நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
இன்று
தை 28
திங்கட்கிழமை
புன்னைநல்லூர்
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின்
திருக்குடமுழுக்கு
நேற்று அடியேனால் எடுக்கப்பட்ட
யாகசாலைக் காட்சிகள்..
மாண்பமையச் செய்தவளே
மக்களுக்குத் தாயாகி
மனம் உவந்து நிற்பவளே
பொன் னள்ளிக்
கொடுத்தாலும் ஈடாக ஆகிடுமோ
தக்கதொரு மொழி கொண்டு
தாள் மலரைப் போற்றுகின்றேன்..
முத்து முத்துச் சொல்லெடுத்து
முத்தழகி உன்னைப் பாட
எத்தனையோ பிறவிகளில்
என் பிழைகள் தொலையுதம்மா
அத்தனையும் அகல என்று
அன்னை மனம் குளிர என்று
வித்த்கியின் பெயர் பாடி
முத்து விளக்கேற்றுகின்றேன்..
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
படங்கள் பிரமாதம். நீளவாக்கில் எடுக்கப்பட்டுள்ள படங்களைவிட, படுக்கை வாக்கில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் இன்னும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅம்மையின் மேல் பாடப்பட்டுள்ள பா - மனம் கசிகிறது. அம்மையின் தாள் வணங்குவோம்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
இன்று காலை ஜோதி டி.சியில் நேரடி காட்சியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், பேரூர் பட்டிஸ்வரம் கோயில், நாகை நீலாயதாட்சி கோயில், கோவில்பட்டி சுந்தரேஸ்வரர் கோயில் மகாகும்பாபிசேகம் பார்த்தேன்.
பதிலளிநீக்குநீங்கள் நேரே பார்த்து தரிசனம் செய்வீர்கள் என்று நினைத்து கொண்டேன்.
ஓம் சக்தி ஓம்...
பதிலளிநீக்கு