நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 18, 2025

அங்கும் இங்கும்

            

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
கிழமை


முருகப் பெருமானின் திருக்கல்யாண  திருக்கோலத்தில் வள்ளி தெய்வானை என, இரு தேவியருடன் தரிசிக்கின்றோம்..

சரி..
வள்ளி எந்தப் பக்கம்?.. தெய்வானை எந்தப் பக்கம்?..

முருகனை வள்ளி நாயகி தேவகுஞ்சரி சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கிறதா?..

இல்லை எனில் உங்களுக்கு விவரங்கள் ஏற்கனவே தெரிந்திருக்கும் போல் இருக்கிறது.

இருப்பினும் 
மகிழ்ச்சியுடன் இந்தப் பதிவு..

முருகனின் வலப் பக்கம் வள்ளி  இடப் பக்கம் தெய்வானை. அதாவது. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும் குறிப்பவர்கள். 
முருகப் பெருமான் ஞான சக்தி..

வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.

வள்ளியின் திருக்கரத்தில்  பூவுலகத்தின்  தாமரை மலர் இருக்கிறது. தெய்வானையின் திருக்கரத்தில் தேவலோகத்தின் நீலோத்பல மலர். 

முருகப் பெருமானின் வலக் கண்ணை சூரியனாகவும், இடக் கண்ணை சந்திரனாகவும் சொல்வது மரபு. அவனுக்கு தந்தையைப் போன்று நெற்றிக் கண்ணும் உண்டு.

வலப்புறத்தில் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்கும். அதே போல, இடப்புறத்தில் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்கும். 

அதனால், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு  எந்நேரமும் அகலாத துணையாய் அவன் இருப்பான் என்பது ஐதீகம்..

தாமரை மலர் பாரத நாட்டின் தேசிய மலர்.. நீலோத்பல மலர் இலங்கையின் தேசிய மலர்..

Fb ல் கிடைத்ததை என்னளவில் ஒழுங்கு செய்துள்ளேன்..

 நன்றி ஓதிமலை ஆண்டவர்.

சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..