் சமையல் குறிப்புகளில் நூடுல்ஸ் பேசப்பட்டது.

இளித்த வாயர்கள் ஆகினர் மக்கள்..

பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்க ஒரு தாய் அலுத்துக் கொள்வாளா!..

ஆனாலும், இரண்டு நிமிடங்களில்!.. - என விளம்பரம் காட்டப்பட்டது.

நாயினும் கேவலமாக - சாக்லேட்டை நக்கித் தின்பதாகக் காட்டினார்களே!..  

சாக்லேட் தின்றதும் யுவதியும் யுவனும் காதல் கொள்வதைப் போலக் காட்டினார்களே!.. 

அவற்றைக் கண்டு நாம் எதுவும் செய்தோமா?.. இல்லையே!..

இதுதான் - நூடுல்ஸ் தயாரித்தவனை வாழ வைத்தது!..

மேலை நாட்டின் இறக்குமதிகளான - குளிர்பானங்கள், பழச்சாறுகள், பிஸ்ஸா, பர்கர், கோழிக்கால் பொரியல்கள், கூறு கெட்ட சாக்லேட்கள் - என எல்லாமே நம்மைக் குழியில் தள்ளக் கூடியவை.

பருவகாலத்தின் கொடையான மாம்பழம் - நமக்கே உரித்தான ஒன்று..

அதை வருடம் முழுதும் - கொட்டையில்லா மாம்பழச் சாறாகத் தருகின்றான் ஒருவன். 

எனில், அந்த மாம்பழச் சாறு கெட்டுப் போகாமலிருக்க அதனுடன் எத்தகைய இரசாயனத்தைச் சேர்த்திருப்பான்!?..

சிந்தித்தோமா!?.. இல்லையே!..

கொட்டையில்லா மாம்பழத்தைத் தேடி ஓடியவனைக் கண்டு சிரித்து மகிழ்ந்தோம்.

நாமே - நம் கை விரலைக் கொண்டு - நமது கண்ணைக் குத்திக் கொள்வதில் அலாதியான இன்பம்!.. 

தமிழ்நாட்டிற்குள்ளேயே - தஞ்சைத் தரணியின் கைப்பக்குவம் ஒருமாதிரி எனில், கொங்கு நாட்டின் கைப்பக்குவம் வேறொரு மாதிரியாக இருக்கின்றது.

அதுவே - தென்பாண்டிச் சீமையிலும் தொண்டை நாட்டிலும் வேறுவேறாக விளங்குகின்றது..

உண்மையை உணர்ந்து கொள்ளும் தருணம் - இது!..

இட்லியும் இடியாப்பமும் மிகச் சிறந்தவை - என, மேற்கத்தியர் சொன்னாலும் கூட, அவர்கள் முதல் உணவாக அவற்றை ஆக்கிக் கொள்ளவில்லை..

ஆனால் - நம்மவர்களுக்கு மிகவும் இஷ்டமான ஒன்றாக இருப்பது வறண்டு போன - கார்ன்ஃபிளேக்ஸ்!..

இதெல்லாம் ஏன் வெளியே கெடக்குது!..
சொன்னாக் கேளு.. அதெல்லாம் திங்காதே!..
இங்கே குவைத்தில் - பற்பல நாடுகளின் நூடுல்ஸ்கள் கிடைக்கின்றன..

ஆனாலும், நான் அவற்றிலிருந்து விலகி பல வருடங்களாகின்றன.

என் பிள்ளைகள் நூடுல்ஸ் விரும்பி உண்பார்கள்.. இதுவரை பிரச்னை ஏதும் இல்லை..

நூடுல்ஸை புறக்கணிக்கும்படி - அவர்களுக்கும் சொல்லி விட்டேன்..

நம் நாட்டில் - நூடுல்ஸ் போன்ற உணவுப் பாக்கெட்டுகளில் உள்ள குறிப்புகளுக்கும் அதனுள்ளே இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை!.. - என்றும் சொல்கின்றார்கள்..

எது எப்படியானாலும் - இனிமேல் பாக்கெட் உணவுகளின் மீதான ஆய்வுகள் கடுமையாக்கப்பட வேண்டும்..

பன்னாட்டு நிறுவனங்கள் பலவிதத்திலும் நம்மை நசுக்கப் பார்க்கும் சூழலில்,

பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கங்களைக் கைவிடாமலும்,
பொய்யான வார்த்தை ஜாலங்களில் மயங்காமலும்,
நாம் அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும்!..

நமது நலத்தினையும் வருங்கால சந்ததியினரின் 
நலத்தையும் பேணிக் காக்க விரும்பினால், 
நாம் செய்யவேண்டியது - இந்த மாதிரியான 
செயற்கை உணவு வகைகளைப் புறக்கணிப்பது ஒன்றே!.. 

நானும் என் குடும்பத்தினரும் புறக்கணித்து விட்டோம்!..
நம் வாழ்வு நம்கையில்!..

வாழ்க வளமுடன்..
வாழ்க நலமுடன்!..
* * *

20 கருத்துகள்:

 1. எவ்வளவோ பாக்கெட் உணவுகள்
  இன்றைய இளைஞர்கள் இந்த உணவுகளின் மோக வலையில்
  சிக்கித் தவிக்கிறார்கள்
  வேதனைதான் மிஞ்சுகிறது ஐயா
  விழிப்புணர்வோடு இருப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நம் உடல் நலனைப் பாதிக்கும் உணவுப் பொருட்களில் இருந்து விலகுதல் நன்று..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நல்லதொருக் கருத்தை நல்லதொரு சந்தர்பத்தில் பகிர்ந்து கொண்டீர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பே நான் குழந்தைகளுக்கு அதில் மெழுகின் தன்மை அதிகமாக இருக்கிறது என்று தெளியப்படுத்தினேன். ஆனால் ஏற்பார் இல்லை. இன்று இன்னும் மோசமான ஒன்றாக, பணம் மட்டும் போதும் என நினைக்கும் அவர்களை எதுவும் செய்ய முடியாத சடங்களாக நாம் இருப்பது அவர்களுக்கு எவ்வளவு நல்லது பாருங்கள். பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   மக்களில் நல்லோர் நிச்சயம் - தீமை தரும் உணவுப் பொருட்களில் இருந்து மீள்வர்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. விரும்பி உண்டவர்களை உண்ணத்தொடங்கி இருக்கிறது...//உண்மை,உண்மை,உண்மை.......

  நாங்கள் 7 வருடங்களாக இதை தவிர்த்து விட்டோம். அதன் மேல் உள்ள மெழுகினால்..தெரிந்தவர்களிடமும் உண்ணாதீர்கள் என சொன்னோம்...ஆனாலும் அவர்கள் கேட்க வில்லை. இப்போதாவது தவிர்த்தால் அனைவருக்கும் நல்லது. எல்லாவற்றையும் அழகாயெடுத்துச் சொல்லி உள்ளீர்கள். மிக முக்கியமான பதிவு. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தற்போது தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
   நம்மைக் காத்துக் கொள்ள நமக்கு உரிமை உண்டல்லவா!..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி அருமை சமூக நலன் வேண்டி தாங்கள் இட்டு இருக்கும் இந்த பதிவு அனைவரும் படிக்க வேண்டிய பாடம்

  விளம்பரங்களை நம்பி மக்கள் இன்னும் கீழேயே போய்க்கொண்டு இருப்பது வேதனையிலும் வேதனை

  இதனால்தான் நான் அடிக்கடி விளம்பரங்களை குறித்தே எழுதுகிறேன் மற்றபடி எனக்கு யார் மீதும் காழப்புணச்சி இல்லை.

  ஒரு சில குடும்பங்கள் சிறப்பாக வாழ்வதற்க்கு பல குடும்பங்கள் வாழையடி வாழையாக ஏன் ? பலியாக வேண்டும்.

  சிந்திக்க வேண்டும் மக்கள்
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   இனிமேல் இரசாயனம் கலக்கப்பட்ட உணவுப் பொருள்களில் இருந்து தம்மைக் காத்துக் கொள்வார்கள்..

   மக்கள் விழிப்புணர்வு பெறுகின்றனர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஒண்ணுமே புரியலே உலகத்துலே. என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது...என்பது இதற்கு முற்றிலும் பொருந்தும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இது ஓர் உதாரணமே. நாம் பயன்படுத்தும் பெரும்பாலானவை இவ்வகையிலேயே உள்ளன. நாம் எதிர்கொள்ளப் போகும் விளைவுகள் மிக ஆபத்தானவையாக முடியும். ஏதாவது ஒரு வழியில் இவை போன்ற நிகழ்வுகளுக்கு முடிவு கட்டாவிடில் நமக்கு முடிவுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நம் உடல் நலனைப் பாதிக்கும் உணவுப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்கும் முயற்சியில் அரசு விலகுதல் கூடாது..

   நாமும் விழிப்புடன் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அருளாளர் அய்யா அவர்கள்,
  இதுபோன்ற ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவின் மூலம், பெரியவர் முதல் சிறியவர் வரை
  அனைவரது அன்பிற்கும் ஆட்பட்டவராகி விட்டீர்கள்!
  மிக சிறந்த விழிப்புணர்வு பதிவு!
  தடை ஒருபுறம் இருந்தாலும், இதில் கண்ணைக் கட்டிக் கொண்டு விளம்பரத்தில் நடிக்கும் நம் நாட்டு நடிகர் நடிகையர்களும் தண்டிக்க பட வேண்டும்.
  தொடருங்கள் அய்யா !
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று எவர் பேச்சையும் கேட்டு அந்நியப் பொருட்களில் மனம் மயங்கக்கூடாது..

   தவறினால் - இழப்பு நமக்குத் தான்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  சுவையான உணவு பற்றி நிறைவான விளக்கம். பெரும்பாலும் சீனர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..

   சீனன் பாம்பைக் கூடத் தான் தின்று தீர்க்கின்றான்..
   அவன் சாப்பிடுவதெல்லாம் - நமக்கு ஏற்றதாகி விடுமா!..

   நமது பாதுகாப்பு நமது கைகளில்!..
   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   ரத்தினச் சுருக்கம்!..
   கேடு செய்யும் உணவுப் பொருட்கள் வேண்டவே வேண்டாம்..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 9. தயாரிக்க எளிமையாய் இருப்பதாலும்வேலைக்குப் போகும் பெற்றோருக்கு நேரம் அரிதாயிருப்பதாலும் இவற்றை உண்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிப் போனதாலும் மவுசு கூடிவிட்டது. இன்னும் பல பரிசோதனைகள் நடக்க வேண்டும் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தாங்கள் கூறுவது சரியே.. எளிமையாக இருக்கின்றது. இன்னல் தருவதாகவும் இருக்கின்றதே..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 10. மிகவும் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய கட்டுரை! என்று நம் பாரம்பரிய உணவுப்பழக்கத்தைக் கைவிட்டோமோ அன்றே ஆரம்பித்துவிட்டது கேடு! புதிய ஜங்க் உணவுகளிடமிருந்து நம் வளரும் தலைமுறையை மீட்க வேண்டியது மிகவும் அவசியம். மோனோ சோடியம் குளுக்கோமேட் பற்றித் தெரியாதன தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   என்றைக்கு பாரம்பரிய உணவினைக் கை விட்டோமோ - அன்றிலிருந்தே நமக்கு கேடு ஆரம்பமாகி விட்டது. சரியாகச் சொன்னீர்கள்!..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு