இன்று புரட்டாசி மாதத்தின்
நான்காம் சனிக்கிழமை..
இன்றைய பதிவில்
பேயாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் திகழ்கின்றன..
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று..(2282)
என்னாழி வண்ணன் பாலின்று..(2282)
மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தந்துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து..(2284)
நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமனக்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்
கண்ணனையே காண்க நங்கண்..(2289)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலியால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்..(2299)
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான் தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு..(2302)
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்கு தீநீருருவும் ஆனான் பொருந்தும் சுடராழி
ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது..(2305)
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன்..(2313)
கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண்சங்கம்
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் செய்ய
படைபரவ பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயன் அவற்கு..(2317)
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவம்
தானே தவவுருவும் தாரகையும் தானே
எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து
இருசுடரும் ஆய இறை..(2319)
இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்..(2320)
உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
நாடு நலம் பெறுதற்கு
நாராயணன் திருவடிகள் காப்பு
ஓம் ஹரி ஓம்
* * *
அன்பின்ஜி
பதிலளிநீக்குகாலையில் பக்தி கவசங்களுடன் அழகிய படங்களும் காட்சி வாழ்க நலம்.
பெருமாள் தரிசனம் நாளை காலை செய்ய நல்ல பதிவு.
பதிலளிநீக்குபாசுரபகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
ஓம் நமோ நாராயணா....
பதிலளிநீக்குதற்போது திவ்யப்பிரபந்தம் தினமும் படித்துவருகிறேன். உங்களால் கூடுதலாக ஒரு பதிகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குபடங்களுடன் திருப்பாசுரம் அருமை ஐயா...
பதிலளிநீக்குக்ரோம் வேலை செய்யாமல் போனதால் விடுபட்டுப் போன பதிவு சகோ...பேயாழ்வாரின் பாசுரங்களுடன் அருமை
பதிலளிநீக்குகீதா
ஒரேமாதிரி பின்னூட்டம் எழுதப் பிடிக்கவில்லை வாழ்த்துகள்
பதிலளிநீக்கு