நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 11, 2025

குடமுழுக்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
தைப்பூசம்
தை 29
செவ்வாய்க் கிழமை


நேற்று காலையில்
புன்னை நல்லூர்
ஸ்ரீ முத்துமாரியம்மன்
திருக்கோயிலின்
 திருக் குடமுழுக்கு 
நடைபெற்றது..





கடங்கள் புறப்பட்ட வேளையில் நெரிசலுக்கிடையே எளியேன் பதிவு செய்த காட்சிகள்..






நாகம் போல - தீப்பந்தத்தில் எழுந்திருக்கின்ற தீச்சுடர்.








கீழுள்ள படஙகளுக்கு நன்றி
தஞ்சை கோரக்க சித்தர் வழிபாட்டுக் குழு.













ஓம் சக்தி ஓம்


அடியேனின் பாமாலை

பச்சை வண்ணப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி
பாசத்துடன் வந்தவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

நீல நிறப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி
நெஞ்சமெல்லாம் நின்றவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

மஞ்சள் வண்ணப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி 
மனங்கொண்டு வந்தவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

அரக்கு நிறப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி 
ஆதரவா நின்றவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

செம்பட்டுப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி
சீர் அள்ளிக் கொடுத்தவளே முத்துமாரி 
அம்மா முத்துமாரி

கமல வண்ணப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி 
கை கொடுக்க  வந்தவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

தளிர் வண்ணப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி
தடம் பதித்து வந்தவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

புனல் வண்ணப் புடவையிலே முத்துமாரி
அம்மா முத்துமாரி
பொங்கு வளம் தருபவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

அனல் வண்ணப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி
அருளாகி நின்றவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி


தங்க நிறப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி 
தாயாகி வந்தவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

வெள்ளி நிறப் புடவையிலே முத்துமாரி 
அம்மா முத்துமாரி 
விழி தந்தது காத்தவளே முத்துமாரி..
அம்மா முத்துமாரி

பூவாடை பொலிந்து வரும் முத்துமாரி 
அம்மா முத்துமாரி 
புது வாழ்வு தந்திடுவாய் முத்துமாரி..
அம்மா முத்துமாரி

அம்மா முத்துமாரி 
அம்மா முத்துமாரி 

ஓம் சக்தி ஓம்

அனைவரது வாழ்விலும் நலம் விளைய வேண்டிக் கொள்கின்றேன்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**


6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அருள் மிகும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் படங்கள், கும்பாபிஷேக படங்கள் அனைத்தும் பார்க்க பரவசம் தந்தது. அன்னையை மனதாற வணங்கி தரிசித்து கொண்டேன்.

    இறைவிக்கு தாங்கள் சூட்டிய பாமாலை அருமை. பாடி அன்னையை தொழுது கொண்டேன். அன்னை அனைவருக்கும் தன்னருளை வழங்கிட வேண்டுமாய் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் யாவும் பிரமாதம். ஆம், அக்னியில் தெளிவாக நாகராஜன் எழுந்தருளி இருக்கிறார். முன்னால் இருக்கும் மாமி செல்லை வைத்து பாதியை மறைக்கிறார்!

    பதிலளிநீக்கு
  3. கோரக்க சித்தர் தளத்திலிருந்து வாங்கிய படங்கள் திருமுழுக்கை தரிசிக்க வைத்தாலும், படங்கள் நீங்கள் எடுத்த படங்கள் அளவு தெளிவாயில்லை.

    பதிலளிநீக்கு
  4. பாமாலை சிறப்பு. உங்கள் கைவண்ணத்துக்கு சொல்ல வேண்டுமா என்ன?

    முன்னரே யோசித்து, இதை A4 ஷீட்டில் உங்கள் பெயருடன் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு சென்று அங்கு வைத்திருந்தீர்கள் என்றால் ஆளாளுக்கு அள்ளிக்கொண்டு சென்றிருப்பார்கள்.

    அது ஒரு சேவைதானே...

    பதிலளிநீக்கு
  5. பாமாலையைப் படிக்கும்போது, அந்த பாணி பித்துக்குளி முருகதாஸ் பாடிய ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் நன்று. பாமாலை வெகு சிறப்பு. உங்களிடம் சந்தத்திற்கு கவி புனையும் திறமை இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..