தமிழமுதம்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..(084)
***
இன்று
திரு ஆதிரைத் திருநாள்
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே..
-: திருநாவுக்கரசர் :-
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினாற்
பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டாம்
முத்தனே முதல்வா தில்லை
அம்பலத் தாடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்தவாறே.. (4/23)
-: திருநாவுக்கரசர் :-
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 15
ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் தஞ்சாவூர். |
.
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்...
*
ஓம் ஹரி ஓம்
***
சிவதரிசனம்
திருத்தலம்
ஸ்ரீவாஞ்சியம்
இறைவன் - ஸ்ரீ வாஞ்சிநாதர்
அம்பிகை - ஸ்ரீ மங்கலநாயகி
தல விருட்சம் - சந்தனம்
தீர்த்தம் - குப்தகங்கை
யம பயம் நீங்கும் திருத்தலம்..
ஹரி பரந்தாமன்
தன்னுடன் ஊடல் கொண்டு பிரிந்த
திருமகளை ஆற்றுப்படுத்தி
மீண்டும் அவளது திருக்கரம் பற்றிய திருத்தலம்..
இயமன் தனது மனக்கவலை நீங்கப்பெற்று
அம்மையப்பனைத் தனது தோள்களில் சுமந்த
திருத்தலம்..
நன்னிலத்துக்கு அருகில் உள்ள தலம்..
திருஆரூரில் இருந்து நகரப் பேருந்துகள்
இயக்கப்படுகின்றன..
*
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு.
திருமூலத்தானம் - ஸ்ரீவாஞ்சியம் |
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடை யிற்பொலி வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை ஆளுடை யானிடமாக உகந்ததே..(2/7)
*
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம்அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்... 19
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம்அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்... 19
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 20
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
இந்த அளவில்
நிறைவடைகின்றது..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
திருவாதிரை தின வாழ்த்துகள். ஸ்ரீவாஞ்சியத்திலிருந்துதானே எமவாகன உபயம் நடக்கும்?
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
ஸ்ரீவாஞ்சியத்தில் தான் யம வாகன சேவை நிகழும்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான தரிசனங்கள் கிடைத்தன. ஶ்ரீவாஞ்சியம் போயிருக்கோம். தஞ்சாவூரில் ஒரு பெருமாளையும் இன்றுவரை பார்த்ததில்லை. குணசீலம் 2,3 முறை போனோம். இன்று காலை சமைக்கும்போது திடீரெனத் தொலைபேசி அழைப்பு. கருவிலியில் சற்குணேஸ்வரர் கோயிலில் நடராஜர் அபிஷேஹம், ஆராதனை நடந்து கொண்டிருந்தது. நண்பர் ஒருவர் (இப்போத்தான் பழக்கம் ஆனவர்) தன் மொபைல் மூலம் அந்த அற்புதக் காட்சியை தீபாராதனை வரை காட்டி அருளினார். நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
பதிலளிநீக்குகருவிலி நடராஜரை 60,70 ஆண்டுகள் முன்னரே தூக்கிச் சென்று விட்டார்கள். சிவபுரம் நடராஜர், பாலூர் நடராஜர், கருவிலி நடராஜர் இவங்கல்லாம் தாய் நாடு திரும்பாமலெயே எங்கேயோ அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
பதிலளிநீக்குவாழ்க நிலம்..
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
திருவாஞ்சியம் தரிசனம் நன்று. தொடரட்டும் பக்தி! நலமே விளையட்டும்.
பதிலளிநீக்கு