நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 18, 2017

இன்பத் தீபாவளி

மகிழ்ச்சியும் நிம்மதியும் 
அனைவருக்கும் ஆகட்டும்.. 

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!.. 
* * *


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தரும் தான்!..
-: பழம்பாடல் :-


நெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலாஒளிர் 
பொற்றடம் புயம் நான்கும் பொருந்துறப் 
பெற்றெம்மான் அருளால் பிரம்பு ஒன்றுகைப்
பற்றும் நந்தி பரிவொடு காப்பது!..
-: கந்த புராணம் :-


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணம் அறுமே..(1/10)
-: ஞானசம்பந்தப்பெருமான் :-


தூண்டு சுடரனைய சோதி கண்டாய் 
தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதமெலாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே!..(6/23)  
-: அப்பர் பெருமான் :-


கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் எது என்அம்மே புவி ஏழையும் பூத்தவளே!..(012)  
-: அபிராமி பட்டர் :-


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன்கையெழுத்தே!..(40) 
-: அருணகிரியார் :-


மாரில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோத்தும்பீ!.. (1683)
-: திருமங்கையாழ்வார் :- 

ஸ்ரீநாராயணன் - மேல்கோட்டை
கங்கைநீர்பயந்தபாத பங்கயத் தெம்மண்ணலே
அங்கையாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்
மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேய மாயனே!.. (0775)
-: திருமழிசையாழ்வார் :- 


கடைந்தபாற்கடல் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்து இராமனாய்
இடைந்தமேழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்தமால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினே!.. (0832)
-: திருமழிசையாழ்வார் :-


அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர்க் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக் கென்றும்
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..  
***

ஏர் பிடிக்கின்ற உழவர் முதற்கொண்டு
எல்லை காக்கின்ற வீரர் வரைக்கும்
எல்லாரும் எல்லா நலன்களையும்
பெற்று வாழ்ந்திட வாழ்த்துவோம்!.. 

நாடு வாழ வேண்டும்.. நன்மை எல்லாம் சூழ வேண்டும்..
தேசம் திகழ வேண்டும்.. தீமையெல்லாம் அகல வேண்டும்..

.
மத்தாப்புகளும் வெடிகளும் 
தீபாவளியின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமான 
கருத்துகளை உபதேசம் செய்து 
கொண்டிருக்கின்றனர்...

தீபாவளி வெடிகளுக்கு
ஒட்டு மொத்தமாக தடை விதிக்க வேண்டும் 
என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்..

எதிர்மறையான கருத்துடையோர்கள்
ஒன்றுகூடிக் கூக்குரலிடுகின்றனர்.. 

இதனால் சுற்றுசூழல் மாசுபடுகின்றது..
சிறார்களும் முதியோர்களும்
வீட்டு விலங்குகளும்
பெருத்த அவதிக்குள்ளாகின்றார்கள்
என்றெல்லாம்!..

எந்தக் காலத்தில் 
சிறார்களும் முதியோர்களும் 
இல்லாமல் இருந்தனர்!..

எந்தக் காலத்தில் 
ஆடு மாடு நாய் பூனை போன்ற சிற்றுயிர்கள் 
மனிதனோடு இல்லாமல் இருந்தன!..

சுற்றுச் சூழலைக் காக்கும் உணர்வு மற்றெவரையும் விட
உண்மையான சைவ வைணவ சமயத்தினருக்கு
மிக அதிகமாகவே உண்டு..

நல்ல சிந்தனையும் செயல்களும்
உற்சாகமும் மகிழ்ச்சியும்
எல்லாரையும் வாழ வைக்க வல்லவை..


இந்நிலையில்,
இயன்றவரைக்கும் நாமும் பாதுகாப்புடன் இருப்போம்.. 
 அனைத்துயிர்களையும் சுற்றுச்சூழலையும் காத்திடுவோம்..

தீமைகளின் அழிவைக் காட்டும்
தீபாவளித் திருநாளை 
மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்..


நாமும் மகிழ்வோம்..
பிறரையும் மகிழ்விப்போம்!.

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *  

24 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனைத்துலகத் தமிழர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா சென்னை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 2. அழகிய காட்சிகளுடன்....
  இன்றைய பொழுது...
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 3. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 4. மனதில் நிற்கும் ஆன்மீகப் பாடல்கள்....இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 5. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மிக அருமை... எந்தாப்பெரிய நந்தி...

  படிக்கும் காலத்தில் பாடமாக்கி பின்னர் மறந்து போய் விட்ட "உண்ணாமுலையை"... நினைவுபடுத்தி விட்டீங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அப்பாவி!..

   நீங்கள் தஞ்சாவூருக்கு வந்திருக்கின்றீர்களா!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. துரை அண்ணன் நான் இந்தியாவுக்கே இன்னும் வரவில்லையாக்கும்:)..

   நீக்கு
 7. தீபாவளி திருநாள் பதிவு மிக அருமை.
  எங்களுக்கு இன்று தான் தீபாவளி.
  வாழ்த்துக்கள்.

  பாடல் பகிர்வு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்
   தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உறவுக்கும் நட்புக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. இந்த ஆன்மீக இறை பாடல்கள் நினைவில் இஉந்தா இல்லை ஏதாவது ரெஃபெரென்ஸ் இருக்கிறதா. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தேவாரப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வைத்திருக்கின்றேன்.. திவ்யப் பிரபந்தப் பாடல்களை மட்டும் தேடி எடுத்துக் கொள்வேன்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. அழகிய படங்களுடன்...

  மகிழ்வான வாழ்த்துகளுக்கு ...நன்றி பல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. "உண்ணாமுலை" பாடலில் 'மழலைம் முழவதிரும்'-ஏதேனும் தவறு இருக்கிறதா? முழவு அதிரும் - சரி. மழலைம்-என்ன?

  பதிலளிநீக்கு