நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 27, 2024

சப்த ஸ்தானம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
சனிக்கிழமை

இணையத்தில்

சோழ தேசத்தின் தனிப்பெரும் வைபவமான ஏழூர் திருவிழாவின் முதல் நாள் (சித்திரை விசாகம் 25/4)..

ஸ்வாமியும் அம்பாளும் நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவியுடன் திரு ஐயாற்றில் இருந்து புறப்பட்டு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி தலங்களில் தரிசனப் பேறு தந்தருளினர்.. 

கால சூழ்நிலையினால் ஒவ்வொரு தலத்திலும் சற்றே கூடுதல் நேரம் இருக்க வேண்டியதாகின்றது.. 

அந்த வகையில் நள்ளிரவுக்குப் பிறகு தான் ஐந்து பல்லக்குகளும் திருக் கண்டியூர் வீரட்டானத்தை வந்தடைய இருக்கின்றன - என்று சொல்லப்பட்டது.. 

ஆயினும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் கோயில் திருச்சுற்றில் காத்திருந்தனர்.. 

காலையில் இருந்தே அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெற்றிருக்கின்றது.

மூலஸ்தானத்தில் ஈசன் வெள்ளிக் கவசத்துடன் அருள்பாலிக்க அன்னை மங்களாம்பிகை சந்தனக்காப்பு அலங்காரத்துடன் திகழ்ந்தாள்..

கண்டியூர் வீரட்டான தரிசனம் கண்டு இரவு பத்து மணியளவில் இல்லம் திரும்பினோம்..

ஒளிப்படங்கள் - தஞ்சையம்பதி..












மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே.. 4/93/9
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஏப்ரல் 26, 2024

சப்த ஸ்தானம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 13
வெள்ளிக்கிழமை


சித்திரை (12) விசாக நாளாகிய நேற்று (25/4) தமது அன்புக்குரிய நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவி தம்பதியரை வெட்டி வேர் பல்லக்கில் அழைத்துக் கொண்டு அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பரும்  ஏழூர் திருவலமாக அலங்காரச் சிவிகையில் புறப்பட்டருளினர்..

மாமன்னர் ராஜ ராஜ சோழரின் பட்டத்தரசியாகிய லோகமாதேவியார் நடாத்திய விழா இது..

ஆயிரக்கணக்கான மக்கள் - உதயாதி நாழிகையில் கோபுர தரிசனம் கண்டு இன்புற - புஷ்ய மண்டபத்தில் எழுந்தருளி மகா தீப ஆராதனைக்குப் பின் திருப்பழனம் நோக்கிச் சென்றன பல்லக்குகள்..

அதிகாலையிலேயே புஷ்ய மண்டபத்தில் அன்னம் பாலிப்பு நடைபெற்றது..

அந்தத் திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்களை வழங்கியோர் :-
காவிரிக்கோட்டம், திரு ஐயாறு..

காணொளி :-
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டுக் குழு., தஞ்சாவூர்..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..




















பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன்  ஐயாறனாரே.. 4/38/9
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***




வியாழன், ஏப்ரல் 25, 2024

தேரோட்டம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
வியாழக்கிழமை


கடந்த சனிக்கிழமை (20/4) நடைபெற்ற - தஞ்சை தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் தொடர்கின்றன..

கீழ ராஜ வீதியில் மராட்டியர்  ஆட்சியில் கட்டப்பட்ட ஸ்ரீ பெருந்தேவித் தாயார் உடனுறை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.. 













தினத்தந்தியின் சிறப்புப் பதிப்பு

தொடர்ந்து வருகின்ற தேர்..
















பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நம சிவாயவே.. 4/11/ 2
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***