தமிழமுதம்
வானின்று உலகம் வழங்கி வருதலான்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று..(011)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 05
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயபெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் மலர்தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்..
தித்திக்கும் திருப்பாசுரம்
மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு
மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு
ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று..(2100)
-: பொய்கையாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
தல விருட்சம் - புரச மரம்
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே..(6/90)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 05
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
குறளமுதம் பருகி, பாசுரங்களில் திளைத்து, சிவ தரிசனம், லிங்கேஸ்வரரைத் தரிசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
காலை வேளையில் நல்லதொரு தரிசனத்துக்கும் பாசுரங்கள், பதிகப் பகிர்வுக்கும் நன்றி. தினம் ஒரு குறளாகப் பகிர்ந்து வருவதும் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களது அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவும் அருமை. அருமையான இறை தரிசனங்கள். இன்றைய ஆலிலை கண்ணனும், குருவாயூரப்பன், கஞ்சனூர் சிவ பார்வதி அழகு கோலங்களும் மனதிற்கு அமைதியளிக்கின்றன. பாசுரமும் பதிகமும் நாமணக்க இருக்கின்றன. தமிழமுதம் அருளமுதமென காலை எழுந்தவுடன் மனதுக்கும், கண்களுக்கும் இனியவையாக பதிவை தொகுக்கும் தங்களுக்கு அன்பார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஇந்த ஆண்டு புதிய வழியில் மார்கழிப் பதிவுகளைத் தருவதற்கு எண்ணியிருந்தேன்... அப்படிச் செய்வதற்கு இயலவில்லை..
எனக்குத் தெரிந்ததைப் பதிவுகளில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...
வருகை தரும் நண்பர்களின் கருத்துரைகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன..
மகிழ்ச்சி... நன்றி..
இன்றைய தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான தரிசனம். மனதுக்கு இதம் தரும் பாடல்கள்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நலமே விளையட்டும்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..