நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 30, 2024

திருவீழிமிழலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
செவ்வாய்க்கிழமை



திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உரியதான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை உடனாய ஶ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா
சிறப்புடன் நடந்தது..

ஆறாம் திருநாளாகிய 
வியாழன்று (சித்திரை 5 ) மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில்,
ஞாயிறன்று திருத்தேரோட்டம்..

சித்திரை 8 ஞாயிறன்று (21/4) ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருமுன்னர் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது..

ஒளிப்படங்களை வழங்கியோர் - துறைசை ஆதீனம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


















கயிலாய மலையுள்ளார் காரோணத்தார்
    கந்தமா தனத்துளார் காளத்தியார்
மயிலாடுதுறையுளார் மாகா ளத்தார்
    வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபாலமும்
    அமரும் திருக்கரத்தார் ஆனேறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
    வீழி மிழலையே மேவினாரே.. 6/51/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இப்போதுதான் உங்கள் இன்றைய பதிவும் காணவில்லையே என எபியில் விசாரித்தேன். பிறகு இங்கு வந்து பார்க்கும் போது. அழகிய தேரோட்ட படங்களை கண்டு தரிசித்தேன். ஸ்ரீ வீழிநாத பெருமானையும், ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை அன்னையையும் தரிசித்துக் கொண்டேன். படங்கள், கோவில் பற்றிய விபரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு கோவில்களிலும் அன்றன்று நடைபெறும் நிகழ்வுகள், விஷேடங்கள் குறித்து தினம் ஒரு பக்திப் பதிவாக தரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவைப் ப்ற்றி எபி யில் தங்களது கருத்தைக் கண்டேன்..

      பதிவினைத் தேடி வந்த - தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
  3. வீழிநாதர் திரு தேரோட்ட படங்கள் அருமை.
    சுவாமிவிழிநாத பெருமானும், அன்னை சுந்தரகுஜாம்பிகையும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
    திருவிழீமிழலை தேவாரம் பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாமி வீழிநாதப் பெருமானும், அன்னை சுந்தரகுஜாம்பிகையும் எல்லாருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
  4. ஸ்ரீவீழிசுவாமி சுந்தராம்பிகை தேர்த்திருவிழா காட்சிகள் கண்டு வணங்கினோம்.

    படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..