நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 11, 2024

வயல் 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 29 
வியாழக்கிழமை


வயல் என்ற வார்த்தை மங்கலத்துடன் தேவாரத்தில் பொதிந்திருக்கும் பற்பல பாடல்களுள்  ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் அருளிச்செய்த பாடல்களில் சிலவற்றைக் கடந்த பதிவுகளில் சிந்தித்தோம்..

அந்த வழியில் 
சுந்தர மூர்த்தி  ஸ்வாமிகள் அருளிச் 
செய்த திருப்பாடல்கள் 
சிலவற்றை இன்று சிந்திப்போம்..
 

திருநாட்டியத்தான்குடி
சுந்தரருக்கு உழவன் 
உழத்தியாக தரிசனம் அளித்த திருத்தலம்


குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டாரார் ஆகிலுங் கொள்ளக்
கண்டாலுங் கருதேன் எருதேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டாடும் வயல் தண்டலை வேலி
நாட்டியத்தான்குடி நம்பீ. 7/15/9

திருக்கோளிலி
(திருக்குவளை)


வண்டமருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன்றெரி
செய்தஎம் வேதியனே
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம் அது ஆயவனே அவை
அட்டித் தரப்பணியே.. 7/20/2

திருக்கற்குடி
(உய்யக்கொண்டான்)

வருங்காலன் உயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும்பாலன் தனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே. 7/27/9

திருநீடூர்

குற்றமொன்று அடியார் இலரானாற்
கூடுமாறு தனைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியிலும் இனி யானைக்
காணப் பேணும்  அவர்க்கு எளியானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
மூவரின் முதலாயவன் தன்னைச்
சுற்று நீர்வயல் சூழ் திரு நீடூர்த்
தோன்றலைப் பணியாவிட லாமே.. 7/56/5

திருக்கானப்பேர்
(காளையார்கோயில்)


தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்சு
உண்டு அதனுக்கிறவா தென்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோடு ஒள்ளரியும் உணரா
அண்டனை அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும்
ஆதியை மேதகு சீரோதியை வானவர் தம்
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப்பேர் உறை காளையையே.. 7/84/8

திருநாகேச்சரம்
(திருநாகேஸ்வரம்)

பாலனது ஆருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழுநீர் வயல் சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திருநாகேச்சரத்தானே.. 7/99/3
**
தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

இத்தகைய வளங்கள் தான்
நிறைவும் நிம்மதியும்..

வயலே வாழ்வு
வாழ்வே வயல்!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. திருநாட்டியத்தான்குடி பெயர் எங்கள் உறவுகளில் சிலர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பழகிய பெயர்.  திருக்குவளை கூட புகழ்பெற்ற ஊர்.  திருநாகேஸ்வரம் நானே சென்று வந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல் விவரங்கள் சிறப்பு..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாடல் பகிர்வு அருமை.
    பாடி வணங்கி கொண்டேன்.
    வளங்கள் நிறைந்த வயல் ,மக்களின் வாழ்வை வளமாக்கும் வயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..