வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..
வண்ணத்தமிழ் முருகன் புகழ்பாடி
மண்ணெங்கும் சிறப்பு வழிபாடுகள்
வண்ணமயமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன...
பாரம்பர்யமான நகர்களிலும் சிற்றூர்களிலும்
சிறப்புறும் சந்நிதிகள் திருமுருகனுடையது...
குறிஞ்சிக் கிழான் என்று கோடானுகோடி புகழ் கொண்டிருந்தாலும்
நானிலங்களிலும் நாயகன் முருகனின் திருக்கோயில்கள் இலங்குகின்றன..
கூடும் முகடு எனும் குன்றின் உச்சியிலும் அவனே..
அலை இசை பாடும் அதிர் கடல் ஓரத்திலும் அவனே..
அங்கு இங்கு எனாதபடிக்கு எங்கும்
ஆனந்தப் பிரகாசமாக அவனே!..
நாயகன் அவனுக்கு நாடெங்கும் பல நூறாக திருக்கோயில்கள்..
இருந்தாலும் - சீர் வளர் தஞ்சை மாநகரிலும்
ஆறு திருக்கோயில்கள் சிறப்புற்றுத் திகழ்கின்றன..
மேல அலங்கம், வடக்கு அலங்கம், குறிச்சித் தெரு,
ஆட்டுமந்தைத் தெரு, அரிசிக்காரத்தெரு மற்றும் பூக்காரத்தெரு
- எனும் இந்த ஆறு திருக்கோயில்களும் தஞ்சை மாநகர மக்களால்
ஆறுபடை வீடுகள்!.. - எனக் கொண்டாடப்படுகின்றன..
மேற்கூறிய ஆறு திருக்கோயில்களுள்
வடக்கு அலங்கம், ஆட்டுமந்தைத் தெரு, அரிசிக்காரத்தெருவில்
அமைந்துள்ள மூன்றும் மேற்கு நோக்கிய கோயில்கள்..
மேல அலங்கம் சுப்ரமணியன் மாடக்கோயிலைக் கொண்டவன்..
வடக்கு அலங்கம் கோயிலில் பங்குனியில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..
மாலைக் கதிரவன் கந்தப் பெருமானின் திருமேனி தழுவி நிற்பான்..
அரிசிக்காரத் தெரு முருகன் ஆனை வாகனத்தை உடையவன்...
பூக்காரத் தெரு சுப்ரமணியன் திருச்செந்தூரில் இருந்து வந்து குடியேறியவன்..
இக்கோயில்கள் அன்றி -
கரந்தையில் வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் மேற்கு நோக்கிய
பால தண்டாயுதபாணி பாரம்பர்யச் சிறப்புடையவன்...
கரந்தை பூக்குளம் சாலையில் ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயிலில்
சித்தர்களால் வழிபடப் பெற்ற திருமுருகன் தெற்கு நோக்கியவன்...
மேலும் புறநகர்ப் பகுதிகளான
நவநீதபுரத்தில் பாலசுப்ரமணியன் திருக்கோயில்,
அண்ணா நகரில் இராஜராஜ முருகன் திருக்கோயில்,
மங்களபுரத்தில் கல்யாண முருகன் திருக்கோயில்,
நீலகிரியில் வழிவிடும் முருகன் திருக்கோயில்...
இத் திருக்கோயில்கள் எல்லாம் வரப்பிரசாதமானவை..
இவற்றுள் தஞ்சை மாநகருக்குள் இலங்கும் ஆறு கோயில்களில் நிகழும்
கந்த சஷ்டி வைபவங்களை இன்றைய பதிவில் காணலாம்..

ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயில்..
மேல அலங்கம்..
ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயில்..
குறிச்சித் தெரு - கீழவாசல்..
கீழவாசல் குறிச்சித்தெரு முருகன் கோயிலில் இருந்து தான் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை புறப்படுகின்றனர்..
இன்றைய பதிவை அலங்கரிக்கும் படங்களை
Fb வழியாக வழங்கியவர்
திரு. ஞானசேகரன் - தஞ்சாவூர்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
ஆடும் பரிவேல் அணி சேவலென
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே..
-: கந்தர் அநுபூதி :-
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
* * *
பூக்காரத்தெரு மட்டுமே நினைவில் உள்ளது. மற்ற இடங்கள் தெரியவில்லை. கரந்தை, மங்களபுரம் தெரியும்.
பதிலளிநீக்குமுருகனைத் தரிசித்துக் கொண்டேன்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
முருகா சரணம்..கந்தா சரணம்...
பதிலளிநீக்குஅருள் முகமாம் முருகனின் அழகு முகதரிசனம் மிக சிறப்பு...
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி முருகனின் தரிசனம் கண்டேன் வாழ்க நலம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நான் பார்த்த கோயில்களை இன்று உங்கள் பதிவு மூலமாகக் கண்டேன்.நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையிர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குஎம்பெருமான் முருகனின் தரிசனம் படங்களுடன்... அழகிய பகிர்வாய்.
அருமை ஐயா...
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நன்றி ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கரந்தையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் திட்டக்குடியில் இருப்பதா அங்கு சென்றிருக்கிறோம்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதாங்கள் சொல்வதே.. கரந்தை எனப்படும் கரந்தட்டாங்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில் தான்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தஞ்சையில் இத்தனை முருகன் கோயில்களா? இனிமேல் தஞ்சை வந்தால் செல்ல வேண்டும். தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் அண்ணா..
நீக்குஇதில் குறிப்பிடப்படாத சில கோயில்களும் உள்ளன..
அவசியம் தரிசனம் செய்யுங்கள்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மிக அருமையான பதிவு... விரத காலத்துக்கு ஏற்ப போட்டிருக்கிறீங்க... முருகா சரணம்!!!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கந்தசஷ்டி விழாவில் கந்தபுராணம் படித்து முடிப்பேன். கோவில் சென்று வழிபாடு செய்வேன் நாளும். இங்கு அயல் நாட்டில் வந்து இன்னும் கோவில்களுக்கு செல்லவில்லை மகன் வீட்டிலிருந்து வெகு தூரத்தில்
பதிலளிநீக்குகோவில் இருக்கிறது கூட்டி செல்வதாய் சொல்லி இருக்கிறான்.
உங்கள் பதிவில் முருகன் கோவில்களை கண்டு மகிழ்ச்சி.
அன்புடையீர்..
நீக்குவிரைவில் அந்தக் கோயில்களைத் தரிசித்து பதிவில் வழங்குங்கள்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
செவ்வாயும் அதுவுமாக, கந்தன் திருக்கோலம் கண்டேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்கு'வந்த வினையும்', 'ஆடும் பரிவேல்' பாடல்களை ரசித்தேன். அருமை. 'சேவலெனப்' என்று 'ப்' வரவேண்டாமோ?
அன்புடையீர்..
நீக்குசில சமயங்களில் காதாரக் கேட்டு மனதில் பதிந்த வரிகளைப் பதிவில் இடும்போது ஒலிக் குறிப்புகளினால் இப்படி ஆகிவிடுகின்றது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
முருகதரிசனம் அருமை!
பதிலளிநீக்குகணினிப் பிரச்சனையால் இடையில் வர இயலாமல் போனது. இன்னும் தொடர்கிறது பிரச்சனை. இடையிடையே அது வேலை செய்யும் போது கருத்துகள் இட முயற்சி