நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 13, 2025

ஆடு பாம்பே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி முதல் நாள்
வியாழக்கிழமை


" விதையொன்று போட சுரை ஒன்று முளைக்குமா?.. " - என்பது பழந்தமிழர் வாழ்வியல்..

இன்றைய சூழலில் விதையென்று விதைத்தாலும் - முளை என்று முளைக்காது.. தழை என்று தழைக்காது..

ஏனெனில் இன்றைக்கு இயற்கையின் வித்துகள்  பலவும் முளைப்புத் திறன் அற்றவை...
இந்த வளையத்துக்குள் மனிதமும் சிக்கிக் கொண்டிருக்கின்றது..

ஆனாலும்,

வாழ்க அறிவியல்.. என்றே கூச்சல்..

காளையின் அணைதல் இன்றிக் 
பசுக்கள் - கருக் கொள்கின்றன.. அதனால் சுரக்கின்ற பாலைச் சுரண்டிச் சுரண்டி சத்துக்களை எல்லாம் எடுத்து விட்டு இதுவாக அந்தப் பாலில் செயற்கையை ஏற்றி விட்டு ஆரோக்கியம் என்கின்றது விஞ்ஞானம்.. 

வாழ்க அறிவியல்!..

பிரியாணிக் கடையில் உணவாகின்ற கோழிகள் ஆரோக்கியமானவை என்கின்றது விஞ்ஞானம்.. 

அப்படியானால் கரு தரிக்க வேண்டுமே.. முட்டை இட வேண்டுமே.. 

அதெல்லாம் நடக்கவே நடக்காது.. ஏன் எனில் அதற்கு லாயக்கற்றவை அந்தக் கோழிகள்.. 

கொத்தித் திரியும் அந்தக் கோழி.. - என்கின்றார் மகாகவி..

நிலத்தில் மேய்ந்து தீனி தின்பதற்கும் திறனற்றதான பிராய்லர்
கோழிகளைத் தின்கின்றவர்களுக்கும்  - உடல் உபாதைகள் ஏராளம்  என்கின்றனர் விவரம் அறிந்தோர்..

இப்படி - 
எதற்கும் லாயக்கற்ற கோழிகள் என்றால்?.

வாழ்க அறிவியல்!..

இதுதான் கலி காலம்..


அன்றைக்குக் கூரை வீடுகள்..
அரைகுறை இருட்டில்  அடுக்களைகள்..  

ஆனாலும்  ஆரோக்கியம் மிகுந்து இருந்தது...  ஆறேழு பிள்ளைகள் என,
அன்பின் ஆனந்தம் தவழ்ந்திருந்தது.. 

வாழ்வில் வறுமை இருந்த போதும் செம்மை செழித்திருந்தது... 

இருந்த போதும் தேசத்துக்கு ஆகாதென்று  தேடிப் பிடித்து கருவின் நரம்பை நறுக்கினார்கள்..

இன்றைக்கு எடுப்பான வீடுகள்.. வறுமை என்ற வார்த்தைக்கே இடமில்லை.. அங்கிருந்தும் இங்கிருந்தும் லட்சக் கணக்கில் வருட வருமானம்.. 
பளீரென்ற அழகுடன் கிச்சன்கள்..  

இதயங்களில் மட்டும் இருட்டு..

எவனோ எப்படியோ எங்கோ சமைத்ததை வரவழைத்துத் தின்று விட்டு, 

குழந்தைப் பேற்றுக்காக - காசு கொடுத்து வாங்கிய குளு குளுப்பான சிற்றுந்தில் அமர்ந்து கருத்தரிப்பு கூடத்திற்கு -  
முன் பதிவுடன்
ஓடுகின்ற காலம் என்றாகி விட்டது...

வாழ்க அறிவியல்!..

: நீதி :
கதை என்று களித்தாலும்
விதை என்று விதைத்தாலும்
காசுக்குப் போகாதது காலின்
தூசுக்கு ஆகாத தென்றாடு பாம்பே..
விதையில்லா விதை எல்லாம்
வீதியிலே வீசியபின் வீரியமே
கதியாக ஆடு பாம்பே நல்ல 
நீதியாக தமிழோடு ஆடு பாம்பே.. 
பாம்பாட்டிச் சித்தர் 
மன்னிப்பாராக..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. நல்லதொரு வாழ்க்கை முறைக்கு மறுபடி போகவேண்டுமென்றால் 60, 70 களுக்குச் செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிவு வழி பகிர்ந்து கொண்ட ஆதங்கம் - நம்மில் பலருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. "விதைக்காத முளைகள் "...பற்றிய பகிர்வு இன்றைய நிஜத்தை அப்பட்டமாக சொல்கிறது.
    எங்கே போகிறது இக்கால வாழ்க்கை?????

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..