இன்று மங்களகரமான அக்ஷய திரிதியை..
நல்லனவற்றைச் செய்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்வதற்கு உகந்த நாள்...
இன்று செய்யக்கூடிய
எந்தக் காரியமும் அதன் பலனும் நம்மைத் தொடர்ந்து வரக்கூடியவை என்பது ஐதீகம்...
எனவே,
நல்லனவற்றை சிந்தையில் கொண்டு
நற்செயல்களைச் செய்வது நன்மை அளிப்பதாகும்....
இன்றைய தினத்திலிருந்து
மதுரையம்பதியில் சித்திரைத் திருவிழா தொடங்குகின்றது...
எங்கெங்கும் நலமே விளைவதற்கு
அன்னை மீனாக்ஷி நல்லருள் புரிவாளாக...
நல்லனவற்றைச் செய்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்வதற்கு உகந்த நாள்...
இன்று செய்யக்கூடிய
எந்தக் காரியமும் அதன் பலனும் நம்மைத் தொடர்ந்து வரக்கூடியவை என்பது ஐதீகம்...
எனவே,
நல்லனவற்றை சிந்தையில் கொண்டு
நற்செயல்களைச் செய்வது நன்மை அளிப்பதாகும்....
இன்றைய தினத்திலிருந்து
மதுரையம்பதியில் சித்திரைத் திருவிழா தொடங்குகின்றது...
எங்கெங்கும் நலமே விளைவதற்கு
அன்னை மீனாக்ஷி நல்லருள் புரிவாளாக...
தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!...
-: அபிராமி பட்டர்:-
வாழ்க நலம்..
ஃஃஃ
அன்பின் ஜி
பதிலளிநீக்குகாலையில் அழகிய தரிசனம் வாழ்க நலம்.
மீனாக்ஷி அருள் புரியட்டும். எங்கும் எப்போதும் நன்மையே விளையட்டும். இந்த அக்ஷய திரிதியை அனைவருக்கும் சர்வ மங்களங்களைக் கொண்டு வரட்டும்.
பதிலளிநீக்குகுட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார்... முதற்கண் அட்சயதிரிதியை வாழ்த்துகள். நல்ல எண்ணங்கள் இன்னும் பெருகட்டும்.
பதிலளிநீக்குமதுரை சித்திரைத்திருவிழா தொடக்கமா? அந்த ஜாலியான நாட்கள் நினைவுக்கு வருகின்றன.. உண்ணும் விழா!
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குஅட்சயத்ரியதை வாழ்த்துகள். எங்கும் அமைதி நிலவட்டும். மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் பொறாமை குணத்தினை விடட்டும். நல்லதே நடக்கட்டும்.
அருமை
பதிலளிநீக்குநல்லதையே செய்வோம்
என்றும்..
பதிலளிநீக்குஎங்கும்...
நலம் வாழட்டும்..
நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். அட்சயதிரிதியை வாழ்த்துகள்! எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்து மகிழவேண்டும். நல்லதே நடக்க வேண்டும்.
பதிலளிநீக்குதுளசி: சித்திரைத் திருவிழா மதுரையில் இருந்த நினைவுகள்...
கீதா: படங்களும் அருமை சித்திரை திருவிழா பதிவுகள் படங்கள் வரும் இல்லையா அண்ணா?!!
வாழ்க வையகம்!
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்!
சித்திரை திருவிழா ஆரம்பிக்கிறதா?
அன்னை மீனாட்சி அனைவருக்கும் நல்லது செய்யட்டும்.
எல்லோர் இல்லங்களில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட வேண்டும்.
“நாமெல்லாம் வாழ்க “ என்றுதானே சொல்லோணும்:)).. இது என்ன “நலமெல்லாம் வாழ்க?:)”.. கர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குஅன்பர் என்பவர்க்கே கனம் தரும் - இங்கு கனம் என்பது பெருமையைக் குறிக்கிறது.
பதிலளிநீக்குபூங்குழலாள் - இது எழுத்துப்பிழையாக பூங்குலாள் என்று வந்துள்ளது.
இந்த அக்ஷயத்ரிதியையை, வெறும் தங்கம் வாங்கும் நாளாக வியாபாரிகள் மாற்றிவிட்டனர்.