நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 23, 2025

சஷ்டி 2

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வியாழக்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே..15

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.. 21
கந்தரனுபூதி


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ... அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..