நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை
பந்தாடு மங்கையர்
செங்கயற் பார்வையிற் பட்டுழலும்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்வாய்
செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ்
திருத்தணிக் குன்றில் நிற்கும்
கந்தா இளங்குமரா
அமராவதி காவலனே.. 79..
-: கந்தரலங்காரம் :-
நன்றி கௌமாரம்
செம்மையான வேலாயுதத்தைத் தாங்கி அருளும் பெருமானே!
பந்துகளுடன் விளையாடுகின்ற அழகிய பெண்களின் கயற் கண்களில்
அடியேன் அகப்பட்டு உழல்கின்ற கவலையை - இன்னலைப் போக்கிக் காத்திட வேணும்..
பூங்கொத்துகளுடன் கூடிய கடம்ப வனம் சூழ்ந்திருக்கின்ற
திருத்தணி மலையின் மீது நின்றிருக்கின்ற கந்தனே குமரனே..
வானுலகத்தின் அமராவதி நகரினைக் காத்தருள்கின்ற பெருமானே!..
(தஞ்சையம்பதி)
-::-
முருகா முருகா
ஓம் நம சிவாய
**
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவெள்ளி பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. கந்தரலங்கார பாடலும், அதற்கு தங்களின் விளக்கமும் நன்றாக உள்ளது. முருகன் அனைவருக்கும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.முருகா சரணம். 🙏
வேலும், மயிலும், சேவலும் துணை. 🙏.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா..
வெள்ளி நாளில் முருகன் பாடல் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குபாடல் விளக்கம் நன்று.
இன்று குன்றக்குடி முருகன் தலம் பற்றி படித்தேன். நேரடியாக இத்தலம் தரிசிக்கவில்லை.
ஓம் முருகா சரணம்.