நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 30, 2018

அழகர் தரிசனம் 2

27/4 அன்று மாலைப்பொழுதில்
அழகர் மலையிலிருந்து புறப்பட்ட
எம்பெருமான் - வழி நெடுகிலும் மக்களின்
அன்பினை ஏற்றுக் கொண்டவராக
மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை கண்டார்..

28/4 இரவு - தல்லாகுளம்
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் திருக்காட்சி நல்கினார்...

29/4 வைகறைப் பொழுதில்
ஆயிரம் பொன் சப்பரத்தில் சேவை..

இன்று அதிகாலையில்
பச்சைப் பட்டுடுத்திய கள்ளழகர்
ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொள்ள வைகையில் இறங்கினார்...


இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில்
எழுந்தருளும் எம்பெருமான்
இரவு வண்டியூரில் எதிர் சேவை கொள்கிறார்..








நாளை (1/5) பகல் 11 மணிக்கு
சேஷ வாகனத்தில் தேனூருக்கு எழுந்தருளல்..

மதியப் பொழுதில் கருட வாகனராக
மண்டூக மகரிஷிக்கு திருக்காட்சி...

இரவு முழுதும் தசாவதாரத் திருக்கோலம்...

2/5 காலை ஜகன்மோகினித் திருக்கோலம்...
இரவு பூம்பல்லக்கு....

மறுநாள் காலையில்
மக்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு
திருமாலிருஞ்சோலைக்குத் திரும்புகின்றார்..


கள்ளழகர் வருகிறார் - என்று,
தேரோடிய வைகைக் கரை
நீரோடித் திளைத்தது...

இனிவரும் நாளில்
கள்ளழகரின் பெருங்கருணையால்
சோணாட்டுக் காவிரியும்
நீரோடிச் செழிக்க வேணும்...

இன்றைய பதிவின்
மனதிற்கினிய காட்சிகளை
அழகிய நிழற்படங்களாக வழங்கிய
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
...


கள்ளழகர் திருவடிகள்
போற்றி.. போற்றி..
ஓம் ஹரி ஓம்..
ஃஃஃ

அழகர் தரிசனம் 1

நேற்று முன் தினம் (28/4) சனிக்கிழமை மாலை
அழகர் மலை எனும் திருமாலிருஞ்சோலையில்
பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமியிடம்
விடை பெற்றுக் கொண்டு மதுரையை நோக்கிப்
புறப்பட்ட கள்ளழகர் பெருமானுக்கு மதுரையின் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...


இன்று அதிகாலையில்
கோலாகல கொண்டாட்டத்துடன் வைகையில்
இறங்கியருள்கிறார்...

அந்த நிகழ்வுகள் வெளியாகும் முன்பாக
நேற்றைய நிகழ்வுகளைத் தரிசிப்போம்..






வைபவங்களின் நிழற்படங்களை
வழங்கிய அன்பு நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...
...

அழகர் பெருமானே
ஆதரிக்க வேணும் ஐயா!...
ஃஃஃ

சனி, ஏப்ரல் 28, 2018

மங்கலத் திருநாள் 7

மாமதுரைத் திருநகரில் நேற்றைய தினம்
அம்மையப்பனின் திருமண வைபவம்
கோலாகலமாக நடந்தது...

அதனைத் தொடர்ந்த நிகழ்வாக
இன்று காலையில்  -
எம்பெருமானும் எம்பிராட்டியும்
திருத்தேரில் எழுந்தருளினர்..

28/4 சனிக்கிழமை
பத்தாம் திருநாள்
திருத்தேரோட்டம்














தேரோட்ட நிகழ்வுகளை வழங்கிய
அன்பின் நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
....
அடுத்தடுத்த நாட்களில்
சித்திரைத் திருவிழாவின் நிறைவாக
தீர்த்தவாரியும் தேவேந்திர பூஜையும்
நிகழ்கின்றன..

தொடரும் கோலாகலங்களுடன்
இன்று மாலை
திருமாலிருஞ்சோலையிலிருந்து
கள்ளழகர் புறப்படுகின்றார்..

மங்கலங்கள் தொடர்கின்றன...
...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

மங்கலத் திருநாள் 6

நேற்று காலையில் மதுரையம்பதியில்
வெகு சிறப்பாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது...

திருக்கல்யாண கோலாகலம்
இன்றைய பதிவில்...











மாலையில் நிகழ்ந்த
திரு உலா





 

திருமணக் காட்சிகளை
வழங்கிய கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
...

மங்கலம் கொண்டாள்
மரகத வல்லி..
மாநிலம் காப்பாள்
மதுரைக்கு அரசி
ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 27, 2018

மங்கலத் திருநாள் 5

மதுரையம்பதியில் நிகழும்
சித்திரைப் பெருந்திருவிழாவின்
திருக்காட்சிகள் தொடர்கின்றன..

26/4 வியாழக்கிழமை
ஒன்பதாம் திருநாள்
மீனாக்ஷி திக்விஜயம்









இந்திர விமானத் 
திருக்காட்சிகளை
வழங்கிய
அன்பு நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
...

இன்னும் சிறுபொழுதில்
மதுரையம்பதியில்
திருக்கல்யாண வைபவம்..

மங்கலம்  அருள்வாள்
மதுரைக்கு அரசி..
ஃஃஃ