நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 19, 2020

திருவேங்கடவா..நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் சனிக்கிழமை..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***


மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1033)
-: திருமங்கையாழ்வார் :-

நோற்றேன் பல்பிறவி நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1035)
-: திருமங்கையாழ்வார் :-


உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்பொழுதும்
வரஇமேல் மரகதமே போல - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும்.. (2106)
-: பொய்கையாழ்வார் :-
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

வியாழன், செப்டம்பர் 17, 2020

ஆரா அமுதே..நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் நாள்..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1034)

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே.. (1040)
-: திருமங்கையாழ்வார் :-
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 15, 2020

ஷண்முக தரிசனம்

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
மூன்று காணொளிகள்..

முதலிரண்டும்
திருச்செந்தூரில் நிகழும்
ஆவணிப் பெருவிழாவின்
வைபவங்கள்.
கீழுள்ள
காணொளியிலேயே
விவரங்கள் இருக்கின்றன..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

அம்மன் தரிசனம் 4


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி கடை ஞாயிறு..
மகாகவியின் வழியில்
அம்மன் தரிசனம்..
***

தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்..


பாடியுனைச் சரணடைந்தேன் பாசம் எல்லாங் களைவாய்..
கோடி நலம் செய்வாய் குறைகள்
எல்லாம் தீர்ப்பாய்...


ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்..


துன்பமே இயற்கை என்னும் சொல்லை
மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்..


நம்பினார் கெடுவதில்லை நான்கு
மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி பாரதியார்:-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

நல்லதோர் வீணை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மகாகவியின்
நினைவு நாள்..
***

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!..


சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்..
வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே..
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ!..


விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்..


தசையினைத் தீச்சுடினும் சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்..
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ..
***

மகாகவியின் 
புகழ் வாழ்க

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 08, 2020

அம்மன் தரிசனம் 3


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
சென்ற ஞாயிறன்று
ஆவணி மாத தொடர் பதிவினை
வெளியிட இயலவில்லை..

இன்றைய தினம்
தென்காசிக்கு அருகிலுள்ள
அச்சங்குட்டம் எனும் ஊரிலுள்ள
ஸ்ரீ முத்தாரம்மன் தரிசனம்..

திருக்கோயில் நிர்வாகத்தினர்
FB  வழியாக
அம்மனின் திருக்கோலங்களை
வழங்கியிருந்தனர்...

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இரவு ஒன்பதரை மணியளவில்
வார்த்தைகளை வழங்கினாள்
அம்பிகை..

அன்னை அவளது அருள்
அனைவரையும் வாழ வைப்பதாக!..முத்து முத்து சொல்லெடுத்து
முத்தழகைப் பாட வந்தேன்...
முன்வினையைத் தீர்க்க என்று
நின்னடியைத் தேடி வந்தேன்...

நித்தம் எங்கள் வாசலுக்கு
பெத்தவளே நீ காப்பு..
உற்றவளாய் நீ இருக்க
மற்ற துணை வேறெதற்கு..


பித்தங் கொண்ட நெஞ்ச கந்தான்
தத்துங் கிளி ஆகிடுமா...
வித்தகி உன் சந்நிதியில்
முத்து மொழி பேசிடுமா..

என்னென்னவோ தீவினைகள்
எங்களையும் வாட்டுதம்மா..
எந்த பிழை ஆனாலும்
வந்து நீயும் ஓட்டுமம்மா...

முத்தெடுக்கும் வித்தகியாய்
முத்தார மாரியம்மா
முன் நடக்கும் நாயகியாய்
முத்தழகு தேவியம்மா..

குற்றாலச் சாரலிலே
குளிர் காற்றும் பாடுதம்மா..
வற்றாத அருள் சுரந்து
தமிழ்க் குடியை வாழ்த்துமம்மா..

தங்க நிற சூரியனாய்
தாய் முகமும் பளபளக்கும்
மஞ்சள் நிற மல்லிகையாய்
மாரி முத்து சிலுசிலுக்கும்..

தேடிவந்த கண்களுக்குள்
நிம்மதியும் ஊற்றெடுக்கும்
தேவி உந்தன் அருளாலே
தீபங்களில் வழி கிடைக்கும்...

சொல்லெடுத்துச் சொல்லு என்று
சொக்கத் தங்கம் சொல்லுரைத்தாய்
என்ன சொல்லி நான் உரைக்க
என்னை நீயும் வாழ வைக்க!...
***

முத்தாரம்மன் திருவடிகள்
போற்றி.. போற்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 04, 2020

வலம்புரி வாழ்க..

 

வலம்புரி நாயகனோ
நலம் தருகின்ற தூயவனோ
மடி தரும் தாயவனோ
அடியவர் நடுவினில் சேயவனோ!..

ஐங்கரத்தால் எம்மை
அணைத்திடல் வேண்டும்..
அருள் மழையால்  மண்ணை
நனைத்திடல் வேண்டும்...

கஜமுக நாயகன்
நலம் தருக..
படைமுகம் வென்றிட
துணை வருக..

வருவினை நோய்தனை
 தீர்த்திட வேண்டும்..
திருவருள் கணபதி
காத்திட வேண்டும்..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அழகான  இரண்டு காணொளிகள்..

இன்னும் சிறிது நேரம்
எடுத்திருக்கக் கூடாதா!..
என்றிருக்கின்றது..

கண்டு மகிழ்க..


தண்ணியக் கண்டா போதும்
கணேசனுக்கு சந்தோஷம் தான்!..

சத்தமாச் சொல்லாதே செல்லம்!..
தடையாணையோட யாரும்
வந்திடப் போறாங்க!..


எங்களுக்கும் தடையாணை
பிடியாணை..ன்னு பிரச்னை
ஏதும் வந்திடுமோ?...
***

நலம் வாழ்க!..
ஃஃஃ

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

அளந்தான் அடி போற்றி..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திரு ஓணம்..

அனைவருக்கும்
ஓணத் திருநாள் நல்வாழ்த்துகள்..
 

இறையெம் பெருமான் அருளென்று இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ அறைகழல
சேவடியான் செங்கண் நெடியான் குறலுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.. (2280)
-: ஸ்ரீ பூதத்தாழ்வார் :-


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும்  நின் கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்
எம்பாவாய்... (24)
-: ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-


அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும் சி றந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.. (825)
-: திருமழிசையாழ்வார் :-மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அயதெல்லாம் ஒருங்கு..
-: திருக்குறள் :-

அன்பின்
நல்வாழ்த்துகள்..

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2020

அம்மன் தரிசனம் 2நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆவணி மாதத்தின்
இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை..


ஆயி மகமாயி ஆயிரங் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள்..

சமயபுரத்தாளே
சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தில் நின்று
சந்ததமும் பாருமம்மா!...

வெள்ளிப் பிரம்பெடுத்து
வீதி வழி வாருமம்மா...
பிள்ளையென மனம் படைத்த
நல்லவரைப் பாருமம்மா!..


துன்பங்கள் சூழ்கையிலே
ஓடிவந்து தீருமம்மா!..
நோய்நொடி தீர்த்து எங்கள்
நெஞ்சத்திலே வாழுமம்மா!..

தீர்த்தம் கொடுப்பவளே எங்கள்
தீவினையை ஓட்டுமம்மா..
திருநீறு அளிப்பவளே நல்ல
தீபத்தினை ஏற்றுமம்மா!..

மஞ்சள் தருபவளே
மண் விளங்கச் செய்யுமம்மா!..
குங்குமம் கொடுப்பவளே எங்கள
குலம் விளங்கப் பாருமம்மா!..

குழந்தை வருந்துறது
கோயிலுக்குக் கேக்கலையோ..
மைந்தன் வருந்துறது
மாளிகைக்குக் கேக்கலையோ..


தஞ்சமென்று ஓடி வந்தோம்
தஞ்சை நகர் மாரிமுத்தே..
காலடியைத் தேடி வந்தோம்
பட்டுக்கோட்டை நாடிமுத்தே!..


மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே!..
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 29, 2020

ஸ்ரீ வாமன ஜெயந்தி..நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆவணி வளர்பிறை துவாதசி..
ஸ்ரீ வாமன ஜெயந்தி..

தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு
காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும்
திருக் குமரனாக
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
திரு அவதாரம் செய்தருளிய நாள்..


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்  பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர்
எம்பாவாய்!.
-: ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-


ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

அழகின் சிரிப்பு


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அழகான காணொளி
***

கணேசா!... என்ன தேடிக்கிட்டு இருக்கிறாய்?...

அதான் என்ன...ன்னு தெரியலை!..


வாழ்க நலம்
சூழ்க நலம்..
ஃஃஃ

புதன், ஆகஸ்ட் 26, 2020

நினைவுகள் மலர..


நினைவுகள் மலர
நலமே விளைக...

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று ஆவணி இரண்டாம் செவ்வாய்..

திங்கள் செவ்வாய் புதன்
மூன்று நாட்களும்
எங்கள் குல தெய்வம் உறையும்
உவரியில் ஆவணிக் கொடை..

நண்பகலிலும் நள்ளிரவிலும்
சாமி அழைத்தல் நடைபெறும்..

ஊரடங்கு உத்தரவினால்
இந்தத் திருவிழா எப்படி நடைபெறுகின்றது என்பது தெரியவில்லை...


எனினும்
சென்ற ஆண்டின்  சாமி அழைப்பு
இன்றைய பதிவில்...

கீழுள்ள காணொளி
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அழைப்பு..
இவர் எங்கள் தலைக்கட்டு
அர்ச்சகர் ஆவார்...


ஸ்ரீ பேச்சியம்மன்
 அழைப்பின் காணொளி
உள்ளது.. ஆயினும் நீளம் 
அதிகமானதால் பதிவேற்ற
இயலவில்லை..

வேறொரு சமயத்தில் அதனை
ஒழுங்கு செய்து தருகிறேன்...


குறையெலாம் பொறுத்து
குன்றாத நலம் அருள்க
குல தெய்வமே போற்றி!..
***
ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2020

அம்மன் தரிசனம் 1


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

ஆவணி மாதத்தின் ஞாயிறு எல்லாம்
அம்பிகைக்கு உரியவை..

அதிலும்
மாரி மகமாயித் தாயின்
வழிபாட்டுக்குரியவை..

நல்ல மனங்களுக்கு
நெருக்கமானவள் மகமாயி..
இன்பமோ துன்பமோ
அவளது சந்நிதியே 
நெஞ்சுக்கு நிம்மதி..

வெள்ளந்தியான மக்களுக்கு
அவளது கோயில்
இன்னொரு தாய்வீடு..

அந்த வகையில்
அவளைக் கொண்டாடுவோர்
ஆயிரம் நூறாயிரம்..

இன்றைய பதிவில்
தஞ்சை புன்னைநல்லூர்
ஸ்ரீ முத்துமாரி அம்மனின்
திவ்ய தரிசனம்..ஆவணிப் பெருந்திருவிழாவினை
முன்னிட்டு சென்ற வாரம்
திருக்கொடியேற்றம்..

உற்சவங்களை கோயிலின் உள்ளேயே
நிகழ்த்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
அனைத்தும் அவளது சித்தம்..

கொடியேற்றப் படங்களைத்
தவிர்த்து மற்றவை 
பல்வேறு சந்தர்ப்பங்களில்
எடுக்கப்பட்டவை..
சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 22, 2020

ஞான விநாயகன்நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
அனைவருக்கும் அன்பின் இனிய
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்


கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி
கப்பிய கரிமுகன் ... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறபவ
கற்பகம் எனவினை ... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன் மகன்
மற்பொரு திரள்புய ... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு ... பணிவேனே..

முத்தமிழ டைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை ... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-

நம்பிக்கு அருள் புரிந்த
நாரையூர் நாயகன்
விநாயகன்..


ஓம் கம் கணபதயே நம:

எல்லா இடர்களையும் நீக்கி அருள்வாய்
விநாயகப் பெருமானே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ