நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 10
சனிக்கிழமை
இன்று
உளுத்தம் பருப்பு வடை
தேவையானவை :
உளுத்தம் பருப்பு 200 gr
பாசிப் பருப்பு 100 gr
பச்சரிசி 50 gr
பெரிய வெங்காயம் ஒன்று
பூண்டு 5 பல்
தேங்காய் ஒருமூடி
மிளகு 9
சீரகம் சிறிது
கறிவேப்பிலை 5 இணுக்கு
கடலெண்ணெய் தேவைக்கு
கல்உப்பு தேவைக்கு
செய்முறை:
உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சரிசி மூன்றையும் சுத்தம் செய்து தனித் தனியே ஊற வைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஊறிய பிறகு (தோல் நீக்காமல்)
வடிகட்டி எடுத்து மிளகு சீரகம் உப்பு சேர்த்து ) கொஞ்சமாக நீர் விட்டு,
வடைக்கு அரைப்பது போல - மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..
தேங்காயைத் துருவிக் கொண்டு வெங்காயம் பூண்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..
கறிவேப்பிலையையும் உருவிக் கொள்ளவும்..
அரைத்த விழுதுடன் தேங்காய் துருவல் வெங்காயம் பூண்டு
சேர்த்து கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப் போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி - உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்..
உளுத்தம் பருப்பு வடை தயார்.
தோல் நீக்கப்படாத பயறும் உளுந்தும் உடலுக்கு மிகவும் நல்லவை..
தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் நிறைந்த உணவுகள் உளுந்தும் பயறும் என்பதை நினைவில் கொள்வோம்..
சனி தோஷம் நீக்குவது உளுந்து.. ஸ்ரீ சனைச்சர ப்ரீதிக்கு உகந்தது உளுந்து.. இதனுடன் பாசிப்பருப்பும் சேர்ந்திருப்பது சிறப்பு..
நமது நலம்
நமது கையில்..
**
ஓம்
சிவாய நம ஓம்
**
உளுந்து வடையும், மெது வடையும் ஒன்றா? இல்லை மாதிரி தோன்றுகிறதே... மசால் வடை மாதிரி தெரிகிறது.
பதிலளிநீக்குபழைய குறிப்பில் இது உளூந்து உருண்டை.. நான் தான் வடை என்று மாற்றினேன்..
நீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி.
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பாசிப்பருப்பும்,அரிசியும் கலந்த உழுந்து வடை நல்ல செய்முறை.
பதிலளிநீக்குஉழுந்துவடை செய்வோம் தேங்காய் சேர்ப்போம். பாசிப்பருப்பும் அரிசியும் சேர்த்ததில்லை.
உளுந்து வடை - சுவையான குறிப்பு. முடிந்தால் செய்து பார்க்கச் சொல்கிறேன் வீட்டில்.
பதிலளிநீக்கு