நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 03, 2024

கோலாகலம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 21
புதன்கிழமை

கடந்த பங்குனி ஐந்தாம் நாள் (18/3) திங்கட்கிழமை அதிகாலை - கரந்தை  ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சூர்ய பூஜை தரிசித்து விட்டு அங்கிருந்து பேருந்தில் திரு ஐயாறு, திருநெய்த்தானம், கடுவெளி வழியாக வைத்யநாதன் பேட்டை பிரிவு சாலை..
அங்கிருந்து ஒன்றரை கிமீ நடந்தால் வைத்ய நாதன் பேட்டை..


வைத்யநாதன் பேட்டைக்குச் சென்று அங்கிருந்து ஒன்றரை கிமீ கொள்ளிடப் பெருநதியில் நடந்தால் வடகரையில் திருழபாடி..
  
திரு ஐயாற்றில் இருந்து பல்லக்குகள் வந்து கொண்டிருந்தன.. 

ஆதீன கட்டளை மடத்தின் தம்பிரான் ஸ்வாமிகள் அடியார் சூழ பல்லக்குகளுடன் நடைபயணமாக வந்து கொண்டிருந்தார்..

வாருங்கள்
அவர்களுடன் பயணிப்போம்..
இப்போது நேரம் காலை 10:15 மணி..


வைத்யநாதன் பேட்டைக்குச் செல்லும் வழியில்..








வைத்யநாதன்பேட்டை கிராம மண்டகப்படியில் வரவேற்பு..




கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள அம்மன் கோயில்..



கொள்ளிடத்தின் தெற்குக் கரை வழியே கொள்ளிடப் பெருநதிக்குள் இறங்குகின்ற பல்லக்கு..


கொள்ளிடப் பெருநதிக்குள் -  நடைவழிக்கு இதமாக
பலநூறு ரூபாய் மதிப்புள்ள
வைக்கோலை பரப்பி வைத்திருந்தனர் ஊர் மக்கள்..



இப்போது நேரம் பகல் 11:15 மணி..

நீர் கொண்ட மேகம் எதுவும் சூரியனைச் சூழ்ந்திருக்க வில்லை..  

கொதித்துக் கிடந்தது கொள்ளிடத்து மணல்.. 

ஆனாலும் மக்கள்  கொள்ளிட ஆற்றில் நடைவழியாக பரப்பி வைத்திருந்த வைக்கோல் -  கால்களுக்கு இதமாக இருந்தது..




கொள்ளிடப் பெரு நதியைக் கடப்பதற்கு 
ஏதுவாக டிராக்டர்..



கணுக்காலுக்கு மேலாகத் தவழ்ந்த தண்ணீரைப் பல்லக்கு கடக்கின்ற காட்சி










திருமழபாடி எதிர்சேவை

ஸ்ரீ நந்திகேசர்

இப்போது நடுப்பகல் 12:45

அனைவரையும் 
எதிர்கொள்வதற்காக திருமழபாடியில் இருந்து
ஸ்ரீ சுந்தராம்பிகையும் ஸ்ரீ வைத்யநாதப் பெருமானும் ஆற்றுக்குள் எழுந்தருள - கூடியிருந்த மக்களிடையே ஆரவாரம்..

கரையேறும் இடத்தில் பெரிய அளவில் அன்னதானம்..
அங்கிருந்து கோயில் அரை கிமீ..

அடுத்து கல்யாண கோலாகலம்..
**
நந்திகேசன்
திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. படங்களையும், காணொளியையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. காட்சிகளின் விவரிப்பு அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. கொள்ளிடக் கரையும் திருமழபாடியும் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பக்தி உலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..