நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 8
வியாழக்கிழமை
இன்று
கதம்ப ரசம்
(வெஜ் சூப்)
வேகவைத்த
துவரம் பருப்பு 3 Tbsp
உருளைக் கிழங்கு ஒன்று
கேரட் ஒன்று
குடை மிளகாய் ஒன்று
முட்டைக்கோஸ் தளிர் இலைகள் 2
வெங்காயக் குருத்து ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
பூண்டு 3 பல்
புதினா இலைகள் 3
மல்லித்தழை சிறிது
வெண்ணெய் அரை tesp
கல் உப்பு சிறிது
பாத்திரம் ஒன்றில் கேரட்
குடை மிளகாய் பூண்டு
முட்டைக்கோஸ் இலை வெங்காயக் குருத்து தக்காளி
வெங்காயம் இவைகளைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
உருளைக்கிழங்கை நறுக்கிப் போட்டு வெந்ததும் கரண்டியால் ஓரளவுக்கு மசித்து குழைத்து விடவும்..
புதினா, மல்லித் தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்..
எல்லாம் வெந்து கொதித்ததும் பருப்பைச் சேர்த்து உப்பு போட்டு நான்கு பேருக்கான சுடு நீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
மிளகுத் தூள் வெண்ணெய் சேர்த்து இறக்கி -
சற்று ஆறிய பின்,
அப்படியே அருந்துவதும் அல்லது வடிகட்டி அருந்துவதும் தங்களது விருப்பம்..
வாரத்தில் இருமுறை இப்படி அருந்தலாம்..
**
நமது சமையல்
நலந்தரும் சமையல்
நமது நலம்
நமது கையில்..
ஃ
ஓம்
சிவாய நம ஓம்
**
நல்லது. ஆனால் துவரம் பருப்பு மூன்று நிமிடங்களில் குழைய வெந்து விடுமா? உருளைக்கிழங்கை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டுமா?
பதிலளிநீக்குபருப்பு கிழங்கு இவற்றை முன்னதாகவே தயார் செய்து கொள்வது நல்லது..
நீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி.
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
நான் அடிக்கடி தக்காளி, சின்ன வெங்காயம், இரண்டு பொடியாக நறுக்கிக்கொண்டு பல் பூண்டு மட்டும் தட்டிச் சேர்த்து நீரில் கொதிக்கவிட்டு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வடிகட்டி அருந்துவோம்.
பதிலளிநீக்குஇதுவும் சரிதான்..
நீக்குஇப்படி ஒருமுறை செய்து பார்க்கிறேன். ஆனால் வெண்ணெய் எல்லாம் இருக்காது!
பதிலளிநீக்குதங்கள்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
பயனுள்ள குறிப்புகள்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
நல்ல கதம்ப ரசம்.
பதிலளிநீக்குநாங்கள் குட மிளகாய் சேர்ப்பதற்கு பதில் பீன்ஸ் 4 சேர்த்து செய்வோம். புதினா சேர்த்ததில்லை. உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்.
தங்கள்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
குறிப்பு நன்று துரை அண்ணா, இப்படிச் செய்வதுண்டு ஆனால் உருளைக் கிழங்கு சேர்க்காமல். வடிகட்டாமல்தான் சாப்பிடுவோம். சில சமயம் துவரம் பருப்பு, சில சமயம் பாசிப்பருப்பு அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்துச் சேர்த்து. சில சமயம் பருப்பு இல்லாமல் காய்கள் மட்டும் போட்டுச் செய்வதுண்டு.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பினுக்கு நன்றி.
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி தனபாலன்