நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 02, 2017

என்றென்றும்..


பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!..

1893 ஏப்ரல் மாதத்தில் பம்பாயில் இருந்து கடல் வழியாகப் புறப்பட்டு,
மே மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தைச் என்றடைந்தார்.. 

அப்துல்லா சேத் என்பவருடைய வழக்கில் வாதாடுவதற்குத் தான் - காந்தி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு வந்திருக்கின்றார்..

அதற்கடுத்த ஒருவாரத்தில் -

நிறவெறி மிகுந்திருந்த தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து பிரிட்டோரியா எனும் இடத்திற்குப் புகைவண்டியில் புறப்பட்டார் -

அவரது கையில் முதல் வகுப்பு பயணச்சீட்டு!..

பயணம் தொடங்கியபோது -.இரவு ஒன்பது மணி..

வழியில் புகைவண்டி நின்ற இடம் - மாரிட்ஸ்பர்க்..

நின்றிருந்த வண்டியில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அமர்ந்திருந்த பெட்டியில் பயணிக்க வந்தான் ஒருவன்..

தான் பயணம் செய்ய இருக்கும் முதல் வகுப்புப் பெட்டியில்
கறுப்பன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆத்திரம் பொங்கியது.

திரும்பிச் சென்று முறையீடு செய்தான்..

அதன்பேரில் ரயில் நிலைய அதிகாரிகள் வந்தனர்..

நீர் சாமான்கள் இருக்கும் வண்டிக்குச் செல்ல வேண்டும்!..

என்னிடம் தான் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கின்றதே!..

அதைப் பற்றி அக்கறை இல்லை.. நீர் சாமான்கள் இருக்கும் வண்டிக்குச் செல்ல வேண்டும்!..

நான் இந்த வண்டியில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றேன்.. எனவே, இதில் தான் பயணம் செய்வேன்!..

நீர் இதில் போகக்கூடாது.. வண்டியிலிருந்து நீர் இறங்கவில்லையானால் - உம்மைக் கீழே தள்ளுவதற்காகப் போலீஸைக் கூப்பிடவேண்டியிருக்கும்!..

அழைத்துக் கொள்ளும்!.. நானாக வண்டியிலிருந்து இறங்க மாட்டேன்!..

இந்த வார்த்தைகளுக்கு அப்புறம்,

உடனடியாக வந்த போலீஸ்காரரன் - காந்திஜியின் கையைப் பிடித்து இழுத்து வண்டியிலிருந்து வெளியே தள்ளினான்..

காந்திஜி வைத்திருந்த பொருட்கள் வெளியே வீசப்பட்டன..

நடைமேடையில் - தனது பொருட்களுடன் காந்திஜி கிடக்க -
அந்த ரயில் வண்டி புறப்பட்டுச் சென்று விட்டது..

இரவுப் பொழுதில் கடுங்குளிர்..
வெளிச்சம் அதிகமில்லாது இருக்கின்றது - பயணிகள் ஓய்வு அறை..

அவமானப்படுத்தப்பட்ட - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஓய்வு அறைக்குள் சென்று அமர்கின்றார்..

உறக்கம் வரவில்லை.. உறங்கவும் தோன்றவில்லை..

மறுநாள் - பொழுது விடிகின்றது..

விடிந்த பொழுது -
அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்திற்கும் சேர்த்தே விடிந்தது..

நிறத் துவேஷம் எனும் கொடிய நோயின் 
வெளி அறிகுறியை மட்டுமே உணர்ந்த தருணம் - அது!.. 
- என்று மகாத்மா குறிக்கின்றார்..


அன்பு எங்கே இருக்கின்றதோ - அங்கே கடவுள் இருக்கின்றார்.
அன்பு எப்போதும் எதையும் கேட்காது. கொடுக்கத்தான் செய்யும். 
அன்பு எப்போதும் வன்மம் கொள்ளாது பழி வாங்காது.


நிறவெறி மிகுந்திருந்த தென்னாப்பிரிக்காவில்
தனக்குள்ள உரிமையைப் போராடிப் பெற்று
பிறருக்கும் வழங்கிய
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று!..
* * *


மாமனிதர்
லால் பகதூர் சாஸ்திரி.. 
(02 -10 - 1904 . . . 11 - 01 - 1966)



பாரதத் திருநாட்டின் 
இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்தவர்
லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்..

அவர் - முன்னதாக
ரயில்வே அமைச்சராக பதவி வகித்தபோது
1956 நவம்பர் 23 அன்று
அரியலூருக்கு அருகில் நிகழ்ந்த ரயில் விபத்திற்குத் 
தார்மீக பொறுப்பேற்று பதவி விலகிய உத்தமர்..

அவருக்குச் சொந்தமாக வீடு கூடக் கிடையாது.. 
கடைசி காலத்தில் கார் ஒன்றினை வாங்கினார்.. 

அந்த காருக்கான கடனைத் தான் 
தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்..
* * *


பெருந்தலைவர்
காமராஜர்.. 
(15 - 07 - 1903 . . . 02 - 10 - 1975)


  




பெருந்தலைவர் காமராஜர்..
ஏழைப்பங்காளர் என்று புகழப்பட்டவர்..

தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்
கல்விக்கண் கொடுத்தவர்..

ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து
ஏழையாகவே போய்ச்சேர்ந்த கர்மவீரர்..
* * * 


அப்பெருமக்களை
என்றென்றும் சிந்தையில் கொண்டு 
ஒரு திருவிளக்கினை ஏற்றி வைப்போம்!..
* * *

வாழ்க நலம் 
* * * 

5 கருத்துகள்:

  1. உதாரணத் தலைவர்களைப் போற்றுவோம். இப்போது இவர்களைப் போல தலைவர்களின்றி நாடு தவிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    மூன்று அறிஞர்களின் நன்னாள் இன்று இவர்களால் பெருமை வாய்த்தது இந்தியாவுக்கு.....

    பதிலளிநீக்கு
  3. அருமையான தலைவர்கள்! அவர்களின் பிறந்த நாள், மற்றொரு தலைவரின் மறைவு நாள்!! மனதில் நிற்கும் தலைவர்கள்...இது போன்ற தலைவர்கள் இனி வருவார்களா என்று ஆதங்கப்படும் நிலைமை....

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவரகள்
    போற்றுவோம் வணங்குவோம்

    பதிலளிநீக்கு
  5. இவர்களால் இந்த நாள் பெருமை பெறுகிறது

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..