நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 17, 2024

ஸ்ரீ ராம ராம

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 4 
 புதன் கிழமை
ஸ்ரீ ராம நவமி


ஸ்ரீ ராம நவமி..
இன்று சித்திரை மாத சுக்ல பட்சத்தின் நவமி..

தஞ்சை ஸ்ரீ விஜயராமர் கோயில்



தஞ்சை மேல ராஜவீதியில் ஸ்ரீ விஜய ராமர் கோயில்.. (விஜய ரகுநாத நாயக்கர் காலம்)

தஞ்சை ஐயன்கடைத் தெருவில் மற்றுமொரு ஸ்ரீ ராமர் கோயில்..

தஞ்சை கீழவாசலில் ஸ்ரீயோக நரசிம்மர் கோயிலுக்கு நேர் எதிராக ஸ்ரீராமர் சந்நிதி..

புன்னைநல்லூர்
தஞ்சைக்கு அருகில் (4 கிமீ) புன்னை நல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்.. 
 தஞ்சை மராட்டியர் மன்னருக்கு நேபாள மன்னர் ஸ்ரீ தனமாக அளித்த சாளக்ராமத்தினால் அமைக்கப்பட்ட திருமேனி..

கருவறையில்  ஐந்தடி உயர சாளக்ராம மூர்த்தி..

புன்னைநல்லூர் புண்ணியன்
மூலவராக கிழக்குத் திருமுகமாக நின்ற திருக்கோலம்..


இறைவன் சாளக்ராமமாக காட்சி தருவது  அரிதிலும் அரிது.. 






புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலை எழுப்பியவர் மன்னர் பிரதாப சிம்மர்..

வடுவூர் அழகன்
தஞ்சையில் இருந்து 18 கிமீ தொலைவில் வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்..

மன்னர் சரபோஜி காலத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் பூமிக்குள் மறைந்திருந்த திருமேனிகள் உணரப்பட்டு தலைநகர் தஞ்சைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இவ்வூரில் ஓய்வெடுத்து - மறுநாள் காலையில் புறப்பட்ட போது ஊர் மக்கள் கண்ணீருடன் தடுத்து நின்றனர்.. 


ராமனே எங்களுக்கு வேண்டும்!..  - என்று..

கிராம மக்களின் அன்பில் நெகிழ்ந்த சரபோஜி மன்னரும் அவ்வூரில் இருந்த ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி கோயிலில் விக்ரகங்களை நிலை நிறுத்தி - பொன்னும் பொருளும் தானம் அளித்ததாக வரலாறு..

நீடாமங்கலம் சந்தான ராமர் கோயில்

 நன்றி இணையம்

அடுத்து,
தஞ்சையில் இருந்து 30 கிமீ தொலைவில் நீடாமங்கலம் ஸ்ரீ சந்தானராமஸ்வாமி திருக்கோயில்.. இதுவும் மன்னர் பிரதாப சிம்மன் காலத்தைச் சேர்ந்தது..


ஊனில் மேய ஆவி நீ  உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில்மேய ஐந்தும் நீ  அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ  வளங்கடற் பயனும் நீ
யானும் நீ அதுஅன்றி  எம்பிரானும் நீ இராமனே.. 845
-: திருமழிசை ஆழ்வார் :-

ஸ்ரீ ராம ராம 
ஜய ராம ராம..
***

7 கருத்துகள்:

  1. ராமநவமிக்கு அதிகாலை ராமர் தரிசனம். நன்றி. ஸ்ரீராமஜெயம்.... ஸ்ரீராமஜெயம்.... ஸ்ரீராமஜெயம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கண்ணீருடன் கடவுள் விக்கிரகத்தை தடுத்து நிறுத்தும் கிராம மக்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றனர். ம்ஹூம்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணீருடன் கடவுள் விக்கிரகத்தைக் கேட்டார்கள்...

      அது அந்தக் காலம்!..

      இந்தக் காலத்தில்...
      ஒன்றும் சொல்லக் கூடாது..

      ஸ்ரீராம் ஜெய் ராம்..

      நீக்கு
  3. ராவநவமி பதிவு அருமை.
    படங்கள் , செய்திகள் அருமை.
    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

      மகிழ்ச்சி.. நன்றி...
      வாழ்க நலம்..

      நீக்கு
  4. ராம நவமி நாளில் நல்ல தரிசனம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..