நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருவெம்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவெம்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 28, 2012

திருவெம்பாவை - 10

 மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

thanjavur14
உன் கையில் பிள்ளை உனக்கே  அடைக்கலம்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
றங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் - 19

எங்கள் பெருமானே! ''உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்'' என்று  காலகாலமாக வழங்கி வரும் பழமொழியை - எங்கள் அச்சத்தால் மீண்டும் கூறுகின்றோம். இந்த வேளையில் உன்னிடம் ஒரு வரத்தினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். தந்தருள்வாயாக.

எம் கொங்கைகள் நின் அன்பர் தம் தோள்களைத் தழுவித் திளைத்திருக்கவும் எம் கைகள் உனக்கே பணி செய்து மகிழ்ந்திருக்கவும், அல்லும் பகலும் எம் கண்கள் உன்னை மட்டுமே பார்த்துக் களித்திருக்கவும் ஆகிய பெரும் பரிசினை இப்பூவுலகில் வாழும் வரைக்கும் - 

எங்கள் அரசே! எங்களுக்கு நீ வழங்கி அருள்வாய் எனில் - சுட்டெரிக்கும் சூரியன் எந்தத் திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?  -  என்று எம் பாவாய்!... நீராடுவோமாக!...

thanjavur14
தென்னாடுடைய சிவனே போற்றி
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர்  எம்பாவாய் - 20

எல்லாவற்றுக்கும் ஆதியாகி அருளும் நின் -  பாதமலர்கள் போற்றி!
எல்லாவற்றுக்கும் அந்தமாகி அருளும் நின்  - செந்தளிர் பாதங்கள் போற்றி! 

எல்லா உயிர்களும் தோன்றுதற்குக் காரணமான பொற்பாதங்கள் போற்றி!
எல்லா உயிர்களுக்கும் சுக போகங்களை அருளும் பூங்கழல்கள் போற்றி! 

எல்லா உயிர்களும் முடிவு எய்தி அடைக்கலமாகின்ற இணையடிகள் போற்றி!
திருமாலும், பிரமனும் காணமுடியாத திருவடித் தாமரைகள் போற்றி! 

நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற பொன்மலர் பாதங்கள் போற்றி!
போற்றி! போற்றி! என - நாம் இறைவனைப் போற்றி வணங்கி, எம் பாவாய்!...  மார்கழி நீராடுவோமாக!...
குருஅருளும் திருஅருளும் கூடி நிற்க இந்த அளவில் மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவெம்பாவை நிறைவடைகின்றது.
திருச்சிற்றம்பலம்

வியாழன், டிசம்பர் 27, 2012

திருவெம்பாவை - 09


மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

அங்கண் அரசு - அடியோங்கட்கு ஆரமுது
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய் - 17

வாசமிகு மலர்கள் நிறைந்து நறுமணம் கமழும்  கருங்கூந்தற் கன்னி!...

சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், திசை தொறும் முகம் உடைய நான்முகனிடத்தும் மற்றுமுள்ள பிற தேவர்களிடத்தும்,  இந்த உலகில் வேறு எங்கும் உள்ள  மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, பேரானந்தம் நம்மிடத்தில் நிறைந்து ததும்பும்படி நம்மைப் பெருமைப்படுத்தியும், 

இவ்வுலகில் நம் போன்ற அடியார் தம் வீடுகள் தோறும் தாமாகவே எழுந்தருளி, செங்கமலப் பொற்பாதங்களைத் தந்து ஆட்கொண்டு அருளியும், அருஞ்செயல் புரியும் ஐயனை -  கருணை பெருகும் திருவிழித் தாமரைகளால் நம்மை ஆளும் அரசனை, அடியவர்களாகிய நமக்கு அமுதமாக விளங்கும் விமலனை, வேந்தனை, பெருமானைப் புகழ்ந்து பாடி, 

நலமும் வளமும் எங்கும் பெருகித் திகழ, தாமரை மலர்கள் நிறைந்த இந்த பொய்கையின் குளிர்ந்த நீரில் - கை வளைகள் குலுங்கக் குடைந்து - குதூகலமாக நீராடுவாயாக!....

கண்ணார் அமுதாய் நின்ற அண்ணாமலை
அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய் - 18

தோழி! எம் பாவையே!... 

திரு அண்ணாமலையில் குடி கொண்டு விளங்கும் எம்பெருமானது திருவடித் தாமரைகளில் - தேவர்கள் தலை வைத்துப் பணிந்து வணங்கும் போது அவர் தம் மணிமகுடங்களில் பதிந்துள்ள இரத்தினங்கள் ஒளி இழந்துவிடுகின்றன.

அதைப்போல கீழ்த்திசையில் கதிரவன் ஒளிக்கிரணங்களுடன் காண்பவர் கண்கள் நிறையும் படிக்கு தோன்றியதும் - கார் இருள் அகன்றது. இரவில் குளிர்ந்து விளங்கிய தாரகைகள் ஒளி குன்றி - பார்வையினின்றும் மறைகின்றன. 

இந்த இளங்காலைப் பொழுதில் பெண்ணாகவும், ஆணாகவும் பெண்ணும் ஆணும் அற்றதோர் தோற்றமாகவும்,

ஒளி பொருந்தி விளங்குகின்ற  ஆகாயமாகவும் பூவுலகமாகவும் விளங்கி - இவையனைத்தினின்று வேறுபட்ட பொருளாகவும் இலங்கி,

கண் நிறைந்த அமுதமாக நின்ற இறைவனின் திருவடித் தாமரைகளைப் பாடி, 

பொங்கித் ததும்பும் பூம்புனலில் - கை வளைகள் குலுங்கக் குடைந்து - குதூகலமாக நீராடுவாயாக!....
ிருச்சிற்றம்பம்

புதன், டிசம்பர் 26, 2012

திருவெம்பாவை - 08

மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை
ஆட்கொள்ளும் வித்தகர்
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு  இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். - 15

அழகிய அணிகளுடன் விளங்கும் கச்சணிந்த கொங்கைகளை உடைய  நங்கையீர்! 

இவள் ஒவ்வொரு சமயத்தில், மட்டும் ''எம்பெருமான்'' என்று சொல்லி வந்தாள். ஆனால்  இப்பொழுது இவள்  இறைவனின் பெருமையை,  புகழை  வாய் ஓயாமல் கூறிக்கொண்டிருக்கின்றாள்...இறைவனின் திருப்பெயரினைக் கூறி மகிழ்தலை ஒருகாலும் நீங்காதவளாக திகழ்கின்றாள்... 

இவள் மனம் மகிழ்ச்சி மிக்குற்று,  கரிய விழிகளினின்றும், ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கன்னங்களில் வழிகின்றன.  

 ஈசனை நினைந்து  நெக்குருகி  ஒருமுறை வணங்க என்று பூமியின் மேல்  வீழ்ந்தவள் - மீண்டு எழ மனமின்றிக் கிடக்கின்றாள்..

பிற தேவர் எவரையும் எதற்கும் வணங்காதவளாகி விட்டாள். 

பெருந்தலைவனாகிய இறைவனின் பொருட்டு, இப்படியும் ஒருவர் பித்தராவரோ!...

இப்படி  பிறரை அன்பினால் அடிமை கொள்ளும் வித்தகர் யார்?... எம்பெருமான் ஈசனே அல்லவா!.... அவருடைய திருவடித் தாமரைகளை வாயார, மனமாரப் புகழ்ந்து பாடி, 

தாமரையும், அல்லியும், குவளையும் ஆம்பலும் என - அழகிய மலர்கள் நிறைந்து குளிர்ந்த இந்த பொய்கை நீரில் - கை வளையல்கள் குலுங்க குடைந்து நீராடுவீராக.

கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர்  எம்பாவாய்.   16

அலைகள் ஆரவாரிக்கும் நீலக் கடலின் நீர் ஆவியாகி , விண்ணில்   மேகம் என மேல் எழுகின்றது. அவ்வாறு எழுகின்ற மேகம் எம்மை அன்பர்களாக உடையவளாகிய அம்பிகையின் திருமேனி போல நீலநிறத்துடன் விளங்குகின்றது!... 

அது மட்டுமா!....அம்பிகையின் சிற்றிடை என  ஒளிர்ந்து மின்னல் எனப் பொலிகின்றது!... 
திருப்புருவம் என வானவில்
எம்பிராட்டியின் திருவடிகளில் இலங்கும் மேல் அணிந்த பொற்சிலம்புகளைப் போல அதிர்ந்து ஒலித்து, அவளது திருப்புருவம் போல்  வானவில் எனத் திகழ்கின்றது!...

எம்மை ஆண்டு அருள்பவளாகிய அம்பிகையின் திருமேனியினின்று அகலாத எங்கள் இறைவன் தன் அன்பின் அடியார்களுக்கும் ஐயனின் பணி பூன்டு இலங்கும் எங்களுக்கும்  - அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இன்னருளைப் போன்று மேகமே - 
முன் சுரக்கும் இன்னருளே!.. மழையே!...
நலங்களும் வளங்களும் எங்கும் திகழ மாரி எனப் பொழிவாயாக!...

என்று பாவையே!... நீராடுவாயாக!....
திருச்சிற்றம்பலம்

செவ்வாய், டிசம்பர் 25, 2012

திருவெம்பாவை - 07

மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை
எங்கள் பிராட்டியும் எங்கோனும்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்து  ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து  ஆடேலோர் எம்பாவாய். -13

நீர்வளம் நிறையப் பெற்றதால், நீரிலேயே செழித்துத் தழைத்துப் படர்ந்து - பசுமையாய் விளங்கும் குவளையின் கருமையான மலர்கள் எம்பிராட்டியைப் போலவும்  குளிர்ந்த செந்தாமரைப் பூக்கள் ஈசன் எம்பெருமானைப் போலவும் திகழ்கின்றன. 

அங்கும் இங்கும் அலைந்து திரியும் பறவையினங்கள் அம்பிகையின் திருமார்பில் அசைந்து புரளும் அணிகலன்களைப் போலவும் திருக்கரங்களில் கலந்து ஒலிக்கும் நிறைவளைகள் போலவும் திகழ்கின்றன. நீர்க்கொடிகளுடன் பின்னிக் கிடக்கும் பாம்புகள் எம்பெருமான் திருமேனியில் புரள்வன போலவும் விளங்குகின்றன. 

இளங்காலைப் பொழுதினில் மேனி அழுக்கினைக் கழுவுதல் போல தம்மைப் பீடித்துள்ள, மாயை, கன்மம், ஆணவம் எனும் மும்மலங்களையும் தொலைப்பார்களாக - வந்து நீராடும் அன்பர்களாலும்  - அம்பிகையையும் ஐயனையும் போல,  சிவசக்தி வடிவாகவே திகழும் இந்தத் திருக்குளத்தில் நீராடுதற்கு... 

வாராய்!...எம் பாவாய்!...

குளிர்ந்த நீர் பொங்கிப் பெருகித் ததும்பும் இந்தத் தாமரை மடுவில் நாம்,  நம் கைகளில் அணிந்துள்ள சங்கு வளைகளுடன்  காற்சிலம்புகளும் சேர்ந்து ''கலகல'' என  ஒலித்து ஆரவாரிக்கவும்,

மகிழ்ச்சியினால் நம் பெருந்தனங்கள் பொங்கிப் பூரிக்கவும், நீரில் மூழ்கிக் திளைப்போமாக!...

கொங்கைகள்  பொங்கிக் குலுங்க - வளைக் கரங்களால் குளிர் நீரைக் குடைந்து குதூகலித்து - தாமரைகள் தழைத்துத் தங்கியிருக்கும், பூம்புனற் பொய்கையில்  நீராடி மகிழ -

வாராய்!...எம் பாவாய்!...

வளர்த்தெடுத்த பெய்வளை
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.- 14

காதுகளில் இலங்கும் கனங்குழைகள் ஆடவும், அங்கமெல்லாம் அணிந்துள்ள பசும் பொன் ஆபரணங்கள் அசைந்து ஆடவும்,  சூடியுள்ள பூச்சரங்களுடன் கருங்குழலும் சேர்ந்தாடவும், அந்தப் பூச்சரங்களை மொய்த்து எந்நேரமும் சுற்றித் திரியும் வண்டினங்கள் ஆடவும் - பூம்புனற் பொய்கையில் நீராடுவோம். நீராடித் திளைத்த பெருமகிழ்ச்சியில்,

தில்லைச் சிற்றம்பலத்தைப் பாடுவோம்.  அந்தச் சிற்றம்பலத்தில் நின்று நிலைத்து ஆடிக் கொண்டிருக்கும் ஐயனின் திருப்பாதக் கமலங்களைப் பாடுவோம்.  வேத வேதாந்தப் பொருளெனத் திகழும் சிவபெருமானின் திருவடிவினைப் பாடுவோம். 

அந்த வேதப் பொருளான மங்களகரமான சிவம் நாம் வசமாகும் வண்ணம் பாடுவோம். ஈசன் திருமுடியில் திகழும் பொன்னிற கொன்றை மாலைகளைப் பாடுவோம். ஆதியும் அந்தமுமான அருட்பெருஞ் சோதியினைப் பாடுவோம்.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து - பக்குவப்படுத்தி - மங்களகரமான சிவன் எனும் - அந்த அருட்பெருஞ் சோதியினை நாம் அடையும் வண்ணம், நம்மை ஆளாக்கி உயர்த்தியவள் அம்பிகை. 

அழகிய வளையல்கள் இலங்கும் உமாதேவியின்  திருக்கரங்கள் மழையென வாரி வழங்கக் கூடியவை. அந்த அம்பிகையின் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பாடி மார்கழி நீராடுவோம்.

வாராய்... எம் பாவாய்!....
திருச்சிற்றம்பலம்

திங்கள், டிசம்பர் 24, 2012

திருவெம்பாவை - 06

ாணிக்காசர் அருளிய  
ிருவெம்பாவ

மையார் தடங்கண்ணி மணவாளன்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். - 11

கனன்ற நெருப்பென - செம்பவளம் என இலங்கும் திருமேனியில் பால் எனத்   திருநீறு துலங்க - திருக்கோலம் தந்தருளும் - செல்வனே!... சிவபெருமானே!... சிற்றிடையாள் மை தீட்டிய கருந்தடங்கண்ணி உமையம்மையின் நாயகனே!...

எங்கள் ஐயனே!...வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்கின்ற  தாமரை மலர்கள் பூத்துத் தவழும் அகன்ற தடாகத்தில் - இந்த இளங்காலைப் பொழுதில் -  ''முகேர் முகேர்'' என ஒலி எழும்பும்படி வளைக்கரங்களால் நீரில் துழாவிக் குடைந்தும், குளிர்ந்த நீரில் மூழ்கியும் பெருமகிழ்ச்சியுடன் விளையாடிக் குளித்து - உந்தன் திருவடித் தாமரைகளைப் புகழ்ந்து பாடி - வழி வழியாக வரும் நெறிமுறைகள் தவறாதபடி தாமரைத் திருவடிகளுக்கு அன்பராய் - அடியவராய் நாங்கள் வாழ்ந்தோம்!...

பெருமானே!... தங்களிடம் அன்பு கொண்ட எம்மை அடியவராய் ஆட்கொண்டு அருளும் திருவிளையாடலின் வழி - இந்த உலக வாழ்வில் துன்பம் நீங்கி உய்வடைந்தார் உய்யவடைந்த வண்ணம் நாங்களும் பெற்று விட்டோம்.. இனி இப்பிறவியில் இடர் படாதபடிக்கு எம்மை காத்தருளவேண்டும்!...

என இறைஞ்சி நிற்க.. வாராய் ... எம் பாவாய்!.....


ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்ப அரவஞ்செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர்  எம்பாவாய். - 12

நம்முடைய பிறவிப்பிணி தீரும்படிக்கு சிவ வழிபாடு இயற்றும் பொருட்டு - புறந்தூய்மை அமைவான் வேண்டி - நாம் குளித்து விளையாடும் இந்தப் பொய்கையின் தீர்த்தமாக  நம்பெருமானே திகழ்கின்றனன். 

தில்லைச் சிற்றம்பலத்தில் அங்கையில் அனலேந்தி ஆடும் அற்புதக் கூத்தன். விண்ணையும் மண்ணையும் இங்கே நிலை பெற்றுள்ள எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிபவன்.


அத்தகைய ஈசனின் பெரும் புகழினைப் பாடிய வண்ணம், தாமரை மலர்கள் பூத்து விளங்கும் இப்பொய்கையின்  நீரைக் குடைந்து குடைந்து குளிக்கும் போது - கைகளில் உள்ள வளையல்கள் அதிர்ந்து ''கல கல'' என ஒலிக்கின்றன. இடையில் அணிந்துள்ள மேகலையின் மணிகள் அசைந்தாடி ''சலசல'' என்று இசைக்கின்றன. அது மட்டுமா?...

கூந்தலில் தவழும் நறுமணத்தினை உணர்ந்து வண்டுகள் ரீங்காரத்துடன் சுற்றி வருகின்றன. மனமும் பெரு மகிழ்ச்சியுடன் பெருமிதமும் கொள்கின்றது...

இவ்வேளையில் நம்மை உடையானாகிய பெருமானின் பொற்கழல்களைப் பாடித் துதித்து  -  இந்த அருஞ்சுனையில் மார்கழி நீராடுவோம்!...

வாராய்!.... எம் பாவாய்!...
திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, டிசம்பர் 23, 2012

திருவெம்பாவை - 05

மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

முன்னைப் பழம் பொருள்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம் ஏலோரெம்பாவாய்!... 09 

காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படும் பழைமையான பொருள்கள் அனைத்தினுக்கும் முற்பட்ட பழைமையான பரம்பொருளே!...இன்னும் இனி வருங்காலங்களில் தோன்றி  இவ்வுலக மக்களுக்கும் மற்றவற்றுக்கும் பயனுள்ளதாக விளங்க இருக்கும் புதிய பொருள்களுக்குள் - புதுமையாகப் பொதிந்திருக்கும் புனிதனே!...

உன்னை எம்மை விட்டுப் பிரியாதவனாகப் பெற்றிருக்கும் அடியவர்களாகிய நாங்களே மிகவும் பேறு உடையவர்கள்!...

நின்னுடைய திருப்பெயரினால் சீரும் சிறப்பையும் பெற்றிருக்கும் நாங்கள் - 

அந்நிலையில் இருந்து வழுவாதிருக்க இனி என்றும் உன்னுடைய திருத்தொண்டர்களின் திருவடிகளையே பணிவோம்!... அவர்கள் ஆற்றும் திருப்பணிகளில் நாங்களும் ஒரு பங்கினராகி, சிவநெறிச்செல்வர்களாகிய அவர்களையே கணவராக - நல்லறமாகிய இல்லறத்தின் - துணைவராக அடைவோம். அவர்தம் குறிப்பறிந்து குறையின்றி - விருப்பங்களை நிறைவேற்றி அடிமையென உகந்து பணிபுரிவோம்.. 

எங்கள் இறைவா!... எமையாளும் அரசே!.. எங்கள் மனத்துள் இவ்வாறு ஊறித் ததும்பும் விருப்பங்கள் கூடிவர - எமக்கு அருள் புரிவையாயின் எவ்விதக் குறையும் இல்லாதவர்களாக நின் பணி செய்து கிடப்போம்!....

என்று பரமனின் பதம் பணிய .... பாவாய்!... துயிலெழுந்து வாராய்!....

மாதொரு பாகன்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!...10

இறைவனின் திருவடிக் கமலங்கள், வராகமாகத் திரு அவதாரம் செய்து தேடியும் நாரணனால் அறிய இயலாதனவாக - பாதாளம் ஏழினுக்கும் கீழாக விவரித்துச் சொல்வதற்கும் அரியனவாக - விளங்குபவை. 

பொங்கிவரும் கங்கைக்கும் பிறைச்சந்திரனுக்கும் வில்வம், கொன்றை - என பல்வகை மலர்களுக்கும் இடமாக விளங்கும்  இறைவனின் திருமுடியோ மேலினுக்கும் மேலாக - எல்லாவற்றுக்கும் மேலாக - மேன்மையுற்றனவாகத் திகழும் பெருமையை உடையது. 

அவன் ஏகனாக ஒன்றியும், அனேகனாக பரந்து விரிந்தும் விளங்குபவன். இடபாகத்தில் உமையம்மையை - ஒருகூறாகக் கொண்ட குழகன். அழகன். நான்கு வேதங்களும் விண்ணவரும் மண்ணவரும் மற்றவரும் ஊழிக் காலந்தொட்டு பாடிப் புகழ்ந்து பரவினாலும் இன்ன தன்மையன் என்று உரைக்க இயலாதவன். 

உற்ற தோழன்....உயிர்த் துணைவன்.... ஒன்றையும் நாடாதவர் தம் நடுவிருப்பவன்... 

அப்பெருமானின் திருக்கோயிலை சார்ந்து அலகிட்டும் மெழுக்கிட்டும் இருள் கெட திருவிளக்கேற்றியும் இண்டை மாலை புனைந்து சாற்றியும் இரவும்  பகலும் அகலாது அருகிருந்து அணுக்கத் தொண்டாற்றும் அன்புடையீர்!.... 

கன்னி மாடத்தில் உறைந்து உள்ளம் உகந்து திருக்கோயிற் பணி புரியும் கன்னியரே!....

அவன் ஊர் எது?... அவன் பேர் எது?... அவனுக்கு உற்றார் யார்?... அவனுக்கு அயலார் யார்?... அவனைப் பாடிப் பரவும் வழிதான் யாது?...

என வினவி அறிந்து பரமனின் பதம் பணிய -  பாவாய்!.. துயிலெழுந்து வாராய்!..
திருச்சிற்றம்பலம்

சனி, டிசம்பர் 22, 2012

திருவெம்பாவை - 04

ணிக்கவாசகப்பெருமான் 
அருளிய 
திருவெம்பாவை

தஞ்சாவூர்14
சிவன் என்றே வாய் திறப்பாய்
 அன்னே! இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியன் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லோமுஞ்
சொன்னோம் கேள்! வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ!
வன்நெஞ்சப்பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் - 07.

எம் பாவாய்!...இுவைக்கும் உன்னிடம் நங்கள் ொன்ெல்ாம் ஞ்சம்ான!.... 

ஈசன் எம்பெருமான் - அமர்ால் நினத்ுப் பார்க்கும் அரியன்!... ஒப்பற்றன்!... ெரஞ்சிறப்பினையும் புகினையும் உடைய ம் பெருமானின் ிருக்குறிப்ுகக் கண்டாலும் ேட்டாலும், அந்க் க மெய் உருகுவாயே!.. 

ஈசனின் ரிஷபக் கொடியினைக் கண்டதுமே ''சிவ சிவ'' என்பாயே!...ஐயனின் திருக்கோயிலின் சங்கின் ஓசையை கேட்டதுமே ''சிவ சிவ'' என்பாயே!.. 

''தென்னாடுடைய சிவனே போற்றி'' என்று நாங்கள் சொல்வதற்கு முன்னரே - '' எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' என்று நீ புகழ்ந்து உரைப்பாயே!... அனலிடைப்பட்ட மெழுகென உள்ளம் உருகி அன்பினால் தவிப்பாயே!... 

ஆனால் உனக்கு என்ன ஆயிற்று இப்போது ?... நீ விரும்பிக் கேட்டு இன்புறுவாய் என்றல்லவா - நாங்கள் எல்லோருமாக  ''எம் தலை! எம் அரசே! எமக்கு இன்னமுதே!'' - என்று பலவாறாக இறைவனைப் புகழ்ந்தோம்!... இறைவனின் திருப்பெயர்களைக் காதில் கேட்டும்  - துயில் எழாமல் இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே!... 

கல் நெஞ்சக் கன்னியர் போல் அசைவற்று நீ கிடந்தால் - உன் தூக்கத்தின் பெருமைதான் என்னே!....
தஞ்சாவூர்
சிலம்பும் குருகு எங்கும்
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ!
வாழி ஈதென்ன உறக்கமோ!.. வாய் திறவாய்!..
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்! - 08
விடிந்தது பொழுதென - சேவலும் கூவிற்று.. தூக்கம் கலைந்த மற்ற பறவையினங்களும் கூட்டை விட்டு  வெளியேறி உற்சாகத்துடன் பாடித் திரிந்தன. உய்வடைந்தோம் என ஊரும் விழித்தது.

கோயில்கள் தோறும் ஏழிசையாய் இசைத்தமிழாய் மங்கல வாத்தியங்கள் ஒலிக்கின்றன. வெண்சங்குகளும் ஓங்கி முழங்குகின்றன.  

அருட்பெருங்சோதியாகிய இறைவனின் நிகரில்லாத பெருங்கருணையையும் பெரும் புகழினையும் பாடிப் புகழ்ந்தோமே... கேட்கவில்லையா.....நீ?....

வாய் திறந்து பேசவும் இயலாதபடி  உறக்கம்...  நன்றாக இருக்கிறதடி!.... 

சக்கரம்  ஏந்திய திருமால் போல ஈசனிடத்தில் அன்புடையவள் என்பாயே... உன் அன்பு இப்படித்தானோ!...

ஊழிக்காலத்தில் தனிப்பெரும் தலைவனாகத் தோன்றும் ஈசனை, உமையொரு பாகனாக விளங்கும் உத்தமனை, அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருமருந்தென அருளும் ஐயனை - பாடிப் பரவ வேண்டாமா!... 

பாவாய்....எழுந்திராய்!...
திருச்சிற்றம்பலம்

வெள்ளி, டிசம்பர் 21, 2012

திருவெம்பாவை - 03

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 
திருவெம்பாவை

எமக்கும் ஏனோர்க்கும் தங்கோன்

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! - 05

திருமால் ாக அவாராகியும்  நான்முகன் அன்ன வடிவாகியும் - தேடிக் கண்டறிய முடியாத  திருவடிகளையும் திருமுடியினையும் உடையவன். அத்தகைய அருட்பெரும்சோதியாகிய இறைவன் உறையும் அண்ணாமலையினை நாம் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும் என்றல்லவா நீ பேசுகின்றாய்!..

பாலுடன் தேனும் சுரந்து  - கலந்த சுவையைப் போலத் தித்திக்கத் தித்திக்கப் பேசும் வாயாடிப் பெண்ணே!...உன் பேச்சு கேட்பவரை மயங்க வைக்கும் மாயப்பேச்சு!...வஞ்சகீ..வா...வந்து கதவைத் திற!... 

அந்த விண்ணும் இந்த மண்ணும் மற்றுமுள்ள சர்வலோகமும் கூடி முயன்றால் கூட அறிந்து கொள்ள முடியாத அருமை பெருமைகளை உடைய  ஈசன் -  எளியவர்களாகிய நம்மை -  நம் பொருட்டு - தானே முன் வந்து நம்மிடையே மலிந்து கிடக்கும் தவறுகளை எல்லாம் மன்னித்து, ஆட்கொண்டு அருளி தன்னுடைய திருக்கோலத்தினைக் காட்டி நம்மைப் பரிவுடன் பரிபாலிக்கின்றான். 

அப்படி சீராட்டும் ஐயனின் அரும்  குணத்தையும்  பெரும் திறத்தையும் உவந்து உள்ளுருகி ''சிவனே! சிவனே!'' என்று பாடுகின்றோமே உனக்குக் கேட்கவில்லையா?... ஈசன் பெருமையினை உணர்ந்து துயில் நீங்கி எழாது படுக்கையில் கிடக்கின்றாய்!... 

அடர்ந்த கருங்கூந்தலில் நறுமணச்சாந்தினைப் பூசி அழகாக முடித்தவளே!...இது உனக்கு தகுமா?...

மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போனதிசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன்வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! - 06

பாவாய்!...எம் தோழி!...நாளை புலரும் போதில் நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறினாய்!...ஆனால் இன்று பொழுது புலர்ந்தும் சிறிதும் நாணம் இன்றித் தூங்குகின்றாய்!...நேற்று நீ சொன்ன சொல் போன திசை எது என்று அறிவாயா?...உனக்கு மட்டும் இன்னும் புலரவில்லையா!...

ானுலத்ினும் இந்ிலுலத்ினும்ற்றுமுள்ள ி உலத்ினும் அறிந்ு கொள்வற்கு அரியன். அந் ஈசன் ானே முன் வந்ு நம்மைக் கத்ஆட்கொண்டுளும் கற்சேவிகை உடையன். 

அந்த் ிருவிகை மெய்யுருகப் பாடிப் பிி - இங்கு உன் வாசுக்கு வந்த எங்கிடம்ாய் ிறந்ு பல் புக்கையில் கிடக்கின்றாய்.. 

ஊன் உருகி உன் உள்ளம் உருகவில்லையா உனக்கு? உருகாத் தன்மை உனக்கே உரியது போலும்!... நமக்கும் பிறர்க்கும் தனிப் பெருந்தலைவனாகத் திகழும் சிவபெருமானைப் பாடிப் பரவிட இனியாவது துயில் நீங்கி எழுந்து வாராய்!....
ிருச்சிற்றம்பம்

வியாழன், டிசம்பர் 20, 2012

திருவெம்பாவை - 02

மாணிக்கவாசகப் பெருமான் 
அருளிய 
திருவெம்பாவை. 

திருவாசகம்
அருள்மிகு சொக்கலிங்கம்
திருச்சிற்றம்பலம்

முத்தன்ன வெண்நகையாய்! முன்வந்து எதிர் எழுந்தென் 
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆண்டாற் பொல்லாதோ?
எத்தோ நின் அன்புடைமை எல்லாம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! - 03

முத்துக்களைப் போன்ற அழகிய பற்களை உடையவளே! எம்பாவாய்! 
நீ எங்களுக்கு முன் துயில் எழுந்து -  
எம்மைத் துயிலில் இருந்து எழுப்பி - எம் எதிரில் நின்று, 
'' என் அத்தனே! என் வாழ்வின் ஆனந்தனே! என் உயிருக்கு அமுதனே! 
என்று வாழ்த்தி - வாய் இனிக்க, சொல் இனிக்க, செவி இனிக்க 
இறைவனைப் புகழ்ந்து பேசுவாயே!...இப்போது உனக்கு ஆனது என்ன? இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே!....வா... வந்து கதவைத் திறவாய்!...

தோழியரே!...நீங்கள் ஈசனிடத்தில் பேரன்பு உடையவர்கள்...
ஏனெனில் ஈசனுக்கு முன்பே அடியார்களாகியவர்கள்.. 
அதனால் எதிலும் நெறி உடையவர்கள்..ஆனால் 
நானோ புதிதாய் அடிமை பூண்டுள்ளேன்... என் செயல்களில் சிறிது 
குற்றம் உண்டாகும் தான். எனினும் ஈசனின் பொருட்டு - அதனைப் பொறுத்துக்கொள்ளல் ஆகாதா? பொல்லாததாகி விடுமா! 
நான் கொன்டுள்ள அன்பு வஞ்சனையின் பாற்பட்டதா..என்ன!... 

பாவாய்!... உன் அன்பினைப் பற்றி நாங்கள் மிக மிக நன்றாகவே அறிவோம். உன்னைப் போல் மிக்க அன்புடையவர்கள் ஈசனைப் பாடாமல் இருப்பார்களா?
(ஆயினும் இன்னும் படுக்கையினின்றும் நீ எழாதது ஏன்?) 
உன்னைத் தூக்கத்திலிருந்து எழுப்ப வந்தோமே!...
எங்களுக்கு இதுவும் வேண்டும் தான்!..
ஈசன் புகழினைப் பாட - தாள் திறந்து கொண்டு வாராய்!.... 

ஒண்ணித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ
என்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் - அவ்வளவும்
கண்ணை துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்! - 04. 

பாவாய்!... ஒளிரும் புன்னகை உடையவளே!...
(பேச்சுக்கு மேல் பேச்சாகப் பேசிக்கொண்டு படுக்கையில் கிடக்கின்றாயே!) 
உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?...

வண்ணக் கிளியின் மழலை என மொழியுடைய எம் தோழியர் 
எல்லோரும் வந்து விட்டனரா?...
(கொஞ்சம் எண்ணிப் பாருங்களேன்.. அதுவரைக்கும் 
சற்று அயர்ந்து கொள்கிறேன்!....) 

உள்ளபடியே  சொல்லுகின்றோம்...அதெல்லாம் அப்போதே சரியாக எண்ணியாகி விட்டது...நீ அதற்காக கண்ணுறங்கிக் காலத்தை வீணாகக் கழிக்காதே!.... விண்ணில் உறையும் தேவர் தமக்கு அமுதம் போன்ற எம் இறைவனை, வேதங்களின் உட்பொருளாய் நிறைந்திருக்கும் எம் ஈசனை, எம் கண்களுக்கு இனியவனாய் விளங்கும்  எம்பெருமானை - மனங்குழைந்து நெஞ்சம் நெகிழ்ந்து நெக்குருகி பாடிப் பரவுகின்ற இனிய வேளை இது.. இவ்வேளையில் எங்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை. 

எனவே நீயே கதவினைத் திறந்து கொண்டு வருவாயாக!..
(அப்படியாவது வெளியே வருகின்றாயா என்று பார்க்கிறோம்..) 
வந்து தோழியரை எண்ணிப் பார்...(தோழியரையும் எண்ணிப் பார்...) 
தோழியர் எண்ணிக்கை குறையுமானால் ...
நீ மறுபடியும் உள்ளே போய் மீண்டும் தூங்குவாயாக!...
திருவாசகம்
திருச்சிற்றம்பலம்

புதன், டிசம்பர் 19, 2012

திருவெம்பாவை - 01

 
ிக்காசப் பெருமான் 
 அருளிய  
திருவெம்பாவை

 
 திருஅண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது


நடராசர்
ென்னாடுடையிவே போற்றி
திருச்சிற்றம்பலம் 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ? நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!...01.

ியும் அந்ும் இல்லிவெருமான் அடிும் முடியும் அறிய முடியாறு அனற் பிழம்பாய் அருட்பெரஞ்சியாய் ின்றர். அந் ேவின்  ண்ிலங்கும் ுட்பங்கல்கை நங்கள் வாழ்த்ியும் ோற்றியும் ாடுவ -ாரக் ேட்ட ின்னும் ுயில் நங்கி எழாமல்   இன்னும் உறங்கிக் ொண்டிருக்கின்றாய்... ியண்கை உடைய எம் ோழிய... என்னேளாச் செவியினை உடையா?...
 
ும் வியில் ஈசங்கள் வாழ்த்ியும் ோற்றியும் ாடுவெவிமத் ஒரோழி ிம்மி அழெய்மறந்த்ென் ஞ்சையின் மேல் இரந்துரண்டு விழுந்ே!... 

ீயஈசன் புகழ் கேட்டும் ங்கதூக்கத்திலிருந்து எழாமல் கிடக்கிறாய்!.. 
அவளோ ஈசன் புகழ் கேட்ட  மூர்ச்சையாகிக் கிடக்கின்றாள்..  
ு என்னிந்ை?

  பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
 பேசும்போ தெப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்! நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்!... 02.
 
ி... சிறந்த அணிகன்க அணிந்து பொலிபவளே!.. இரவிலும் பகலிலும் நாம் கூடிப் பேசும் போதெல்லாம் பரஞ்சோதியாய்த் திகழும் பரமனுக்கே என் அன்பும் பாசமும் என்று கூறி மகிழ்வாய். ஆனால் இப்போது மெத்தென்ற பஞ்சணைக்கே உன் பாசத்தினை வைத்தாய் போலும்!...

என்னைப் பிறந்த அணிகன்க அணிந்து பொலியும் என் அன்புக்குரிய தோழியரே!.. நமக்குள் என்ன வேறுபாடு?... ஏதும் இல்லை!..
சற்று நேரம் அசந்து தூங்கியதால் சீ...சீ...என்னைப் பழிக்கும் நேரமா இது?.. 

விண்ணோரும் தலை வணங்கி வழிபடுவதற்கு நாணுகின்ற திருவடித் தாமரைகளை - ஒரு குற்றமும் அறியாத அன்பருக்குத் தந்தருள என்று 
எங்கும் சிவலோகனாக நிறைந்துள்ள ஈசன் - 
தில்லைச் சிற்றம்பலத்தில் நடம் புரியும் எம்பெருமான் 
இங்கு எழுந்தருளும் சமயமல்லவா!.. 
அந்த இறைவனுக்கு நாம் அன்புடையோம் அல்லவா!...
நாமும் ஒருவருக்கொருவர் அன்புடையோம் அல்லவா!...
தோழியரே!... உணர்ந்து கொள்வீர்களாக!...
நந்தி
முதற் குருநாதன் போற்றி
ேன்மிகுமுரம் ீனம் வெளியிட்டுள்ள உரையினை அனுசித்ு எழப்பெற்ற .